அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் |
---|
• 'அமெண்ட்மெண்ட்' (Amendment) எனும் சொல் மாற்றம், மேம்படுத்துதல், மற்றும் சிறு மாறுதல் என்பதைக் குறிக்கிறது.
• அரசியலமைப்பின் சட்டம் பகுதி XXல் 368வது சட்டப்பிரிவு, அரசியலமைப்பினை சட்ட திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் திருத்தம் செய்வதில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பற்றி தெரிவிக்கிறது. |
அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் வழிமுறைகள் |
---|
• நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
• நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும், அவையின் ஒட்டுமொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மற்றும் அவைக்கு வந்து, வாக்களித்தவர்களில் 3ல் 2 பங்குக்கு குறையாமல் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வேண்டும். • குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்த பின் மசோதா திருத்தப்பட்டச் சொற்களுடன் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்படும். நாடாளுமன்றத்தால் மட்டுமே அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரமுடியும். • மாநில சட்ட மன்றத்தால் அரசியலமைப்பில் எந்தவொரு சட்டத்திருத்தத்தையும் கொண்டுவர முடியாது. |
அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வகைகள் |
---|
• அரசியலமைப்பின் 368வது சட்டப்பிரிவு மூன்று வகைகளில் அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களைச் செய்ய வழிவகுக்கிறது.
1. நாடாளுமன்றத்தின் சாதாரண அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல். 2. நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல். 3. நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலைப் பெறுவதன் மூலம் திருத்தப்படுதல். |
உங்களுக்குத் தெரியுமா? |
---|
• அரசியலமைப்பின் - 42வது சட்டத்திருத்தம் 'குறு அரசியலமைப்பு' என அறியப்படுகிறது. |
அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுக்கள் |
---|
• அரசியலமைப்பு செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய 2000ஆம் ஆண்டில் இந்திய அரசு ஒரு தீர்மானத்தின் படி திரு M.N. வெங்கடாசலய்யா தலைமையில் அரசியலமைப்புச் சட்ட செயல்பாட்டிற்கான தேசிய சீராய்வு ஆணையம் ஒன்றை அமைத்தது.
• அரசின் பல்வேறு நிலைகள் அவற்றிற்கிடையேயான தொடர்பு மற்றும் பங்களிப்புகள் குறித்துப் புதிய நோக்கத்தோடு ஆராய ஏப்ரல் 2007ஆம் ஆண்டு மூன்று உறுப்பினர்களைக் கொண்ட M.M. பூஞ்சி தலைமையில் அப்போதைய அரசு ஓர் ஆணையத்தை அமைத்தது. |
Thank u so much sir very very useful sir
பதிலளிநீக்குminnal vega kanitham