கவிமணி தேசிய விநாயகம் |
---|
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (9th New Tamil Book) ஆசிரியர் குறிப்பு : • 1876 ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள தேரூரில் பிறந்தார். • 1901 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஆனார். • அதன்பின் திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். • 1917 ஆம் ஆண்டிலேயே “மருமக்கள் வழி மான்மியம்” எனும் நகைச்சுவை நூலினை எழுதி வெளியிட்டார். • மலரும் மாலையும், ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். கவிமணி தேசிக விநாயகனார் (9th Old Tamil Book) ஆசிரியர் குறிப்பு : • கவிமணி தேசிக விநாயகனார் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தவர். • இவரின் பெற்றோர் சிவதாணு ஆதிலட்சுமி அம்மையார். • இவர் உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். • அப்பாடல்களின் தொகுப்பு 'உமர்கய்யாம் பாடல்கள்' என்பது. • உமர்கய்யாம் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர். • இவரது முழுப் பெயர் கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம் என்பது. • இவர் கணிதம், வானவியல் ஆகியவற்றில் புலமைமிக்கவர். • இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை. இவர் இயற்றிய பிற நூல்கள்: • மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம், குழந்தைச் செல்வம், ஆசிய ஜோதி முதலியன. • இவரது காலம் 1876முதல் 1954ஆம் ஆண்டுவரை. |
கவிமணி தேசிக விநாயகம் (9th New/Old Tamil Book)
அக்டோபர் 02, 2023
1
Tags
Super
பதிலளிநீக்குminnal vega kanitham