நூல்வெளி |
---|
இயல் 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்
• தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். • கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர். • புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும். • இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. |
தெரிந்து தெளிவோம் |
---|
இயல் 7.2 வேலுநாச்சியார்
● வேலுநாச்சியாரின் காலம் 1730-1796 ● வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு 1780. ● ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலு நாச்சியார். |
நூல்வெளி |
---|
இயல் 8.1 பராபரக் கண்ணி
• இப்பாடலை எழுதியவர் தாயுமானவர். •திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர். • இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது. • இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர். • இப்பாடல்கள் 'பராபரக் கண்ணி' என்னும் தலைப்பில் உள்ளன. • 'கண்ணி' என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை. |
நூல்வெளி |
---|
இயல் 8.2 நீங்கள் நல்லவர்
• கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர், கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர். • இப்பாடப்பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. |
நூல்வெளி |
---|
இயல் 8.4 பாதம்
• எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். • நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன. • உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். • இக்கதை தாவரங்களின் உரையாடல் என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. |
minnal vega kanitham