Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

உடுமலை நாராயணகவி, முடியரசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம (6th தமிழ் புதிய & பழைய புத்தகம்)

உடுமலை நாராயணகவி (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 8)
ஆசிரியர் குறிப்பு:
• உடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப்படப்பாடல் ஆசிரியரும் நாடக எழுத்தாளரும் ஆவார்.
• பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர்.
• பகுத்தறிவுக் கவிராயர் எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்.
• இவர் வாழ்ந்தகாலம் 25.09.1899 முதல் 23.05.1981 வரை.

உடுமலை நாராயணகவி (7th தமிழ் புதிய புத்தகம் இயல் - 1)
நூல் வெளி
• பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி.
• இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.
• தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்.
• நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.

முடியரசன் (புதிய புத்தகம் இயல் 7)
நூல் வெளி
• முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
• பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
• திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
• இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

முடியரசன் (8th பழைய புத்தகம் இயல் 8)
ஆசிரியர் குறிப்பு
பெயர் : முடியரசன்
இயற்பெயர் : துரைராசு
பெற்றோர் : சுப்பராயலு - சீதாலட்சுமி
ஊர் : தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம்.
இயற்றிய நூல்கள் : பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள் முதலியன.
பணி : தமிழாசிரியர், மீ.சு. உயர்நிலைப் பள்ளி, காரைக்குடி.
பட்டம் : பறம்புமலையில் நடந்த விழாவில் கவியரசு என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது.
பரிசு : பூங்கொடி என்னும் காவியத்துக்காக 1966இல் தமிழக அரசு, பரிசு வழங்கியது.
சிறப்பு : முடியரசன், பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.
காலம்: 07.10.1920 முதல் 03.12.1998 வரை

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (புதிய புத்தகம் இயல் 4)
நூல் வெளி
• எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
• திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
• மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (பழைய புத்தகம் இயல் 7)
ஆசிரியர் குறிப்பு
• 'மக்கள் கவிஞர்' என அழைக்கப்படும் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி கவிதைகளை இயற்றியவர்;
• திரையிசைப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.
• உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள்வழிப் பரவலாக்கினார்.
• பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் ஊரில் பிறந்தவர்.
• இவர் வாழ்ந்த காலம் 13.04.1930 முதல் 08.10.1959 வரை

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham