Type Here to Get Search Results !

குரூப் - 4 GK Notes– 2 நடுவண் அரசு

0


எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST





Download Now






---------------

மத்திய அரசு (168 QUESTIONS)

1. உச்சநீதிமன்ற நீதிபதி தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுத்தல் வேண்டும்? குடியரசுத் தலைவரிடம்

2. உச்ச நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் அமைப்பு? நாடாளுமன்றம்

3. வேறு எந்த மாநிலத்திலும் இந்திய உச்சநீதிமன்றம் அமைவதற்கு யாருடைய ஒப்புதல் தேவை? இந்திய குடியரசுத் தலைவர்

4. உச்சநீதிமன்றம் இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையை தீர்த்துவைக்க எந்த அதிகாரத்தை பயன்படுத்தி தீர்த்துவைக்கும்? தனக்கே உரிய நீதி வரையறை

5. உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் எத்தனை நீதி பேராணைகள் உள்ளன? 5

6. உயர் நீதிமன்றத்தில் இருந்து வழக்கு மேல்முறையீட்டிற்காக  உச்ச நீதிமன்றம் செல்லும் பொழுது கண்டிப்பாக உயர்நீதிமன்றம் சான்றிதழ் மட்டுமே இது சாத்தியமாகும்

7. ஒரு சட்டத்தினை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று அறிவிக்கும் அதிகாரம் இந்திய உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது இதற்கு என்ன பெயர்? நீதிப்புனராய்வு என்று பெயர் (நீதிமன்ற மறு ஆய்வு அதிகாரம்)

8. குடியரசுத் தலைவருக்கு மொத்தம் எத்தனை இல்லங்கள் உள்ளன? 3

9. டெல்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவரின் இல்லம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ராஷ்டிரபதி பவன்

10. குடியரசுத் தலைவரின் மற்றொரு இல்லம் ? சிம்லாவில் உள்ள (ரீட்ரீட் கட்டிடம்)

11. குடியரசுத் தலைவரின் மற்றொரு இல்லம்? ஹைதராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி நிலையம் (வடக்கு தெற்கு இந்தியாவின் ஒற்றுமை)

12. ராஜேந்திர பிரசாத் எந்த ஆண்டுவரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்? 1962

13. எந்த தீர்ப்பாயங்கள் மீது உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது? ராணுவ தீர்ப்பாயம்

14. இந்திய நாடாளுமன்றம் என்பது லோக்சபா ராஜ்யசபா குடியரசுத் தலைவர் என்று கூறும் விதி 79

15. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் இல்லாத பட்சத்தில் இந்தியாவின் குடியரசுத் தலைவராக செயல்படுபவர்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

16. குடியரசுத் தலைவராக செயல்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்? இதயதுல்லா 1960இல்

17. துணை குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் முறை மக்களவையின் ஒப்புதலுடன் மாநிலங்களவையில் பெரும்பான்மை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம்

18. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் முன் அவருக்கு எத்தனை நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வழங்கவேண்டும்? 14

19. துணை குடியரசுத் தலைவர் அவர் பதவியின் அடிப்படையில் மாநிலங்கள் அவையின் தலைவராக செயல்படுகிறார்

20. மாநிலங்களவை ஒத்தி வைக்கவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவும் அதிகாரம் படைத்தவர்? இந்திய துணை குடியரசுத் தலைவர்

21. குடியரசுத் தலைவர் இல்லாத பட்சத்தில் அவரது பணியை இந்திய துணை குடியரசுத்தலைவர் எத்தனை நாட்கள் செய்யலாம்? 6 மாதம்

22. மாநிலங்களவையில் சட்டமசோதா சமமாக உள்ளபோது வாக்களிக்க அதிகாரம் பெற்றவர் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சட்ட விதி 100 முடிவு வாக்கு என்று அழைக்கப்படுகிறது

23. குடியரசுத் தலைவருக்கு உதவிட பிரதமர் அமைச்சரை தலைவராக கொண்ட மத்திய அமைச்சரவை குழு இருக்கும் என்று கூறும்? சட்ட விதி 74 (1)

