Type Here to Get Search Results !

பாரதியார் & வெ. இராமலிங்கனார் நோட்ஸ் Test -1

0

பாஞ்சாலி சபதம் (பாரதியார்) [9th Old Tamil Book]
ஆசிரியர் குறிப்பு
• சுப்பிரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11.12.1882 அன்று பிறந்தார்.
• இவர்தம் பெற்றோர் சின்னசாமி - இலக்குமி அம்மையார் ஆவர்.
• இவரின் துணைவியார் செல்லம்மாள்.
• சிறந்த படைப்பாளரான பாரதியார் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களைப் படைத்தளித்தார்.
• நாடு, மொழி, இறை, பெண்மை முதலிய பாடுபொருள்களில் எண்ணற்ற பாடல் இயற்றினார்.
• ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களையும் எழுதினார்.
• இவர் 11.09.1921 அன்று மறைந்தார்.
சிறப்பு
• பாரதியார் பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாக்கவி என்றெல்லாம் புகழப்பெற்றார்;
• சுதேசமித்திரன், இந்தியா முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்;
• இந்திய விடுதலைக்குப் பாடுபட்டார்.
• தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை. - பாரதிதாசன்
நூற்குறிப்பு
• இப்பாடப்பகுதி, பாரதியாரின் முப்பெரும் படைப்புகளுள் ஒன்றாகிய பாஞ்சாலி சபதம் என்னும் காப்பியத்தின் சூழ்ச்சிச்சருக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
• அனை- வரும் அறிந்த இதிகாசக் கதையை எளிய சொற்கள், எளிய நடை, எளிய சந்தம் ஆகியவற்றுடன் கூடிய பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம். இது, வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப் பெற்றது.
• பாஞ்சாலி சபதம் இரு பாகத்தைக் கொண்டது. இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச்சருக்கம். அடிமைச்சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம் என ஐந்து சருக்கத்தையும் நானூற்றுப் பன்னிரண்டு பாடலையும் கொண்ட குறுங்காப்பியம்.

பாரதியார் (காற்றே வா!) [10th New Tamil Book]
நூல் வெளி
• மகாகவி சுப்பிரமணிய பாரதியார், 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா', 'சிந்துக்குத் தந்தை’ என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்; எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்; கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்;
• குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்;
• இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
• பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்;

கவிஞர் வெ. இராமலிங்கனார் [9th Old Tamil Book]
ஆசிரியர்குறிப்பு:
• கவிஞர் வெ. இராமலிங்கனார், நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூரில் பிறந்தவர்.
• இவர்தம் பெற்றோர் வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள் ஆவர்.
• கவிதைப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றார்.
• தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர்.
• இவருக்கு நடுவணரசு பத்மபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்தது.
• இவர், தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் எனப் பெருமையுடன் வழங்கப் பெற்றார்.
• இவரின் காலம் கி.பி. 1888 முதல் 1972 வரையாகும்.
நூற்குறிப்பு:
• நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் கவிதைத் தொகுப்பில் தெய்வத் திருமலர், தமிழ்த்தேன் மலர், காந்திமலர், தேசிய மலர், சமுதாய மலர், பெரியோர் புகழ்மலர், திருநாள் மலர், சிறுகாப்பிய மலர், இசைமலர், அறிவுரை மலர், பல்சுவை மலர் ஆகிய தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன.
• இப்பாடல், சமுதாய மலர் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது
•நாமக்கல்லாரின் படைப்புகள்
•இலக்கியத்திறனாய்வுகள் - 7
•இசைநாவல்கள் – 3
•கவிதைத்தொகுப்புகள் - 10
•கட்டுரைகள் – 12
•சிறுகாப்பியங்கள் - 5
•தன் வரலாறு – 3
• மொழிபெயர்ப்புகள் – 4
•புதினங்கள் – 5


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்