Type Here to Get Search Results !

குரூப் - 4 GK Notes– 1 இந்திய அரசியலமைப்பு

0


எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST





Download Now






---------------

இந்திய அரசியலமைப்பு (10th குடிமையியல்)

1. ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படை கொள்கைகளை சார்ந்து உள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படை சட்டமே ______ஆகும்? அரசியலமைப்பு

2. அரசியலமைப்பு என்ற கொள்கை முதன் முதலில் எங்கு தோன்றியது? அமெரிக்க ஐக்கிய நாடுகள்

3. இந்திய அரசியல் நிர்ணய சபை எதன் கீழ் உருவாக்கப்பட்டது? அமைச்சரவைத் தூதுக்குழு திட்டம்

4. அமைச்சரவைத் தூதுக்குழு திட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1946

5. இந்திய அரசியல் நிர்ணய சபையில் எத்தனை மாகாண பிரதிநிதிகள் இடம்பெற்றனர்? 292

6. இந்திய அரசியல் நிர்ணய சபையில் எத்தனை சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள் இடம்பெற்றனர்? 93

7. இந்திய அரசியல் நிர்ணய சபையில் பலுசிஸ்தான் சார்பில் எத்தனை பேர் இடம்பெற்றனர்? ஒருவர்

8. இந்திய அரசியல் நிர்ணய சபையில் மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் எத்தனை பேர் இடம்பெற்றனர்? 3

9. இந்திய அரசியல் நிர்ணய சபையில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இடம் பெற்றனர்? 389

10. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடந்தது? டிசம்பர் 9,1946 (2013 , 2019 G4)

11. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?

சச்சிதானந்த சின்கா

12. இந்திய அரசியல் நிர்ணய சபையின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்? H.C முகர்ஜி மற்றும் V.T.கிருஷ்ணமாச்சாரி

13. இந்திய அரசியல் நிர்ணய சபையின் கூட்டத் தொடர் எத்தனை அமர்வுகளாக நடைபெற்றது? 11 அமர்வுகள்

14. இந்திய அரசியல் நிர்ணய சபையின் கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெற்றது? 166 நாட்கள்

15. இந்திய அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்தின் போது எத்தனை திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன? 2473

16. சட்ட வரைவு குழு தலைவராக நியமிக்கப்பட்டவர்? பி. ஆர். அம்பேத்கர் (2016 G4), (2016 VAO)

வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி - 29 ஆகஸ்ட் 1947 (2019 G4)

17. இந்திய அரசியலமைப்பின் தந்தை என அறியப்படுபவர் யார்? டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

18. இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது? நவம்பர் 26 1949

19. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது எத்தனை பாகங்கள் இந்திய அரசியலமைப்பில் இருந்தன? 22 பாகங்கள்

20. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது எத்தனை சட்டபிரிவுகள் இந்திய அரசியலமைப்பில் இருந்தன? 395 சட்டபிரிவுகள்

21. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது எத்தனை அட்டவணைகள் இந்திய அரசியலமைப்பில் இருந்தன? 8 அட்டவணைகள்

22. எப்போது இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது? ஜனவரி 26 1950

23. இந்திய அரசமைப்புச் சட்டம் யாரால் கைப்பட எழுதப்பட்டது? பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா

24. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த பாணியில் கைப்பட எழுதப்பட்டது? இத்தாலிய பாணி

25. உலகிலுள்ள எழுதப்பட்ட அனைத்து அரசியலமைப்புகளைவிடவும் மிக நீளமான அரசியலமைப்பு? இந்திய அரசியலமைப்பு

26. அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதை குறிக்கும் சொல் எது? முகவுரை

27. அரசியலமைப்பின் திறவுகோல் எனக் குறிப்பிடப்படுவது எது? முகவுரை

28. குறிக்கோள் தீர்மானத்தை கொண்டு வந்தவர் யார்? ஜவஹர்லால் நேரு

29. குறிக்கோள் தீர்மானம் எப்போது இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது? ஜனவரி 22 1947

