திருமூலர் (திருமந்திரம்) (8th New Tamil Book) |
---|
ஒன்றே குலம் (8th New Book)
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே – திருமூலர் (திருமந்திரம்) திருமூலர் பற்றிய குறிப்பு வரைக i. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ii. பதினெண் சித்தர்களில் ஒருவர் iii. திருமந்திரம் என்ற நூலை எழுதியுள்ளார் திருமந்திரம் குறிப்பு வரைக i. திருமந்திரத்தை இயற்றியவர் திருமூலர் ii. 3000 பாடல்களைக் கொண்ட நூல் இது iii. பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை நூல் நூல்வெளி i. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர். ii. இவர் இயற்றிய திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது. iii. இந்நூலைத் தமிழ் மூவாயிரம் என்பர் iv. இது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. |
திருமூலர் (திருமந்திரம்) (8th Old Tamil Book) |
---|
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே - திருமூலர் ஆசிரியர் குறிப்பு: i. பெயர் - மூலன் என்னும் பெயர், திரு என்னும் பெயரடை பெற்று, அத்துடன் அர் என்னும் மரியாதைப்பன்மையும் பெற்று, திருமூலர் என ஆயிற்று. ii. காலம் - ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி. நூல் குறிப்பு: i. சைவத் திருமுறைகளின் பத்தாவது திருமுறை திருமந்திரம். ii. இதற்குத் "தமிழ் மூவாயிரம்" என்னும் வேறுபெயரும் உண்டு. iii. இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. iv. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது இந்நூலின் புகழ்பெற்ற தொடராகும். v. திருமந்திரப் பாடல் மூன்றாம் தந்திரத்தில் எழுநூற்று இருபத்து நான்கு பாடல்களைக் கொண்டது. |
திருமூலர் |
---|
11th Tamil சித்தர் உலகம்
1. "உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்? திருமந்திரம் 2. "உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? திருமந்திரம் 3. சித்தர்களில் ஆதி சித்தராக கருதப்படுபவர்? திருமூலர் 4. திருமூலர் வாழ்ந்த காலம்? 5ம் நூற்றாண்டு அல்லது 6ம் நூற்றாண்டு 5. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறியவர் யார்? திருமூலர் 6. "ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? திருமந்திரம் 7. தன்னை அறிந்தநிலையில் ஆன்மா தானே தனக்கு தலைவனாய்நிற்கும் என்பது _____ வாக்கு? திருமூலர் 8. "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதே சித்தர் நோக்கம்? திருமூலர் அகரமுதலி வரலாறு (8th Old Book) அகராதி என்ற சொல்லை முதலில் கையாண்டவர்: திருமூலர் (திருமந்திரம் நூலில்) |
Last 10 Year Question Paper |
---|
1. `தமிழ் மூவாயிரம்` என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது? திருமந்திரம் (2016 Gr4)
2. தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது? திருமந்திரம் (2017 G2) 3. தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல் எது? திருமந்திரம் (2022 EO3) 4. திருமந்திரம் நூலின் பாடல் எண்ணிக்கை? மூவாயிரம் (2016 MHC TNPSC) 5. 'திருமந்திரம்' சைவத்திருமுறைகளுள் ______ திருமுறை ஆகும்? பத்தாம் (2016 MHC TNPSC) 6. சைவத் திருமுறைகளில் திருமுறை ______ திருமந்திரம்? பத்தாவது (2017 EO3) 7. திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை (2016 Gr4) 8. ‘மூலன்’ என்னும் இயற்பெயரை உடையவர்? திருமூலர் [2017 G2] 9. சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்? திருமூலர் (2019 Gr4) 10. சித்தர்களில் ஆதி சித்தர் யார் ? திருமூலர் (2022 Gr2) 11. ”ஆதி சித்தராகக்” கருதப்படுபவர் யார்? திருமூலர் (2023 Gr3A) 12. ஒன்றே குலம் ஒருவனே தேவன்' - என்பது எந்நூலின் புகழ்மிக்கத் தொடர்? திருமந்திரம் (2017 EO3) 13. `ஒன்றே குலம் ஒருவனே தேவன்` என்பது ____ நூலின் புகழ்மிக்க தொடர்? திருமந்திரம் (2014 Gr4) 14. "உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே" இப்பாடல் வரி எந்நூலில் உள்ளது? தமிழ் மூவாயிரம் (2013 G3A) 15. 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' என்ற கூற்று யாருடையது? திருமூலர் (2017 EO3) 16. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது? மூன்றாம் தந்திரம் (2018 Gr4) 17. திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் - திருமூலர் (2022 Gr2) 18. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பாடியவர்? திருமூலர் (2022 Gr2) (2022 EO3) 19. விடைத்தேர்க: அகராதி என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல் எது? திருமந்திரம் [2014 G2] 21. உரிய விடையைத் தேர்க: அகராதி என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ள நூல்: திருமந்திரம் (2013 EO3) 22. உரிய விடையைத் தேர்க: அகராதி என்னும் சொல்லை முதன் முதலாக கையாண்டவர் யார்? திருமூலர் (2013 Gr4) 23. “கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று” -எனப்பாடியவர் யார்? திருமூலர் (2022 EO4) |
minnal vega kanitham