Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

சிற்றிலக்கியங்கள்

10th old தமிழ் இயல் 9 நந்திக்கலம்பகம்
ஆசிரியர்குறிப்பு :
• தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு இந்நூலை வழங்கியவரின் பெயரும் ஊரும் அறியப்பெறவில்லை.
நூற்குறிப்பு :
• நந்திவர்மனின் பெருமையைப் போற்றும் நூலாக, இது திகழ்கிறது.
• பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத்தலைவனாகக்கொண்டு பாடப்பெற்ற கலம்பகம் ஆதலின், நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது.
• இந்நூலின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.
• கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல் என்பர்.
• கலம்பகம் என்பது, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
• பலவகைப் பொருள்களைப் பற்றிப் பலவகைப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெறும் நூல் கலம்பகம் எனப்படும்.
• கலம் + பகம் = கலம்பகம்.
• கலம் பன்னிரண்டு; பகம் -ஆறு.
• பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால் (புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பாண், கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம் ) கலம்பகம் என்னும் பெயர் வந்தது எனவும் கூறுவர்.
கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர் யாவர்? இரட்டையர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்