Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

தாயுமானவர் (6th புதிய புத்தகம் இயல் 8 & 8th பழைய புத்தகம்), இராமலிங்க அடிகளார் (பழைய புத்தகம் இயல் 1)

தாயுமானவர் (6th தமிழ் புதிய புத்தகம் இயல் 8)

• பராபரக்கண்ணி பாடலை எழுதியவர் தாயுமானவர்.
• திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர்.
• இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது.
• இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர்.
• இப்பாடல்கள் ‘பராபரக் கண்ணி’ என்னும் தலைப்பில் உள்ளன.
• ‘கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

தாயுமானவர் (8th தமிழ் பழைய புத்தகம்)
ஆசிரியர் குறிப்பு
• பெயர் : தாயுமானவர்.
• பெற்றோர் : கேடிலியப்பர் - கெசவல்லி அம்மையார்.
• மனைவி : மட்டுவார்குழலி.
• ஊர் : நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்).
• நூல் : தாயுமானவர் திருப்பாடல் திரட்டு,
• பணி : திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூலஅலுவலர்.
• காலம் : கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு :
• வாழ்த்தாக இடம்பெற்றுள்ள பாடல், தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் பராபரக்கண்ணி என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
• இந்நூல், தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் ஆனது; கற்பார்க்கு மனத்தூய்மை, பத்திச்சுவை ஆகியனவற்றை ஊட்டும்.
• திருச்சிராப்பள்ளி மலைமீது எழுந்தருளியுள்ள இறைவனான தாயுமானவரின் திருவருளால் பிறந்தமையால், இவருக்குத் தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது.
• தாயுமானவர் நினைவு இல்லம் இராமநாதபுரம் மாவட்டத்து இலட்சுமிபுரத்தில் உள்ளது.

இராமலிங்க அடிகளார் (6th Old Tamil Book)
ஆசிரியர் குறிப்பு
• இராமலிங்க அடிகளார், திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.
• இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.
• பெற்றோர்இராமையா-சின்னம்மையார்.
• ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை.
• இவர் பாடல்கள் அனைத்தும் 'திருவருட்பா' என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
• சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே.
• அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர்.
• அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர்.
• வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.
• வடலூர் சத்திய தருமச்சாலையில், பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட, இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல், தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது.
• இவர் வாழ்ந்த காலம் 05.10. 1823முதல் 30.01.1874வரை.

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham