நாடும் நகரமும் (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 8) |
---|
• நாடு என்பது யாது? சேர சோழ பாண்டிய நாடுகளின் உட்பிரிவு.
• ஊரும் பேரும என்னும் நூலை எழுதியவர்? ரா.பி. சேதுப்பிள்ளை. • முரப்புநாடு என்பது எம்மண்டலத்தைச் சேர்ந்தது? பாண்டிமண்டலத்தைச் சேர்ந்தது. • இப்பொழுது அப்பெயர் பொருணையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையிலுள்ள மற்றொரு சிற்றூர் வல்லநாடு என்னும் பெயருடையது. • செவ்வாய்ப்பேட்டை எவ்வூருக்கருகில் உள்ளது? சேலத்துக்கருகில். • பட்டுக்கோட்டை வட்டத்தில் கானாடும், மதுரங்க வட்டத்தில் தென்னாடும் உள்ளன. • நம்மாழ்வார் பிறந்த ஊர் குருகூர் • ஆழ்வார் திருநகரியின பழைய பெயர் குருகூர் • மாயவரத்திற்கு அருகிலுள்ள கொரநாடு என்னும் ஊரின் சரியான பெயர் கூறைநாடு. • சென்னை: திருமயிலைக்கு அருகேயுள்ள திருவல்லிக்கேணி முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம். • அங்கே பெருமாள் கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருவல்லிக்கேணி ஆயிற்று. • கடற்கரையில் உருவாகும் நகரங்கள் எவ்வாறு பெயர் பெறும்? பட்டினம். • இக்காலத்தில் புதிதாகத் தோன்றும் ஊர்கள் எப்பெயரைத் தாங்கி நிற்கின்றன? நகரம். • சிறந்த ஊர்களைக் குறிக்கும் பெயர் - புரம். • கடற்கரையில் உருவாகும் நகரங்களின் பெயர் பட்டினம். • கடற்கரையில் உருவாகும் சிற்றூர்களின் பெயர் பாக்கம். • புலம் என்பதன் பொருள் நிலம். • மாம்பலம் என்பதன் சரியான வடிவம் மாம்புலம். • குப்பம் எனப்படுவது நெய்தல்நில வாழ்விடங்கள். • தொழில்களால் சிறப்படையும் ஊர்கள் எவ்வாறு பெயர் பெறும்? பேட்டை. • “உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” என்று பாடியவர் கம்பர். |
நாடும் நகரமும் (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 8)
ஜனவரி 01, 2024
0
Tags
minnal vega kanitham