Type Here to Get Search Results !

7th புதிய தமிழ் இயல் 5

1

 1.     'ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்” எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் பாரதிதாசன்

2.     "பாண்டியன் பரிசுஎன்ற நூலை எழுதியவர் - பாரதிதாசன்

3.     "அழகின் சிரிப்புஎன்ற நூலை எழுதியவர்  - பாரதிதாசன்

4.     "இசையமுதுஎன்ற நூலை எழுதியவர் – பாரதிதாசன்

5.     இருண்ட வீடுஎன்ற நூலை எழுதியவர்பாரதிதாசன்

6.     குடும்ப விளக்குஎன்ற நூலை எழுதியவர் – பாரதிதாசன்.

7.     கண்ணகி புரட்சிக்காப்பியம்” என்ற நூலை எழுதியவர் - பாரதிதாசன்

8.     பாரதிதாசன் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாடக நூல் - பிசிராந்தையார்

9.     பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது  - மயில்

10.   'மலை'யைக் குறிக்கும் சொல் - வெற்பு

11.   'ஏடெடுத்தேன்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - ஏடு + எடுத்தேன்

12.   'துயின்றிருந்தார்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - துயின்று + இருந்தார்

13.   என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்என்றுரைக்கும்

14.   "வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின்வல்வார்எனத் தொடங்கும் நாலடியார் பாடலின் ஆசிரியர் - சமண முனிவர்

15.   சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் - நாலடியார்

16.   பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் – நாலடியார்

17.   நாலடியார் எத்தனை வெண்பாக்களால் ஆனது – 400

18.   "நாலடி நாலாறுஎன அழைக்கப்படும் நூல் - நாலடியார்

19.   வேளாண் வேதம்என அழைக்கப்படும் நூல் - நாலடியார்

20.   திருக்குறள் போன்றே அறம்பொருள்இன்பம் என்னும் முப்பால் பகுப்புகளைக் கொண்ட நூல் - நாலடியார்

21.   நாளும் இரண்டும் சொல்லுக்குறுதிஎன்ற தொடரில் நால் எனும் சொல் எந்த நூலைக் குறிக்கும் - நாலடியார்

22.   நாளும் இரண்டும் சொல்லுக்குறுதிஎன்ற தொடரில் இரண்டு எனும் சொல் எந்த நூலைக் குறிக்கும்திருக்குறள்

23.   வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது வேந்த ராலும்எனத் தொடங்கும் பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல் - தனிப்பாடல் திரட்டு

24.   ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் - கல்வி

25.   கல்வியைப் போல் செல்வம் வேறில்லை - கேடில்லாத

26.   'வாய்த்தியின்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - வாய் + தீயின்

27.   'கேடில்லைஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - கேடு + இல்லை

28.   எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - எவனொருவன்

29.   உலகில் அழியாத செல்வம் - கல்வி

30.   மகாத்மா காந்தி தாயார் பெயர் - புத்திலிபாய்

31.   காலமறிதல்கல்வி என்னும் இரண்டு அதிகாரங்களை எழுதியவர் - திருவள்ளுவர்

32.   "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றை யவைஎன்ற வரி இடம்பெற்றுள்ள நூல் - திருக்குறள்

33.   "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கூறியவர் - திருவள்ளுவர்

34.   நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தவர் - பாரதியார்

35.   பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்என்று கூறியவர் – பாரதியார்

36.   "கற்க கசடற கற்பவைஎன்று கூறியவர் - திருவள்ளுவர்

37.   திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணியை செய்தவர் - வீமுனிசாமி

38.   திருக்குறளார் என அழைக்கப்பட்டவர் - வீமுனிசாமி

39.   "வள்ளுவர் உள்ளம்” என்ற நூலை எழுதியவர் - வீமுனிசாமி

40.   வள்ளுவர் காட்டிய வழி என்ற நூலை எழுதியவர் - வீமுனிசாமி

41.   திருக்குறளில் நகைச்சுவை என்ற நூலை எழுதியவர்  - வீமுனிசாமி

42.   "உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்என்ற நூலை எழுதியவர் - விமுனிசாமி