30. முகவுரை எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி திருத்தப்பட்டது? 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம்

31. எந்த ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது? 1976 (2014 G4)

32. 42வது சட்ட திருத்தத்தின்படி முகவுரையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மூன்று புதிய சொற்கள் என்னென்ன? சமதர்மம், சமயசார்பின்மை, ஒருமைப்பாடு

33. எந்த சொற்களுடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது? இந்திய மக்களாகிய நாம்

34. இந்திய அரசியலமைப்பின் ஆதாரம் எது? இந்திய மக்கள்

35. எந்த ஆண்டு பிரெஞ்சு புரட்சியின்போது சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கமாகின? 1789

36. சிட்டிசன் எனும் சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது? இலத்தீன் (2014 G4)

37. சிவிஸ் எனும் இலத்தீன் சொல்லின் பொருள் என்ன? ஒரு நகர அரசில் வசிப்பவர்

38. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பாகம், சட்டப்பிரிவுகள் குடியுரிமை பற்றி விளக்குகின்றன? பாகம்-2 சட்டப் பிரிவில் 5ல் இருந்து 11 வரை

39. எந்த ஆண்டு இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டது? 1955

40. இந்திய குடியுரிமை சட்டம் எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது? 8 முறை

41. இந்திய குடியுரிமை சட்டம் வழங்கிய காமன்வெல்த் குடியுரிமை எந்த ஆண்டு அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி நீக்கப்பட்டது? 2003

42. குடியுரிமை சட்டம் 1955 குடியுரிமை பெற எத்தனை வழிகளை பரிந்துரை செய்கிறது? 5

43. குடியுரிமை சட்டம் 1955 பரிந்துரை செய்யும் 5 வழிகள் என்னென்ன? பிறப்பு, வம்சாவளி, பதிவுசெய்தல், இயல்புரிமை மற்றும் பிரதேச இணைப்பு

44. எந்த நாளன்று அல்லது அதற்குப் பின்னரோ இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய குடிமக்களாக கருதப்படுகின்றனர்? 1950 ஜனவரி 26

45. குடியுரிமை சட்டம் 1955 படி எந்த வழிகளில் குடியுரிமையை இழக்கலாம்? 3

46. குடியுரிமை சட்டம் 1955 இன் படி உரிமையை இழக்க பரிந்துரைக்கப்படும் முறைகள் என்னென்ன? குடியுரிமையை துறத்தல், முடிவுறச்செய்தல், இழத்தல்

47. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பகுதி அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகிறது? பகுதி 3

48. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன? சட்டப்பிரிவு 12 லிருந்து 35 வரை

49. முதலில் இந்திய அரசியலமைப்பு எத்தனை அடிப்படை உரிமைகளை வழங்கியது? ஏழு அடிப்படை உரிமைகள்

50. தற்போது எத்தனை அடிப்படை உரிமைகள் உள்ளன? ஆறு அடிப்படை உரிமைகள்

51. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படுகிறது? பகுதி-3

52. சமத்துவ உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள் என்னென்ன? பிரிவு 14 லிருந்து 18 வரை

53. சுரண்டலுக்கு எதிரான உரிமைகள் பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள் என்னென்ன?

பிரிவு 23 மற்றும் 24

54. சுதந்திர உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள் என்னென்ன? பிரிவுகள் 19 முதல் 22 வரை

55. சமயச் சார்பு உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள்? பிரிவு 25 முதல் 28 வரை

56. கல்வி கலாச்சார உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள்? பிரிவு 29 முதல் 30

57. அரசியமைப்பு கூப்பிட்டு தீர்வு காணும் உரிமை எந்த பிரிவின்கீழ் வைக்கப்பட்டுள்ளது? பிரிவு 32

58. கீழுள்ள பிரிவுகளின்படி பிரிவுகளின் சட்டங்களை குறிப்பிடுக?

பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்

பிரிவு 15 – மதம் இனம் சாதி பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதை தடை செய்தல்

பிரிவு 16 – பொது வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பு அளித்தல்

பிரிவு 17- தீண்டாமை ஒழித்தல்

பிரிவு 18 – ராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களை தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்

பிரிவு 19 – பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை ,அமைதியான முறையில் கூட்டம் கூறுவதற்கு உரிமை, சங்கங்கள் அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை

பிரிவு 20 – குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை

பிரிவு 21 – வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதுகாப்புப் பெறும் உரிமை

பிரிவு 21A – தொடக்கக் கல்வி பெறும் உரிமை

பிரிவு 22 – சில வழக்குகளில் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கான பாதுகாப்பு உரிமை

பிரிவு 23 – கட்டாய வேலை கொத்தடிமை முறை மற்றும் மனித தன்மையற்ற வியாபாரத்தை தடுத்தல்

பிரிவு 24 – தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழித்தல்

பிரிவு 25 – எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும் பரப்பவும் உரிமை

பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை

பிரிவு 27 – எந்த ஒரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்

பிரிவு 28 – மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருக்க உரிமை

பிரிவு 29 – சிறுபான்மையினரின் எழுத்து ,மொழி மற்றும் கலாச்சார பாதுகாப்பு

பிரிவு 30 – சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் உரிமை

பிரிவு 32 – தனிப்பட்டவரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது நீதிமன்றத்தை அணுகி உரிமை பெறுதல்

59 அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து சொத்துரிமை எத்தனையாவது சட்ட திருத்தத்தின்படி நீக்கப்பட்டது? 44வது அரசியலமைப்பு சட்ட திருத்தம்

60. 44வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது? 1978

61. இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவின்படி சொத்துரிமை நீக்கப்படுவதற்கு முன் இருந்தது?

பிரிவு 31

62. தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவின்கீழ் சொத்துரிமை ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது? பகுதி XII, பிரிவு 300A

63. குடிமக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய முதல் எழுதப்பட்ட ஆவணம் எது? இங்கிலாந்து மன்னரால் வெளியிடப்பட்ட உரிமைகள் பட்டயம்

64. உரிமைகள் பட்டயம் யாரால் வெளியிடப்பட்டது? இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜான்

65. எந்த ஆண்டு உரிமைகள் பட்டயம் வெளியிடப்பட்டது? 1215

66. இங்கிலாந்து மன்னரால் வெளியிடப்பட்ட உரிமைகள் பட்டயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மகாசாசனம்

 

67. நீதிமன்ற முத்திரையுடன் நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை எவ்வாறு அழைக்கப்படும்? நீதிப் பேராணை

68. சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையின் பெயரென்ன? நீதிப்பேராணை

69. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் எத்தனை வகையான நீதிப்பேராணை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன? 5

70. நீதிமன்றங்கள் வெளியிடும் ஐந்து வகையான நீதிப் பேராணைகள் என்னென்ன?

ஆட்கொணர்வு நீதிப்பேராணை,கட்டளை உறுத்தும் நீதிப் பேராணை, தடை உறுத்தும் நீதிப் பேராணை ,ஆவணக் கேட்பு நீதிப்பேராணை, தகுதி முறை வினவும் நீதிப்பேராணை

71. அரசியலமைப்பின் பாதுகாவலன் என அழைக்கப்படுவது எது? உச்சநீதிமன்றம்

72. உச்ச நீதிமன்றம் ஏன் அரசியலமைப்பின் பாதுகாவலன் என அழைக்கப்படுகிறது?

