Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

6th New Tamil Book Unit - 3 & 4 நூல்வெளி & தெரிந்து தெளிவோம்


Unit -3
நூல்வெளி
இயல் 3.1 அறிவியல் ஆத்திசூடி
• "தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்" என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து.
• இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர்.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.
• அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார்.
• எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியீட்டுள்ளார்.
அறிவியல் ஆத்திசூடி என்னும் நூலின் ஒரு பகுதி இங்கத் தரப்பட்டுள்ளது.

தெரிந்து தெளிவோம்.
இயல் 3.3 கணியனின் நண்பன்
• தெரிந்து தெளிவோம்.
சோபியா
• "உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது.
• அந்த ரோபோவின் பெயர் 'சோபியா', மேலும் ஐக்கிய நாடுகள் சபை 'புதுமைகளின் வெற்றியாளர்' என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது.
• உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐ.நா.சபை பட்டம் வழங்குவதும் இதுதான் முதல் முறை.
• என்னைப் போன்ற எந்திரமனிதருக்கு இப்பட்டம் வழங்கப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி"
• மனித முயற்சிகளுக்கு மாற்றாகத் தானே இயங்கும் எந்திரம் தானியங்கி ஆகும்.
• இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம்.
• ஆனால் மனிதர்களைப் போலச் செயல்களை நிறைவேற்றும்" என்று பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் தானியங்கிகளுக்கு விளக்கம் தருகிறது.

Unit -4
நூல்வெளி
இயல் 4.1 மூதுரை (ஒளவையார்)
• இந்நூலின் ஆசிரியர் ஒளவையார்.
• இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
• மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள் சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
• இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.

நூல் வெளி
இயல் 4.2 துன்பம் வெல்லும் கல்வி (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)
எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
• திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

தெரிந்து தெளிவோம்
இயல் 4.3 கல்விக்கண் திறந்தவர் (காமராசர்)
காமராசரின் சிறப்புப் பெயர்கள்
● பெருந்தலைவர்
● படிக்காத மேதை
● கர்மவீரர்
● கருப்புக் காந்தி
● ஏழைப்பங்காளர்
● தலைவர்களை உருவாக்குபவர்
● கல்விக் கண் திறந்தவர் என்று தந்தை பெரியாரால் மனதாரப் பாராட்டப்பட்ட மறைந்த மேனாள் முதல்வர் காமராசர் ஆவார்.
காமராசருக்குச் செய்யப்பட்ட சிறப்புகள்
மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
❖ நடுவண் அரசு 1976இல் பாரதரத்னா விருது வழங்கியது.
❖ காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
❖ சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
❖ ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ஜூலை பதினைந்தாம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

தெரிந்து தெளிவோம்
இயல் 4.4 நூலகம் நோக்கி...
● ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் சீனாவில் உள்ளது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்கள்
● தரைத்தளம் - சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
● முதல் தளம் - குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
● இரண்டாம் தளம் - தமிழ்நூல்கள்
● மூன்றாம் தளம் - கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
● நான்காம் தளம் - பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
● ஐந்தாம் தளம் - கணிதம், அறிவியல், மருத்துவம்
● ஆறாம் தளம் - பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
● ஏழாம் தளம் - வரலாறு,சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகன் நூலகம்
● எட்டாம் தளம் - கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு
நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் சிலர்
அறிஞர் அண்ணா, ஜவஹர்வால் நேரு அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ்
● சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்