43.   "சிந்தனைக் களஞ்சியம்என்ற நூலை எழுதியவர் - விமுனிசாமி

44.   காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் - காலம் அறிதல்

45.   கல்வியில்லாத நாடுவிளக்கில்லாத வீடு

46.   உயர்வடைவோம்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - உயர் + அடைவோம்

47.   இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - இவையெல்லாம்

48.   இளமையில் கல் என்று கூறியவர் - ஒளவையார்

49.   பள்ளிமறு திறப்பு என்னும் கதையை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்

50.   கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர் - சுப்ரபாரதிமணியன்

51.   "பின்னல்என்ற நூலை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்

52.   "வேட்டைஎன்ற நூலை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்

53.   "தண்ணீர் யுத்தம்என்ற நூலை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்

54.   "புத்துமண்என்ற நூலை எழுதியவர் – சுப்ரபாரதிமணியன்

55.   கதை சொல்லும் கதை  என்ற நூலை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்

56.   ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை - ஓரெழுத்து ஒருமொழி

57.   நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர் - பவணந்தி முனிவர்

58.   தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழியின் எண்ணிக்கை - 42

59.   ஓரெழுத்து ஒருமொழியில் இடம்பெற்றுள்ள குறில் எழுத்துகள் - நொ,து

60.   பகுபதாக அமையும் பெயர்ச்சொல் - பெயர்ப்பகுபதம்

61.   பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும் - ஆறு

62.   பெயர்ப்பகுபதத்தின் வகைகள் - பொருள்இடம் ,காலம்சினை ,பண்புதொழில்

63.   பருபதாக அமையும் வினைச்சொல் - வினைப்பகுபதம்

64.   பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்ஆறு

65.   பகுபதத்தில் முதலில் அமைந்து கட்டளைப் பொருளில் வருவதுபகுதி

66.   பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணைபால் ஆகியவற்றையோமுற்றுஎச்சம் ஆகியவற்றையோ காட்டுவது - விகுதி

67.   பகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவதுஇடைநிலை

68.   பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்துசந்தி

69.   இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் - சாரியை

70.   பகுதிவிகுதிசந்திஇடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம்விகாரம்

71.   பகுபத உறுப்புகளாகப் பிரிக்க முடியாத சொல் - பகாபதம்

72.   தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை 42 எனக் கூறும் நூல் – நன்னூல்.

73.   'எழுதினான்என்பதுவினைப்பகுபதம்

74.   காலத்தைக் காட்டும் பகுபத உறுப்புஇடைநிலை

75.   பொருத்துக

          1.    எத்தனிக்கும்முயலும்

          2.    வெற்புமலை

          3.    கழனிவயல்

          4.    நிகர்சமம்

76.   பொருத்துக.

          1.    பரிதி - கதிரவன்

          2.    அன்னதோர் - அப்படி ஒரு

          3.    கார்முகில் - மழைமேகம்

          4.    துயின்றிருந்தார் - உறங்கியிருந்தார்

77.   பொருத்துக.

          1.    வைப்புழிபொருள் சேமித்து வைக்கும் இடம்

          2.    கோட்படாஒருவரால் கொள்ளப்படாது

          3.    வாய்த்து ஈயில் - வாய்க்கும்படி கொடுத்தலும்

          4.    விச்சைகல்வி

78.   பொருத்துக

          1.    பெயர்ப்பகாபதம்நிலம்நீர்நெருப்புகாற்று

          2.    வினைப்பகாபதம் - நடவாபடிவாழ்

          3.    இடைப்பகாபதம்மன்கொல்தில்போல்

          4.    உரிப்பகாபதம்உறுதவநனிகழி

79.   பொருத்துக.

          1.    பெயர்ப்பகுபதம்பெரியார்

          2.    வினைப்பகுபதம்வாழ்ந்தான்

          3.    இடைப்பகாபதம்­ - மன்

          4.    உரிப்பகாபதம் - நனி

80.   பொருத்துக

          1.    கோடை விடுமுறைSummer Vacation

          2.    குழந்தைத் தொழிலாளர் – Child Labour

          3.    பட்டம்- Degree

          4.    கல்வியறிவுLiteracy

81.   பொருத்துக.

          1.    நீதி - Morall

          2.    சீருடை - Uniform

          3.    வழிகாட்டுதல் - Guidance

          4.    ஒழுக்கம் – Discipline


கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham