Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

காமராசர் (6th தமிழ் புதிய புத்தகம்)

கல்விக்கண் திறந்தவர் (6th New Book)
காமராசருக்கு தமிழக அரசு செய்த சிறப்புகள் யாவை?
1. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
2. நடுவண் அரசு 1976 பாரத ரத்னா விருது வழங்கியது.
3. காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம், விருநகர் இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
4. சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
5. சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டது.
6. கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
காமராசரின் கல்விப்பணிகள் யாதெனக்கூறு?
7. காமராசர் முதல் அமைச்சராக பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய 6000 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
8. மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக்கல்விக்கான சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். மாணவர்கள் பசியின்றி படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
9. பள்ளிகளில் குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றி கல்வி கற்பதற்காக சீருடைத் திட்டத்தினை கொண்டு வந்தார்.
10. பள்ளிகளின் வசதியைப் பெருக்க பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார். தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களை தொடங்கினார்.
11. மாணவர்கள் உயர்கல்விப் பெறப் பொறியில் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றை புதிதாக தொடங்கினார்.
12. காமராசரின் சிறப்பு பெயர்கள் யாவை? படிக்காத மேதை, பெருந்தலைவர், கர்மவீரர், கருப்புக் காந்தி,ஏழைப் பங்காளர், தலைவர்களை உருவாக்குபவர்
13. கல்விக் கண் திறந்தவர் என்று காமராஜரை பாராட்டியவர் யார்? கல்விக் கண் திறந்தவர் என்று காமராஜரை பாராட்டியவர் தந்தை பெரியார்.
14. காமராசர் பள்ளிகளில் சீருடைத்திட்டத்தினை கொண்டு வந்த நோக்கம் என்ன? பள்ளிகளில் குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றி கல்வி கற்பதற்காக காமராசர் பள்ளியில் சீருடைத்திட்டத்தினை கொண்டு வந்தார்.
15. காமராசர் முதல் அமைச்சராக பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய___ தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன? 6000
16. நடுவணரசு ________-ம் ஆண்டு பாரத ரத்னா விருதினை வழங்கியது? 1976
17. காமராசர் உள்நாட்டு விமான நிலையம் _______ அமைந்துள்ளது? சென்னை
18. காமராசரின் சிறப்புப்பெயர்? கருப்புகாந்தி
19. _______ என தந்தை பெரியாரால் காமராசர் பாரட்டப்பட்டார்? கல்விக்கண் திறந்தவர்
20. காமராசர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்? மதுரை
21. 1955-ம் ஆண்டு மார்ச் 27-ல் சென்னையில்” சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு” நடந்தது. அம்மாநாட்டில் காமராசர் கூறியது, “தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும்.
22. மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்துவது என்றும் முதலில் எட்டையபுரத்தில் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாரதியார் பிறந்து எட்டையபுரத்தில் 1956-ல் முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
23. 1956-ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது. 15லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள்.
24. காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை திறக்க ஆணையிட்டார்.
25. மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுனறைபடுத்தினார்.
26. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை? பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவை காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆகும்.
27. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்கச் ________ அறிமுகப்படுத்தினார்? சீரூடைத் திட்டத்தை
28. காமராசரை ‘கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர்? தந்தை பெரியார்
29. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்? ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

கருத்துரையிடுக

0 கருத்துகள்