Type Here to Get Search Results !

பரிபாடல் [எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள்]

0
பரிபாடல்
• பரிபாடல் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று
• ஓங்கு என்ற அடைமொழி உடைய நூல் பரிப்பாடல்
• எட்டுத் தொகையுள் அகம் புறம் சேர்ந்த நூல்.
• பரிபாடலை தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
• பரிபாடலை தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை
• எட்டுத்தொகையில் அடி அளவால் பெரிய நூல் பரிப்பாடல்
• பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி பேரெல்லை 400 அடி கொண்டது.
• பரிபாடல் நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை 70
• பரிபாடலைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 13.
• முதன் முதலில் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர். (1919)
• பரிபாடலுக்கு பரிமேலழகர் உரை இயற்றியுள்ளார்.
• பரிபாடலின் வேறுபெயர்கள்
i. ஓங்கு பரிபாடல்
ii. இசைப்பாட்டு
iii. பொருட்கலவை நூல்
• இந்நூல் 70 பாடல்களால் ஆனது என்பதை இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது
• பரிபாடல் மொத்தம் 70 பாடல்களை கொண்டுள்ளது
i. திருமால் - 8
ii. முருகன் - 31
iii. கொற்றவை -1
iv. வையை 26
v. மதுரை - 4
• பரிபாடலில் மொத்தம் 22 பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளது.
i. திருமால் -6
ii. முருகன் - 8
iii. வையை - 8
• பரிபாடல் இசைப்பாட்டு வகையைச் சார்ந்த நூல்
• தமிழின் முதல் இசைப்பாடல் நூல் இந்த பரிப்பாடல்.
• வெண்பா ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் ஆசிரியப்பு பாக்களும் பல வகையான அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுப்பதால் பரிப்பாடல் என்று அழைக்கப்படுகிறது.
• பரிபாடல் பாண்டியர்களை பற்றி விரிவாக கூறுகிறது.
• பாண்டிய நாட்டை மட்டும் கூறும் நூல்கள் = பரிபாடல், கலித்தொகை
• பரிபாடலில் திருமால், முருகன் போன்ற கடவுள்களின் புராணக் கதைகளும் நிரம்பியுள்ளது.
• தெய்வங்கள் அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகை நூல் பரிப்பாடல்.
• வையைப் பற்றிய பாடல்கள் அகம் சார்ந்தன.
• பரிபாடல் என்பது தொல்காப்பியர் கூறும் பாவகையுள் ஒன்று
• "கின்று" என்னும் காலம் காட்டும் இடைநிலை முதலில் தான் வருகிறது.
• பரிபாடல் உலகின் தோற்றம் குறித்து கூறுகிறது.
• மதுரை தமிழ்சங்கத்தை தமிழ் வேலி பரிப்பாடல் என்று கூறிப்பிடும் நூல்
• பரிபாடல் அறம் பொருள், இன்ப கூறுகிறது ஆகிய நான்கினையும்
• இசைப்பண்ணும் இசை அமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம் பரிபாடல்
• ஒவ்வொரு செய்யுளின் ஈற்றிலும், அப்பாடலுக்கு இசை வகுத்தவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது

பரிபாடல் (10th New Tamil Book நூல் வெளி)

• பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
• பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார்.
• இந்நூல் "ஓங்கு பரிபாடல்" எனும் புகழுடையது.
• இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.
• உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
• இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.
• ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.

பரிபாடல் (10th New Tamil Book பாடல்கள்)

• விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி.
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
• செந்தீச் சுடரிய ஊழியும்: பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு.
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்
பாடியவர் : கீரந்தையார்
புத்தகம் மேற்கோள்கள்
• இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்
துன்னுநர் சுட்டவும் சுட்டறி வுறுத்தவும்
• மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்
• தீயினுள் தென்றல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ

கருத்துரையிடுக

0 கருத்துகள்