Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

11th தமிழ் இயல் 2 ஐங்குறுநூறு
நூல் வெளி
• ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு.
• மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.
• திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது.
• ஐந்து திணைகளைப் பாடிய புலவர்கள்: குறிஞ்சித்திணை - கபிலர், முல்லைத்திணை - பேயனார், மருதத்திணை ஓரம்போகியார், நெய்தல் திணை அம்மூவனார், பாலைத்திணை - ஓதலாந்தையார்.
• ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
• இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்.
• தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை.
• பேயனார், சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
• இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.

11th தமிழ் இயல் 4 நற்றிணை
நூல் வெளி
• நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவதாகும்;
• 'நல்ல திணை' என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது.
• இது, நானூறு பாடல்களைக் கொண்டது. 9 அடிகளைச் சிற்றெல்லையாகவும் 12 அடிகளைப் பேரெல்லையாகவும் கொண்டது.
• நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.
• இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
• போதனார்: சங்ககாலப் புலவர்.
• நற்றிணையில் 110ஆம் பாடலை மட்டும் பாடியுள்ளார்.
• நற்றிணையின் பேரெல்லை 12 அடி.
• விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டதாக இவரது பாடல் அமைந்துள்ளது.

10th தமிழ் இயல் 4 பரிபாடல்
நூல் வெளி
• பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
• பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார்.
• இந்நூல் "ஓங்கு பரிபாடல்" எனும் புகழுடையது.
• இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.
• உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
• இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.
• ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்