6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 4 (பழமொழி நானூறு) |
---|
ஆசிரியர் குறிப்பு
• இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார். • முன்றுறை என்பது ஊர்ப்பெயர். • அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும். • இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம். நூல் குறிப்பு • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. • நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது. • இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது. • இப்பாடலில் வரும் பழமொழி, 'ஆற்றுணா வேண்டுவது இல்'என்பது. • இதற்குக் 'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா' என்பது பொருள். |
6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 5 (சித்தர் பாடல்) |
---|
பாடல் குறிப்பு
• ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள். • பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள். • நம் பாடப்பகுதிப் பாடலின் ஆசிரியர் கடுவெளிச் சித்தர். • இவர், உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்; எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர். சிறப்புக் குறிப்புகள் • 17.09.1879 இல் பிறந்து, 24.12.1973 இல் மறைந்த பெரியார், தம் வாழ்நாளில் 8600 நாள், 13,12,000 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து, 10,700 கூட்டங்களில் 21,400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றிச் சமுதாயத் தொண்டு ஆற்றினார். • 1970ஆம் ஆண்டு சமுதாயச் சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் 'யுனெஸ்கோ விருது' பெரியாருக்கு வழங்கப்பட்டது. • நடுவண் அரசு 1978ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. |
minnal vega kanitham