6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 2 (நாலடியார் - சமணமுனிவர்) |
---|
நூல்குறிப்பு
• பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார். • இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது. • அறக்கருத்துகளைக் கூறுவது. • 'நாலடி நானூறு' என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. • இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு. பதினெண்கீழ்க்கணக்கு - விளக்கம் • சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். • பத்துப்பாட்டில் பத்துநூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினெட்டு நூல்கள். • இவற்றை, 'மேல்கணக்கு நூல்கள்' எனக் கூறுவர். • சங்கநூல்களுக்குப்பின் தோன்றியநூல்களின் தொகுப்பு, 'பதினெண்கீழ்க்கணக்கு' என வழங்கப்படுகிறது. • இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன. • பதினெண் என்றால், பதினெட்டு என்பது பொருள். • இந்நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறுவர். • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே. |
6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 2 (பாரதியார்) |
---|
ஆசிரியர் குறிப்பு:
• ஆசிரியர் குறிப்பு: • பாரதியார் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர். • 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்று கொண்டாடப்பட்டவர். • இவர், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். • கனவு காண்பதில் பாரதிக்கு நிகர் பாரதியே. • இந்தப் பாட்டில்தான் என்னென்ன கனவுகள்? அன்று அவை கனவுகள். இன்று அவை நனவாகி உள்ளன. 'வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்'எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி, நம் பாடத்தில் இடம்பெற்றுள்ளது. இவர் வாழ்ந்த காலம் 11.12.1882 முதல் 11.9.1921வரை. |
6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 3 (நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்) |
---|
ஆசிரியர் குறிப்பு:
• நூலாசிரியரின் பெயர் விளம்பிநாகனார். • விளம்பி என்பது ஊர்ப்பெயர்; • நாகனார் என்பது புலவரின் இயற்பெயர். நூல் குறிப்பு : • நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள். • நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள். • ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது. |
Super sir
பதிலளிநீக்குminnal vega kanitham