Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

பெருஞ்சித்திரனார் (தமிழ் புதிய & பழைய புத்தகம்)

பெருஞ்சித்திரனார் (6th தமிழ் புதிய புத்தகம் இயல் - 1)
நூல் வெளி
• பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்.
• இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
• கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
• தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்.
• தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.
• இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
• இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.

பெருஞ்சித்திரனார் (10th தமிழ் புதிய புத்தகம் இயல் - 1)
நூல் வெளி
• பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்) எடுத்தாளப்பட்டுள்ளன.
• தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர்
• துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார்.
• இவர் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார்.
• இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது.
• இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

பெருஞ்சித்திரனார் (9th தமிழ் பழைய புத்தகம்)
ஆசிரியர் குறிப்பு:
• பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை.மாணிக்கம்
• இவரது ஊர் சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்.
• இவர்தம் பெற்றோர் துரைசாமி, குஞ்சம்மாள் ஆவர்.
• 10.03.1933அன்று பிறந்த இவர், 11.06.1995ஆம் நாள் மறைந்தார்.
• கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம் முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார்.
• தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள்மூலம் உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்க இவர் பாடுபட்டார்.
நூற்குறிப்பு:
• இப்பாடல், பள்ளிப்பறவைகள் என்னும் குழந்தைப்பாடல் தொகுப்பின் இரண்டாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
• இந்நூலிலுள்ள பாடல்கள் பலவும் தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களில் வெளிவந்தவை.
• இந்நூல் குஞ்சுகளுக்கு. பறவைகளுக்கு, மணிமொழிமாலை என முப்பிரிவாக அமைந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்