Type Here to Get Search Results !

பாரதிதாசன் & கவிமணி தேசிக விநாயகனார் நோட்ஸ் Test - 3

0

குடும்ப விளக்கு - பாரதிதாசன் (9th New Tamil Book)
நூல் வெளி
• குடும்ப விளக்கு, குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது;
• கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது;
• குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை தன் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானதும் இன்றியமையாததும் ஆகும்.
• இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
• இரண்டாம் பகுதியில், விருந்தோம்பல் தலைப்பிலுள்ள தலைவியின் பேச்சில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பாடப்பகுதியாக உள்ளன.
• பாரதிதாசனின் இயற்பெயர் கனக.சுப்புரத்தினம்.
• இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார்.
• பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள்.
• இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் 'பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்' என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.
• இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் (தமிழ்வளர்ச்சி) (10th Old Tamil Book)
ஆசிரியர் குறிப்பு :
• பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
• இவர், 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் 29ஆம் நாள் புதுவையில் பிறந்தார்.
• தந்தை கனகசபை, தாய் இலக்குமி.
• பாரதியின்மேல் கொண்ட பற்றால் தம்பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
• இவர் பாவேந்தர், புரட்சிக்கவிஞர் ஆகிய சிறப்புப்பெயரால் வழங்கப்படுகிறார்.
• குடும்பவிளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலியன இவர்தம் படைப்புகளாம்.
• பாரதிதாசன் பரம்பரை என்றொரு கவிஞர் பரம்பரையே அவர் காலத்தில் உருவானது.
• தமிழக அரசு, பாவேந்தர் படைப்புகளை நாட்டுடைமையாக்கியுள்ளது;
• ஆண்டு தோறும் சிறந்த கவிஞர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கி வருகிறது;
• திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துச் சிறப்புச் சேர்த்துள்ளது.

கவிமணி தேசிக விநாயகனார் [உமர்கய்யாம் பாடல்கள்] (9th Old Tamil Book)
ஆசிரியர் குறிப்பு :
• கவிமணி தேசிக விநாயகனார் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தவர்.
• இவரின் பெற்றோர் சிவதாணு ஆதிலட்சுமி அம்மையார்.
• இவர் உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
• அப்பாடல்களின் தொகுப்பு 'உமர்கய்யாம் பாடல்கள்' என்பது.
• உமர்கய்யாம் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர்.
• இவரது முழுப் பெயர் கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம் என்பது.
• இவர் கணிதம், வானவியல் ஆகியவற்றில் புலமைமிக்கவர்.
• இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை. இவர் இயற்றிய பிற நூல்கள்:
• மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம், குழந்தைச் செல்வம், ஆசிய ஜோதி முதலியன.
• இவரது காலம் 1876முதல் 1954ஆம் ஆண்டுவரை.
நூற்குறிப்பு :
• இந்நூல் இம்மை மறுமை பற்றி ரூபாயத் என்னும் பெயரில் உமர்கய்யாம் எழுதிய செய்யுள்களின் மொழிபெயர்ப்பு.
• இதனையே கவிமணி மொழிபெயர்த்துள்ளார்.
• இதில், நூற்றுப் பதினைந்து பாடல்கள் உள்ளன.
• வாழ்க்கைத் தத்துவத்தை இப்பாடல்கள் விளக்குகின்றன. (ரூபாயத் - நான்கடிச் செய்யுள்)


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்