Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

தமிழ் மகளிரின் சிறப்பு

09th தமிழ் இயல் 5 கல்வியில் சிறந்த பெண்கள் (டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்)
முத்துலெட்சுமி (1886 - 1968)
• தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
• இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
• சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.
• சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
• தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர்.
• அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம்,
• 1952 இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

09th தமிழ் இயல் 5 கல்வியில் சிறந்த பெண்கள் (மூவலூர் ராமாமிர்தம்மாள்)
மூவலூர் இராமாமிர்தம் (1883 - 1962)
• தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி ; எழுத்தாளர்; திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்.;
• தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர்.
• தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.
• தமிழகத்தின் அன்னிபெசன்ட் எனப்படுபவர் யார்? மூவலூர் இராமாமிர்தம்
• பெண் விடுதலைக்குப் பாடுபட்ட விடிவெள்ளி யார்? மூவலூர் இராமாமிர்தம்
• மூவலுார் இராமாமிர்தம் அம்மையாரைத் தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று கூறியவர் யார்? அறிஞர் அண்ணா

கருத்துரையிடுக

0 கருத்துகள்