6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 1 (இராமலிங்க அடிகளார்) |
---|
ஆசிரியர் குறிப்பு
• இராமலிங்க அடிகளார், திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். • இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர். • பெற்றோர் இராமையா-சின்னம்மையார். • ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. • இவர் பாடல்கள் அனைத்தும் 'திருவருட்பா' என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. • சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே. • அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர். • அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர். • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. • வடலூர் சத்திய தருமச்சாலையில், பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட, இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல், தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது. • இவர் வாழ்ந்த காலம் 05.10. 1823 முதல் 30.01.1874 வரை. |
6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 1 (திருக்குறள்) |
---|
ஆசிரியர் குறிப்பு:
• திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். • இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர். • இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. • இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை. • இவர் செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார். நூல் குறிப்பு • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. • இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன. • ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன. • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இந்நூலை முப்பால், பொதுமறை, தமிழ்மறை எனவும் கூறுவர். • திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது. • திருக்குறளில் 'அன்புடைமை', 'இனியவை கூறல் ஆகிய அதிகாரங்கள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன. • திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை • கிறித்து ஆண்டு (கி.பி.) + 31 = திருவள்ளுவர் ஆண்டு. • எடுத்துக்காட்டு: 2013 +31 = 2044 (கி.பி. 2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்) |
6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 1 (உ.வே.சா.) |
---|
சிறப்புக் குறிப்புகள்
• உ.வே.சா. அவர்களின் பெயரால் 1942இல் நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பெசண்ட் நகரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. • உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர். • நடுவணரசு, உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் 2006ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. • தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள் 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர். |
minnal vega kanitham