திருக்குறள் |
---|
நூல் வெளி
• திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். • எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார். • வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு • திருக்குறள் அறத்துப்பால் பொருட்பால். இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. • "திருக்குறளில் இல்லாததும் இல்லை. சொல்லாததும் இல்லை" என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. • திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. • நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. |
பாரதியார் |
---|
நூல் வெளி
• இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார். • அவரது இயற்பெயர் சுப்பிரமணியன். • இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர். • எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர். • தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். • மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர். • நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர். • பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார். |
வரிசை மாறியுள்ன சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக. |
---|
1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.
விடை - சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். 2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது. விடை - பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது. 3. மிகப்பெரிய சாண்டியாகோ மீளைப் பிடித்தார் விடை - சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார். 4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை. விடை - இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி. |
சொல்லும் பொருளும் |
---|
• திங்கள் - நிலவு
• கொங்கு- மகரந்தம் • அலர் - மலர்தல் • திகிரி - ஆணைச்சக்கரம் • பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில் • மேரு - இமயமலை • நாமநீர் - அச்சம் தரும் கடல் • அளி - கருணை • காணி - நில அளவைக் குறிக்கும் சொல் • மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள் • சித்தம் - உள்ளம். • கடல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத் திரட்டுக - ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி என்பனவாம். 1) கதிரவனின் மற்றொரு பெயர் அ) புதன் ஆ) ஞாயிறு இ) சந்திரன் ஈ) செவ்வாய் [விடை : ஆ) ஞாயிறு] 2) திகிரி என்பது குறிக்கும் பொருள் A) நிலவு B) மகரந்தம் C) மலர்தல் D) சக்கரம் [விடை : D) சக்கரம்] 3) நாம என்னும் சாெல் உயர்த்தும் பொருள் A) அச்சம் B) கருணை C) மலர்தல் D) சக்கரம் [விடை : A) அச்சம்] 4) 'கிணறு' என்பதைக் குறிக்கும் சொல்.... ஆ) கேணி அ) ஏரி இ) குளம் ஈ) ஆறு [விடை : ஆ) கேணி] 5) 'சித்தம்' என்பதன் பொருள் அ) உள்ளம் ஆ) மணம் இ) குணம் ஈ) வனம் [விடை : ஆ) உள்ளம்] 6) மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் அ) அடுக்குகள் ஆ) கூரை இ) சாளரம் ஈ) வாயில் [விடை : அ) அடுக்குகள்] |
கலைச் சொல் அறிவோம் |
---|
• கண்டம் - Continent
• தட்பவெப்பநிலை - Clinate • வானிலை – Weather • வலசை - Migration • புகலிடம் - Sanctuary • புவிஈர்ப்புப்புலம் - GravitationalField • கப்பல் பறவை - Frigate bird |
Book Back பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல் |
---|
1) "வெண்குடை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வெண் + குடை ஆ) வெண்மை + குடை இ) வெம் + குடை ஈ) வெம்மை + குடை [விடை : ஆ) வெண்மை + குடை] 2) 'பொற்கோட்டு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) பொன் + கோட்டு ஆ) பொற் + கோட்டு இ) பொண் + கோட்டு ஈ) பொற்கோ + இட்டு [விடை : அ) பொன் + கோட்டு] 3) கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) கொங்குஅலர் ஆ) கொங்அலர் இ) கொங்கலர் ஈ) கொங்குலர் [விடை : இ) கொங்கலர்] 4) அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) அவன்அளிபோல் ஆ) அவனளிபோல் இ) அவன்வளிபோல் ஈ) அவனாளிபோல் [விடை : ஆ) அவனளிபோல்] 5) வானிலிருந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது A) வானில் + லிருந்து B) வானில் + இருந்து C) வானிலில் + இருந்து D) வானிலில் + லிருந்து [விடை : B) வானில் + இருந்து] 6) மாமழை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது A) மா + மழை B) மாம் + மழை C) மா + அழை D) மாம் + அழை [விடை : A) மா + மழை] 7) மேல் + நின்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது A) மேனின்று B) மேல்நின்று C) மேன்நின்று D) மேன்இன்று [விடை : A) மேனின்று] 8) அம்+கண் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது A) அம்கண் B) அங்கண் C) அகக்கண் D) அங்கண் [விடை : B) அங்கண்] 9) நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) நன் + மாடங்கள் ஆ) நற் + மாடங்கள் இ) நன்மை + மாடங்கள் ஈ) நல் + மாடங்கள் [விடை : இ) நன்மை + மாடங்கள்] 10) நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) நிலம் + இடையே ஆ) நிலத்தின் + இடையே இ) நிலத்து + இடையே ஈ) நிலத் + திடையே [விடை : ஆ) நிலத்தின் + இடையே] 11) முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) முத்துசுடர் ஆ) முச்சுடர் இ) முத்துடர் ஈ) முத்துச்சுடர் [விடை : ஈ) முத்துச்சுடர்] 12) நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) நிலாஒளி ஆ) நிலஒளி இ) நிலாவொளி ஈ) நிலவுஒளி [விடை : இ) நிலாவொளி] 12) இளமை + தென்றல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது A) இளமை தென்றல் B) இளமைதென்றல் C) இளந்தென்றல் D) இளம்தென்றல் [விடை : C) இளந்தென்றல்] 13) 'தட்பவெப்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) தட்பம் + வெப்பம் ஆ) தட்ப + வெப்பம் இ) தட் + வெப்பம் ஈ) தட்பு + வெப்பம் [விடை : அ) தட்பம் + வெப்பம்] 14) 'வேதியுரங்கள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) வேதி + யுரங்கள் ஆ)வேதி + உரங்கள் இ) வேத் + உரங்கள் ஈ) வேதியு + ரங்கள் [விடை : ஆ) வேதி + உரங்கள்] 15) தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------. அ) தரையிறங்கும் ஆ) தரைஇறங்கும் இ) தரையுறங்கும் ஈ) தரைய்றங்கும் [விடை : அ) தரையிறங்கும்] 16) வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) வழிதடம் ஆ) வழித்தடம் இ) வழிதிடம் ஈ) வழித்திடம் [விடை : ஆ) வழித்தடம்] |
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக. |
---|
1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் _______ என்று பெயர். (பறவை / பரவை) விடை: பரவை 2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ______ ஆற்றினார். (உரை / உறை) விடை: உரை 3. முத்து தம் _____ காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி) விடை: பணி 4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை _______ (அலைத்தாள் / அழைத்தாள்) விடை: அழைத்தாள் 3. மரங்களை வளர்த்து ______ யைக் காப்போம் ________ உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம். (செயற்கை/ இயற்கை) விடை : இயற்கை, செயற்கை 4. வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் _____ தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை ______ (குறைந்துள்ளது / மிகுந்துள்ளது) விடை : மிகுந்துள்ளது. குறைந்துள்ளது |
தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக. |
---|
(எ.கா.) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.
விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின. 1. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான். விடை: கபிலன் வேலை செய்தார். களைப்பாக இருக்கிறார். 2. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள். விடை: இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள். |
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக |
---|
இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். பனிபடர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கன், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த கொடைகள்.
இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றால் மட்டும் போதாது. அந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் நமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் மட்டுமே நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். 1. எதனை இயற்கை என்கிறோம்? விடை : இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். 2. இப்பத்தியில் உன்ன இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை? விடை :பனி படர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா போன்றவை இயற்கையை வருணிக்கும் சொற்கள் ஆகும். 3. இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்? விடை : நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். 4. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக. விடை : இயற்கை வளம். |
பறவைகள் தொடர்பான பழமொழிகளைத் தொகுத்து எழுதுக |
---|
1. காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு. 2. உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது. 3. வான்கோழி தோகையை விரித்தாடினாலும் மயில் ஆக முடியாது. 4. எச்சிக்கையால் காக்கா விரட்டமாட்டான். 5. கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவள் வானம் ஏறி வைகுண்டம் போனாளாம். 6. சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை. 7. எச்சிச்சோற்றை வீசி எறிந்தா ஆயிரம் காக்கா. 8. இலவு காத்த கிளி போல 9. கோழியைக் கேட்டுட்டுதான் ஏனம் காச்சுவாங்களோ. 10. கோழி மிதிச்சா குஞ்சு சாகும். |
கேட்டும் கண்டும் அறிந்தும் மகிழ்க |
---|
1. இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளைக் கேட்டு மகிழ்க. மாணவச் செல்வங்களே! இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளைக் கேட்டு மகிழ்க. 2. பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றிய காணொலிக் காட்சிகளைக் கண்டு மகிழ்க. மாணவச் செல்வங்களே! பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றி காணொலிக் காட்சிகளைக் கண்டு மகிழ்க. |
Book Back |
---|
|
minnal vega kanitham