Type Here to Get Search Results !

கண்ணதாசன் (9th Old & 10th New Tamil Book) || சுரதா (9th Old Tamil Book)

0

சுரதா (9th Old Tamil Book)
ஆசிரியர் குறிப்பு:
• உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
• இவர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பழையனூரில் 23.11.1921 அன்று பிறந்தார்.
• பெற்றோர் திருவேங்கடம் - செண்பகம் ஆவர்.
• பாவேந்தர் பாரதிதாசன்மீது கொண்ட பற்றுக் காரணமாகத் தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார்.
• அதன் சுருக்கமே சுரதா ஆயிற்று.
• தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள் முதலான கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.
• தேன்மழை என்னும் கவிதை நூல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றுள்ளது.
• தமிழக இயலிசை நாடக மன்றத்தின் கலைமாமணிப் பட்டத்தையும், தமிழக அரசின் பாவேந்தர் விருதையும் இவர் பெற்றுள்ளார்.
நூற்குறிப்பு:
• தேன்மழை நூலில் இயற்கையெழில் முதலாக ஆராய்ச்சி ஈறாகப் பதினாறு பகுதிகளாகக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
• அவற்றுள், தேன் துளிகள் என்னும் பகுதியில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

கண்ணதாசன் (9th Old Tamil Book)
கண்ணதாசன் படைப்புகளும் சிறப்புகளும்
• முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன், சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல்பட்டி என்னும் சிற்றூரில் 24.06.1927அன்று பிறந்தார்.
• பெற்றோர் சாத்தப்பன் விசாலாட்சி ஆவர்.
• கண்ணதாசன் கவிதைகள் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
• அவர்தம் திரைப்படப்பாடல்கள் நூல் வடிவம்பெற்றுள்ளன.
• ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, கல்லக்குடி மாகாவியம், இயேசுகாவியம் முதலியன அவர் படைத்த நெடுங்கவிதை நூல்கள்.
• இராசதண்டனை என்பது, கம்பர் அம்பிகாபதி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, அவர் படைத்த இனிய நாடகம்.
• ஆயிரம்தீவு அங்கயற்கண்ணி, வேலங்குடித் திருவிழா முதலிய பல புதினங்களையும் கண்ணதாசன் படைத்திருக்கிறார்.
• அவர் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட புதினங்களில் சேரமான் காதலி சிறந்த வரலாற்றுப் புதினமாகும். அதற்குச் சாகித்திய அகாதமியின் பரிசு கிடைத்துள்ளது.
• கண்ணதாசன் தென்றல், முல்லை, கண்ணதாசன், தமிழ் மலர் முதலிய இதழ்கள் தொடங்கி, அவற்றுக்கு ஆசிரியராக இருந்து சிறந்த இதழ்ப்பணி ஆற்றியுள்ளார்.
• கவிதையிலும் உரைநடையிலும் சொற்பொழிவிலும் திரைப்படத் துறையிலும் தமக்கென ஒரு புதிய வழியினை வகுத்துக்கொண்டு தலைநிமிர்ந்து நின்றவர் கண்ணதாசன். அவர், தம் கவிதைகளால் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
• நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை. - கண்ணதாசன்

கண்ணதாசன் (காலக்கணிதம்)(10th New Tamil Book)
நூல் வெளி
•'காலக்கணிதம்' என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
•‘முத்தையா’ என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்.
• இவரது பெற்றோர் சாத்தப்பன் - விசாலாட்சி ஆவர். 1949ஆம் ஆண்டு "கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்.
• திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன். இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.
• தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்.
• சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
• இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்