24.  இங்கிலாந்து நாடாளுமன்றம் எந்த அரணமனை அமைந்துள்ளது? வெஸ்ட் மினிஸ்டர்

25.  இந்தியாவில் பிரதமர் பதவி எந்த நாட்டில் இருந்து எடுக்கப்பட்டது? இங்கிலாந்து நாடு

26. பிரதம அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களின் ஊதியம் நியமனம் செய்வது? நாடாளுமன்றம்

27. நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒரு அமைச்சர் எத்தனை நாள் மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? ஆறுமாதம்

28. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் ஒட்டுமொத்தமாக யாருக்கு பொறுப்புடையவர்கள்? மக்களவைக்கு

29. ஜவஹர்லால் நேருவின்பிரதமர் பதவிக்காலம் எந்த வருடம் முடிவடைந்தது? 1964

30. லால்பகதூர் சாஸ்திரி எத்தனை வருடம் பிரதமராக பதவி வகித்தார்? 1964- 1966

31. மொரார்ஜி தேசாய் ஒன் பதவிக்காலம்? 1977- 1979

32. 1979 முதல் 1980 வரை பிரதமராக பதவி வகித்தவர்? சரண்சிங்

33. 1996 மே மாதம் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர்? அடல்பிகாரி வாஜ்பாய்

34. இந்தியாவின் பிரதம அமைச்சரின் கடமையைப் பற்றி கூறும் சட்டப்பிரிவு? 78

35. இந்திய நாட்டின் உண்மையான தலைவர்? பிரதம அமைச்சர்

36. நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இல்லாத ஒருவர் மத்திய அரசின் ஏதேனும் இரண்டு அவையில் ஒரு உறுப்பினராக? ஆறு மாத காலத்திற்குள்தேர்வு செய்யப்படலாம்

37. மக்களவையில் எத்தனை சதவீதம் உறுப்பினர்கள் மட்டுமே அமைச்சர்களாக இருக்க முடியும்? 15%

38. மாநிலங்களவை அகில இந்திய பனிகளை உருவாக்க எவ்வளவு பெரும்பான்மை தேவை? 23 பங்கு

39. அகில இந்திய பணிகளை உருவாக்கவும் நீக்கவும் அதிகாரம் படைத்த அமைப்பு? மாநிலங்களவை

40. நிதி மசோதா இனை திருத்தம் செய்யவோ நிராகரிக்கவும் எந்த அவைக்கு அதிகாரமில்லை ? மாநிலங்களவைக்கு

41. நிதி மசோதா எந்த அவையால் மட்டுமே அறிமுகம் செய்ய முடியும்? மக்களவை

42. நிதி மசோதா மாநிலங்களவை எத்தனை நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்? 14

43. மக்களவையில் அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை? 552

44. மக்களவையில் அதிகபட்சமாக மாநில மக்களால் எத்தனை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்? 530

45. அதிகபட்சமாக யூனியன் பிரதேசங்களில் இருந்து மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை தேர்வு செய்யலாம்? 13

46. ஆங்கிலோ இந்தியன் சமூகத்திலிருந்து மக்களவைக்கு குடியரசு தலைவர் எத்தனை உறுப்பினர்களை நியமனம் செய்யலாம்? 2

47. தற்போது மக்களவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கைா 545

48. மக்களவை உறுப்பினராக ஆவதற்குரிய வயது? 25 வயது

49. மக்களவையில் முதல் பெண் சபாநாயகர்? மீரா குமார்

50. நாடாளுமன்றத் தொகுதிகள் எதன் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன? மக்கள் தொகை அடிப்படையில்

51. மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மேற்பார்வையில் நடத்துதல் ஆகிய பணிகளை செய்வது? இந்திய தேர்தல் ஆணையம்

52. நம்பிக்கையில்லாத் தீர்மானம் எந்த அவையில் மட்டுமே கொண்டு வரமுடியும்? லோக்சபா மக்களவையில் மட்டும்

53. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை? 18 உறுப்பினர்கள்

54. தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை? 39 உறுப்பினர்கள்

55. இந்திய வாக்காளர் தினம்? ஜனவரி 25

56. மக்களவையை தலைமையேற்று நடத்துவோர்? மக்களவை சபாநாயகர்

57. மக்களவைத் கலைக்கப்பட்டாலும் புதிய சபாநாயகர் தேர்வு செய்யும் வரை மக்களவை சபாநாயகர் பதவி தொடரும்

58. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியவர்? மக்களவை சபாநாயகர்

59. ஒரு மசோதாவை நிதி மசோதாவை அல்லது சாதாரண மசோதாவை என்று தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்? மக்களவை சபாநாயகர்

60. பண மசோதாவை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு படைத்தவர்? மக்களவை சபாநாயகர்

61. கட்சித் தாவல் தடைச் சட்டம் 1985, 52 வது சட்டத்திருத்தம் இந்திய அரசியலமைப்பு சட்டம் 10 ஆவது அட்டவணையில் உள்ளது.

62. மத்திய அமைச்சர்கள் எத்தனை வகைகளாக வகைப்படுத்தலாம்? மூன்று (கேபினட் அமைச்சர், ராஜாங்க அமைச்சர், இணை அமைச்சர்)

63. குடியரசுத் தலைவர் அவசர நிலையை பிரகடனம் செய்ய யாருடைய பரிந்துரை தேவை? அமைச்சரவை

64. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர ஒரு கருவியாக செயல்படுவது? அமைச்சரவை

65. வெளிநாட்டுத் தூதுவர்களை நியமனம் செய்பவர்? குடியரசுத் தலைவர்

66. மத்திய அரசின் அனைத்து துறையின் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பு வகித்தவர்? கேபினெட் அமைச்சர்

67. அமைச்சரவைக் குழுவின் இரண்டாவது வகையினர்? ராஜாங்க அமைச்சர்கள்

68.  இந்திய நாடாளுமன்றத்தை பற்றிக்கூறும் சட்ட பகுதி? 5

69.  இந்திய நாடாளுமன்றத்தை பற்றி கூறும் சட்ட விதி? 79 முதல் 122 வரை

70. இந்திய நாடாளுமன்றம் எத்தனை பகுதிகளைக் கொண்டது? மூன்று குடியரசுத்தலைவர் -ராஜ்யசபா லோக்சபா

71. இந்திய நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஈரவை சட்டமன்றம்

72. ராஜ்யசபா எத்தனை உறுப்பினர்களை கொண்டுள்ளது? 250

73. மாநிலங்களவை உறுப்பினர்கள் எந்த தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்? மறைமுகத் தேர்தல்

74. மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வயது? 30

75. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம்? 6 ஆண்டுகள்

76. மாநிலங்களவை ஒரு நிரந்தர அவை

77. மாநிலங்களவை உறுப்பினர்களின் ஓய்வு? 1/3 இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுகிறார்கள்.

78.  மாநிலங்களவையின் துணைத் தலைவர் யாரால் தேர்வு செய்யப்படுகிறார்? மாநிலங்களவை உறுப்பினர்கள்

79. மாநிலங்களவை உறுப்பினர்கள் யாரால் தேர்வு செய்யப்படுகிறார்? மாநில சட்டமன்ற உறுப்பினர்களால்

80. மாநிலங்களவை உறுப்பினர்கள்தேர்தல் முறை எந்த வகை தேர்தல் முறை? ஒற்றை மாற்று விகிதாச்சாரம்

81. மாநிலங்களவை தேர்தல் முறை? ஒரு மறைமுக தேர்தல் முறை

82. எந்த மசோதாவை சட்டம் ஆவதற்கும் மாநிலங்களவையில் ஒப்புதல் தேவை இல்லை? நிதி மசோதா

83. எந்த ஒரு மசோதா நிறைவேற்றுவதில் இரண்டு அவைகளும் சம அந்தஸ்து பெற்றவை? அரசியல் சட்ட திருத்த மசோதா

84. தேசிய நலன் கருதி மாநில அரசு பட்டியலில் உள்ள அதிகாரத்தில் தலையிடும் அதிகாரம் மாநிலங்களவைக்கு உள்ளது,

85. ஒரு உறுப்பினர் மக்களவை உறுப்பினராக தகுதி பெற்றவரா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் அதிகாரம் படைத்தவர்?  மக்களவை சபாநாயகர்

86. சபாநாயகர் பதவி காலியாக இருக்கும் பட்சத்தில் அவரது பணியை செய்பவர்? துணை சபாநாயகர்

87. பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி முதல் மே வரை

88. மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை முதல் செப்டம்பர் வரை

89. குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் முதல் டிசம்பர் வரை

90. உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர், இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரை.  பதவி நீக்கம் செய்ய அதிகாரம் படைத்தது? நாடாளுமன்றம்

91. மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் படைத்தது? நாடாளுமன்றம்

92. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நியமிக்க சட்டவிதி? 76

93. இந்திய தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்யவது? இந்திய குடியரசுத் தலைவர்  

94. இந்திய தலைமை வழக்கறிஞர் ஆவதற்கு உரிய தகுதிகள்? ஒரு உயர் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் நீதிபதியாகவும் (அல்லது) ஒரு உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வழக்கறிஞராகவும் (அல்லது) குடியரசுத் தலைவரின் பார்வையில் சட்ட வல்லுநராக இருத்தல் வேண்டும்.

95. இந்திய தலைமை வழக்கறிஞரின் பதவிக்காலம்? குடியரசுத்தலைவர் விரும்பும் வரை

96. இந்திய தலைமை வழக்கறிஞர் தனது ராஜினாமா கடிதத்தை யாரிடம் கொடுக்கவேண்டும்? இந்திய குடியரசுத் தலைவரிடம்

97. இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை படைத்தவர் இந்திய தலைமை வழக்கறிஞர்

98. இந்திய நாடாளுமன்றத்தின் பேசுவதற்கு இந்திய தலைமை வழக்கறிஞருக்கு உரிமை உண்டு, இந்திய தலைமை வழக்கறிஞருக்கு நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் உரிமை இல்லை

99. மத்திய அரசாங்கத்தின் மூன்றாவது அங்கம்? நீதித்துறை

100. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலர்கள்? உச்சநீதிமன்றம்

101. இந்திய உச்சநீதிமன்றம் என்பது? ஒரு சுதந்திரமான நீதித்துறை

102. இந்திய உச்ச நீதி மன்றம் எப்போது துவங்கப்பட்டது? 1950 ஜனவரி 28

103. எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது? 1935 சட்டத்தின் அடிப்படையில்

104. 1950 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் இருந்தனர்? எட்டு (1+7)

105. இந்திய உச்ச நீதி மன்ற நீதிபதியை நியமனம் செய்வது? ஒரு இந்திய குடியரசுத் தலைவர்

106. உச்சநீதிமன்ற நீதிபதியாக அதற்குரிய தகுதிகள் ஒரு உயர் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் நீதிபதியாகவும் (அல்லது) ஒரு உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வழக்கறிஞராகவும் (அல்லது) குடியரசுத் தலைவரின் பார்வையில் சட்ட வல்லுநராக இருத்தல் வேண்டும்.

107. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட பிற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது? 65

108. துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்? ஐந்து ஆண்டுகள்

109. இந்திய துணை குடியரசுத்தலைவர் அவரது பதவிக் காலம் முடிந்த பின்பும் அவர் பதவியில் தொடர இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்கு அதிகாரம் வழங்கவில்லை எனவே முடிந்தவரையில் அவரது தேர்தலை விரைவாக நடத்தப்பட வேண்டும்,

110. துனைக் குடியரசுத் தலைவர் இல்லாத பட்சத்தில்? மாநிலங்களவையின் தலைமை ஏற்று நடத்துவர் மாநிலங்களவை துணைத் தலைவர்

111. மத்திய அரசை பற்றி குறிப்பிடும் பகுதி பகுதி? 5

112. மத்திய அரசு நிர்வாக பிரிவைப் பற்றி குறிப்பிடும் சட்டவிதி? 52 முதல் 75 வரை

113. மத்திய அரசாங்கம் எத்தனை அங்கங்களைக் கொண்டுள்ளது? மூன்று, நிர்வாகத்துறை சட்டத்துறை, நீதித்துறை

114. இந்தியாவில் மாநில சட்டமன்றங்களில் தேர்வு செய்யப்படும் மாநிலங்களவை உறுப்பினர்கள் எத்தனை பேர்? 238 உறுப்பினர்கள்

115. இந்தியாவில் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும் மாநிலங்களவை உறுப்பினர்கள் எத்தனை பேர்? 12 பேர்

116. இந்தியாவில் மக்களவைக்கு மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் எத்தளை பேர் 543

117. இந்தியாவில் மக்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்? 2

118. மத்திய சட்டமன்றம் எத்தனை அங்ககளைக் கொண்டது? 2

119. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த முறையிலான அரசாங்கத்தை நமக்கு வழங்கியுள்ளது? நாடாளுமன்றம் அரசாங்க முறை,

120. மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத்தலைவரின் பெயரிலேயே செயல்படுகிறது என்று கூறும் சட்ட விதி? 77

121. பிரதம அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களை நியமனம் செய்பவர்? குடியரசுத் தலைவர்

122. யாருடைய ஆலோசனையின் பெயரில் குடியரசுத்தலைவர் அமைச்சர்களுக்கு துறையை ஒதுக்கீடு செய்கிறார்? பிரதமர்

123. தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பற்றி ஆராய ஆணையத்தை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்? குடியரசுத் தலைவர்

124. ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் யாருடைய உரையுடன்தொடங்குகிறது? குடியரசுத் தலைவர்

125. குடியரசுத்தலைவர் ஆண்டுக்கு நாடாளுமன்றத்தை எத்தனை முறை கூட்டுகிறார்? 2

126. நிதி மசோதாவை யாருடைய ஒப்புதலுடன் மட்டுமே நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முடியும்? குடியரசுத் தலைவரின் ஒப்புதல்

127. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையில் கூட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் அதிகாரம் படைத்தவர்? குடியரசுத் தலைவர்

128. மக்களவை முடியும் முன் அதனை கலைக்கும் அதிகாரம் படைத்தவர்? குடியரசுத் தலைவர்

129. குடியரசுத் தலைவர் நியமனம் செய்யப்படும் மக்களவையில் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள்? ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சார்ந்தவர்கள்

130. எப்போது குடியரசுத் தலைவர் மக்களவையின் ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்கிறார்? மக்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பட்சத்தில்

131. ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை யாருடைய ஒப்புதல் பெற்ற பின் மத்திய நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார்? குடியரசுத் தலைவர்

132. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அவசரகால நிதி அதிகாரம் யாரிடம் வழங்கியுள்ளது? குடியரசுத் தலைவர்

133. யாருடைய பரிந்துரை இல்லாமல்மானியக் கோரிக்கைகளை கொண்டு வர இயலாது? குடியரசுத் தலைவர்

134. எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் படைத்தவர்? குடியரசுத் தலைவர்

135. எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதிக்குழுவின் குடியரசுத் தலைவர் அமைக்கிறார்? ஐந்து ஆண்டுகள்

136. நிதிக்குழுவின் பணி? மத்திய மாநில அரசுகளின் வருவாய் பகிர்ந்துகொள்ள

137. மரண தண்டனை பெற்ற ஒருவரை குடியரசுத் தலைவர் மன்னிக்கும் அதிகாரம்? விதி 72வது விதி

138. முப்படைகளின் தலைமைத் தளபதி குடியரசுத் தலைவர் என்று கூறும் சட்ட விதி? 53 [2]

139. வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களை நியமிக்க அதிகாரம் படைத்தவர்? இந்திய குடியரசுத் தலைவர்

140. வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் யாருடைய பெயரில் நடைபெறுகிறது? இந்திய குடியரசுத் தலைவர்

141. இந்திய குடியரசு தலைவர் இந்தியாவின் தேசிய நெருக்கடியை எந்த சட்ட விதியின்

அடிப்படையில் பிரகடனம் செய்கிறார்? 352விதி

142. இந்திய குடியரசுத் தலைவர் மாநிலத்தின் அவசர நிலையை என்ற சட்ட விதியின் அடிப்படையில் பிரகடனம் செய்கிறார்? விதி 356

143. இந்தியாவின் நிதி நெருக்கடியை குடியரசுத்தலைவர் பிரகடனம் செய்வதற்கான சட்டவிதி? 160

144. அதிகபட்சமாக குடியரசுத் தலைவர் ஆட்சி எந்த மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? கேரளா மற்றும் பஞ்சாப்

145. கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி எத்தனை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது? 9 முறை

146. குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுக்கவேண்டும்? துணை குடியரசுத் தலைவர்

