Type Here to Get Search Results !

உமறுப்புலவர் & எச்.ஏ. கிருட்டிணனார்

1
எச்.ஏ. கிருட்டிணனார் (9th Old Tamil Book)
ஆசிரியர் குறிப்பு:
• இரட்சணிய யாத்திரிக நூலாசிரியர் எச்.ஏ. கிருட்டிணனார்.
• திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரையிருப்பு என்னும் ஊரில், 1827 ஏப்பிரல் இருபத்து மூன்றாம் நாள் பிறந்தார்.
• இவருடைய தந்தை சங்கரநாராயணர் பெரும்புலவராக விளங்கினார்.
• அன்னையார் பெயர் தெய்வநாயகி அம்மாள்.
• இவர்கள் ரெட்டியாபட்டியில் வாழ்ந்தவர்கள்.
• பிறகு, கரையிருப்பு சென்று வாழ்ந்த கிருட்டினனார், முப்பதாவது அகவையில் தம்பெயரை எச்.ஏ. கிருட்டினனார் என வைத்துக்கொண்டார்.
• கிருட்டினனார் தந்தையிடம் தமிழிலக்கியங்களையும் மாணிக்க வாசகத்தேவரிடம் இலக்கணங்களையும், பிலவணச் சோதிடரிடம் வடமொழியையும் கற்றார்.
• சாயர்புரம் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
• இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக்குறள் என்னும் நூல்களையும் இயற்றினார்.
• கிறித்தவக் கம்பர் எனப் புகழப்பெற்ற பெருங்கவிஞர் 1900 பிப்ரவரி மூன்றாம் நாள் இயற்கை எய்தினார்.
நூற்குறிப்பு:
• இரட்சணியயாத்திரிகம் என்பதன் பொருள் (உயிர், தன்னைக் காக்க வேண்டி) இறைவனை நோக்கிச் செல்லும் பயணம் என்பது.
• ஆன்ம ஈடேற்றத்தை விரும்புபவர் என்பதும் பொருந்தும்
• ஜான் பன்யன் என்னும் புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியர் இயற்றிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்னும் நூலைத்தழுவி, ஹென்றி ஆல்பர்ட்டு கிருட்டினனார் வழிநூலாகத் தமிழில் இரட்சணிய யாத்திரிகம் என்னும் பெயரில் இயற்றினார்.

எச்.ஏ. கிருட்டிணனார் (12th New Tamil Book)
• ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (Pilgrims Progress) எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் படைக்கப்பட்டது.
• இது 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம்.
• இது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது.
• இக்காப்பியத்தின் குமார பருவத்தில் உள்ள இரட்சணிய சரித படலத்தில் இடம்பெறும் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன.
• இதன் ஆசிரியர் எச்.ஏ. கிருட்டிணனார்.
• பிற சமய இலக்கியங்களைப் போலவே கிறித்துவ சமய இலக்கியங்களும் தமிழ் இலக்கிய வளமைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன.
• எச்.ஏ. கிருட்டிணனார் போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
• இவரைக் கிறித்துவக் கம்பர் என்று போற்றுவர்.

உமறுப்புலவர் (10th Old Tamil Book)
ஆசிரியர் குறிப்பு :
• சீறாப்புராணத்தினை இயற்றியவர் உமறுப்புலவர்.
• இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
• அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்.
• நூல் முற்றும் முன்னமே சீதக்காதி மறைந்தார்.
• அவருக்குப்பின், அபுல்காசிம் என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது.
• உமறுப்புலவர் வள்ளல் பெருமக்களை நூலின் பலவிடங்களில் நினைவுகூர்ந்து போற்றுகிறார்.
• இவர் எண்பது பாக்களால் ஆகிய முதுமொழிமாலை என்னும் நூலையும் படைத்தளித்துள்ளார்.
• இவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
நூற்குறிப்பு :

• இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய நூல் சீறாப்புராணம்.
• சீறா -வாழ்க்கை, புராணம் வரலாறு எனப் பொருள்படும்.
• இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது; ஐயாயிரத்து இருபத்தேழு விருத்தப்பாக்களால் ஆனது.
• பாடப்பகுதி விலாதத்துக் காண்டத்தில் உள்ளது.

உமறுப்புலவர் (11th New Tamil Book)
உமறுப்புலவர்
• இசுலாமியத் தமிழ்ப்புவலர் உமறுப்புலவர்
• இவர் எட்டையபுர அரசவைப் புலவர் கடிகைமுத்து புலவரின் மாணவர்,
• வள்ளல் சீதக்காதியின் வேண்டுதலால் சீறாப்புராணத்தைப் பாடியவர்
• நபிகள் நாயகத்தின் மீது “முதுமொழிமாலை” என்னும் நூலை இயற்றியுள்ளார்.
• உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள் வள்ளல் சீதக்காதி, அப்துல் சாகிம் மரைக்காயர்
சீறாப்புராணம்
• இந்நூல் நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது
• இந்நூலை உமறுப்புலவர் வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க பாடினார்.
• இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையான நூலாக விளங்கிறது.
• விலாதத்துக்காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என மூன்று காண்டங்களையும், 92 படலங்களையும், 5027 விருத்தப்பாக்களையும் கொண்டது.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham