Type Here to Get Search Results !

9th Tamil Unit - 7 நூல் வெளி

0

இராவண காவியம்
நூல் வெளி:
• இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம்.
• இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது.
• இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது.
• தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.
• யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

நாச்சியார் திருமொழி
நூல் வெளி:
• திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்.
• அவருள் ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார்.
• இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப்பெற்றார்.
• இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.
• ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” ஆகும்.
• இத்தொகுப்பில் ஆண்டாள் பாடியதாகத் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரு தொகுதிகள் உள்ளன.
• நாச்சியார் திருமொழி மொத்தம் 140 பாடல்களைக் கொண்டது.
• நம் பாடப்பகுதியின் இரு பாடல்கள் ஆறாம் திருமொழியில் இடம்பெற்றுள்ளன.

செய்தி
நூல் வெளி
• தி. ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்.
• உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.
• வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன.
• நாவல்களையும் நாடகங்களையும் இவர் படைத்துள்ளார்.
• “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் இவர்.
• தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
• செய்தி என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
• மிகவும் உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும்போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பெதருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.
• தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை உ.வே. சாமிநாதர், மெளனி, தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், தஞ்சை இராமையா தாஸ், தஞ்சாவூர்க் கவிராயர் ஆகியோர்.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்
• 1970 – அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி
•1979 – சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி. ஜானகிராமன்
•1987 – முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன்
•1996 – அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்
•2008 – மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி
•2010 – சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன்
•2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்