முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர் |
---|
நூல் வெளி (10th New tamil Book)
• குமரகுருபரர் இயற்றிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தின் எட்டாம் பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது. • 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ். • இதில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர். • பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ். பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும். • இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும். • குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு. • இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்; கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியுள்ளார். • இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி. • ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) - சிற்றில், சிறுபறை, சிறுதேர் • பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) - கழங்கு, அம்மானை, ஊசல் |
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர் [TNPSC Old Questions] |
---|
1. "வருகைப் பருவம்'' - என்பது? குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது (2017 TNPSC JAILOR)
2. ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும், பெண்பால் பிள்ளை தமிழுக்கும் பொதுவான பருவங்கள்? 7 (09-01-2019) 3. ”செங்கீரைப்பருவம்” – பிள்ளைத்தமிழின் எத்தனையாவது பருவம்? இரண்டாம் பருவம் (2019 EO4) 4. வருகைப் பருவம்என்பது பிள்ளைத் தமிழின் எத்தனையாவது பருவம்? ஆறாவது பருவம் (2017 Gr5A) 5. உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுதகிரணமே -என்று தொடங்கும் பாடல் எந்தப் பருவத்தில் இடம் பெற்றுள்ளது? வருகைப் பருவம் (2017 TNPSC JAILOR) 6. ஆண்பால் பிள்ளைத் தமிழுக்குரிய பருவம் எது? சிறுதேர் (2017 TNPSC) 7. சரியான வரிசையைக் குறிப்பிடுக? காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம் (2013 Gr3A) 8. பிள்ளைத் தமிழின் இரண்டாம் பருவம்? செங்கீரைப்பருவம் (2016 TNPSC MHC) 9. ஆண்பால் பிள்ளைத் தமிழில் இல்லாத பருவங்கள்? அம்மானை, நீராடல், ஊசல் (2016 TNPSC MHC) 10. பெண்களின் பருவங்களில் மங்கைப் பருவத்திற் குரிய வயது வரம்பு? 12 - 13 (2016 TNPSC JAILOR) 11. செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது? இரண்டாம் பருவம் (2019 G4) 12. 26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்? தெரிவை (2017 G2) 13. பிள்ளைத்தமிழ் - பத்துப் பருவங்கள் (2013 G4) 14. திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்? குமரகுருபரர் (2018 G4) 15. தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு? இந்துத்தானி (2018 G4) 16. குமரகுருபரர் எம் மொழிகளில் புலமைமிக்கவர்? தமிழ், வடமொழி இந்துத்தானி (2017 G2) 17. குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்? மதுரைக் கலம்பகம், நந்திக் கலம்பகம், கந்தர் கலிவெண்பா, நீதிநெறி விளக்கம் (2016 G2) 18. குமரகுருபரர் எழுதாத நூல்? கந்தர் கலிவெண்பா, மதுரைக் கலம்பகம், திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், நீதிநெறி விளக்கம் (2014 G4) 19. தவறானவற்றைத் தேர்வு செய்க: குமரகுருபரரின் நூல்கள்? கந்தர் கலிவெண்பா, வேதியர் ஒழுக்கம், நீதிநெறி விளக்கம், சகலகலாவல்லி (2017 EO3) 20. குமரகுருபரர் எழுதாத நூல் எது? கந்தர்கலி வெண்பா, குலோத்துங்கள் பிள்ளைத் தமிழ், மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ், முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் (2017 Gr5A) 21. மதுரை மீனாட்சியம்மையிடம் முத்துமணி மாலையை பரிசாக வாங்கியவர் - யார்? குமரகுருபரர் (2017 TNPSC Jailor) 22. மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து முத்து மாலையை யாருக்குப் பரிசாக அளித்தார்? குமரகுருபரர் (2016 TNPSC MHC) 23. முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்? குமரகுருபரர் (2013 G2) |
Thank-you bro
பதிலளிநீக்குNandri sir
பதிலளிநீக்குminnal vega kanitham