147. குடியரசுத் தலைவரை நீக்கும் சட்ட விதி? விதி 61

148. குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்ய ? அவைக்கு வருகை தந்தவர்கள் நான்கில் ஒரு பகுதியினர் தெரிவிக்க வேண்டும்,

149. குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்ய என்ன செய்ய வேண்டும் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்,

150. குடியரசுத்தலைவர் எந்த நீதிமன்றத்திற்கும் கட்டுப்பட்டவர் அல்ல? விதி 361 (1)

151. நாட்டின் இரண்டாவது உயர்ந்த அதிகாரம் படைத்தவர்? துணை குடியரசுத் தலைவர் சட்டவிதி 63

152. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரின் பதவி எந்த நாட்டில் இருந்து எடுக்கப்பட்டது? அமெரிக்கா

153. இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஆவதற்கான தகுதிகள்? அவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்

154. இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவர்? ராதாகிருஷ்ணன்

155. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் அதற்கான வயது வரம்பு? 35 வயது நிறைவடைந்து ஆக இருத்தல் வேண்டும்

156. துணை குடியரசுத்தலைவர் தேர்தலைப் பற்றிக் கூறும் சட்டவிதி? 66(1)

157. துணை குடியரசுத் தலைவரை எந்த தேர்தல் முறை மூலம் தேர்வு செய்கிறோம்? மறைமுகத் தேர்தல்

158. துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள்? நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள்

159. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்?  5 ஆண்டுகள் (அவர் மீண்டும் தேர்ந்தெடுக்க தகுதி உடையவராவர்)

160. மத்திய அரசின் நிர்வாகத் தலைவர்? குடியரசுத் தலைவர்

161. யாரின் பெயரின் அடிப்படையில் மத்திய அரசின் நிர்வாக பணிகள் நடைபெறுகின்றன? குடியரசுத் தலைவர்

162. குடியரசுத்தலைவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மத்திய அரசு நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்கான சட்டவிதி?  53

163. குடியரசுத் தலைவருக்கான தகுதிகள்? மக்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்

164. குடியரசுத் தலைவரின் பெயரை தேர்ந்தெடுக்க 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும், 10 வாக்காளர்கள் வழிமொழிய வேண்டும்

165. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை தேர்வுக்குழு மூலம்

166. குடியரசுத் தலைவர் எந்த வாக்கின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்? ஒற்றை மாற்று வாக்கு மூலம்

167. எந்த இரண்டு யூனியன் பிரதேசங்கள் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க பங்கு கொள்கின்றன? டெல்லி, பாண்டிச்சேரி

168. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைப்பவர் யார்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

  1. tnpsc
  2. tnpsc group
  3. tnpsc group 4
  4. tnpsc group 2
  5. tnpsc group 1
  6. tnpsc departmental exam
  7. tnpsc exam
  8. group 4 exam
  9. tnpsc academy
  10. vao exam
  11. tnpsc group 4 hall ticket
  12. tnpsc group 4 exam
  13. tnpsc group 4 syllabus
  14. tnpsc group 2 syllabus
  15. tnpsc books
  16. tnpsc portal
  17. tnpsc group 1 syllabus
  18. tnpsc hall ticket
  19. tnpsc notification
  20. tnpsc group 2 notification
  21. tnpsc syllabus
  22. tnpsc portal current affairs
  23. tnpsc result
  24. tnpsc group 4 study materials
  25. tnpsc group 4 previous year question papers
  26. tnpsc group 2 previous year question papers
  27. tnpsc login
  28. tnpsc group 4 apply online
  29. tnpsc official website
  30. tnpsc answer key
  31. tnpsc previous year question papers
  32. tnpscacademy
  33. group 2 previous year question papers
  34. tnpsc group 4 books
  35. group 4 question papers
  36. tnpsc group 4 app
  37. group 4 previous year question papers
  38. tnpsc question papers
  39. tnpsc thervupettagam
  40. tnpsc website
  41. tnpsc group 4 question papers
  42. tnpsc group 4 general tamil
  43. tnpsc hall ticket download
  44. tnpsc group 2 syllabus
  45. group 4 syllabus
  46. tnpsc group 4syllabus

கருத்துரையிடுக

0 கருத்துகள்