மக்களின் உரிமைகளை காப்பதினால்

73. சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாக்கும் நீதிப்பேராணை எது? ஆட்கொணர்வு நீதிப்பேராணை

74. மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனு தொடர்பான பணியினை சம்பந்தப்பட்ட துறையில் இருந்து நிறைவேற்றிக்கொள்ள முடியும் இது எவ்வகை நீதிப்பேராணை? கட்டளையுறுத்தும் நீதிப் பேராணை

75. எந்த நீதிப்பேராணை ஒரு கீழ் நீதிமன்றம் தனது சட்ட எல்லையை தாண்டி செயல்படுவதை தடுக்கிறது? தடையுறுத்தும் நீதிப்பேராணை

76. எந்த நீதிப்பேராணையின் மூலம் உயர் நீதிமன்றம் ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்ப செய்ய கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட முடியும்? ஆவணக் கேட்பு பேராணை

77. என்ன பேராணை சட்டத்திற்குப் புறம்பாக தகாத முறையில் அரசு அலுவலகத்தை கைப்பற்றுவதை தடைசெய்கிறது? தகுதிமுறை நீதிப்பேராணை

78. எந்த பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்பட்டும்பொழுது சட்டப் பிரிவு 19ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது? சட்டப்பிரிவு 352

79. எந்த சூழ்நிலையிலும் குடியரசுத் தலைவரால் எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கீழ் வழங்கப்பட்ட உரிமைகளை தடை செய்ய முடியாது? சட்டப்பிரிவு 20 மற்றும் 21

80. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது? பகுதி-4

81. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்ட பிரிவுகள் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளை குறிப்பிடுகின்றன? சட்டப்பிரிவு 36 முதல் 51 வரை

82. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் பொருளடக்கம் மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் எத்தனை பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன? மூன்று பிரிவுகள்

83. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் இன் மூன்று பிரிவுகள் என்னென்ன? சமதர்ம காந்திய மற்றும் தாராள அறிவு சார்ந்தவை

84. அரசு நெறிமுறை கோட்பாடுகளின் நோக்கமென்ன? சமுதாய நலனை மக்களுக்கு தருவது

85. அரசு நெறிமுறைக் கோட்பாடுகளை இந்திய அரசமைப்பின் புதுமையான சிறப்பம்சம் என கூறியவர் யார்? டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

86. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு திருத்தப்பட்டு பிரிவு 21A சேர்க்கப்பட்டுள்ளது? பிரிவு 45

87. பிரிவு 21Aஇல் தொடக்கக் கல்வியை அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்டுள்ளது எத்தனையாவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டுள்ளது? 86 வது அரசியலமைப்பு சட்ட திருத்தம்

88. 86 வது சட்டத்திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது? 2002

89. EECE-என்பதன் விரிவாக்கம் என்ன? Early childhood care and education

90. பிரிவு 21A ன் கீழ் எத்தனை வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முன்பருவ மழலையர் கல்வியை வழங்க அறிவுறுத்துகிறது? 6 வயது வரை

91. அடிப்படை உரிமைகள் எந்த அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை? அமெரிக்க ஐக்கிய நாடுகள்

92. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது? அயர்லாந்து

93. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கடமைகள் என்பவை எந்த அரசியலமைப்பின் தாக்கத்தால் சேர்க்கப்பட்டவை? முன்னால் சோவியத் யூனியன்

94. அடிப்படை கடமைகள் குறித்து ஆராய பரிந்துரை செய்யப்பட்ட கமிட்டி எது? சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டி

95. சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டி எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? 1976

96. எத்தனையாவது சட்டத்திருத்தம் நமது அரசியலமைப்பில் குடிமக்களின் பொறுப்புகள் சிலவற்றை சேர்த்தது? 42-வது சட்டத்திருத்தம்

97. 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது? 1976

98. அரசியலமைப்பின் கடமைகள் இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் உள்ளன? பகுதி IV A

99. பகுதி IVA  எந்த ஒரே ஒரு பிரிவை மட்டும் கொண்டது? 51 A

100. அடிப்படை கடமைகள் உருவாக்கப்பட்டபோது எத்தனை அடிப்படை கடமைகள் இருந்தது? பத்து

101. தற்போது எத்தனை அடிப்படை கடமைகள் உள்ளன? 11

102. இறுதியாக எந்த ஆண்டு பதினோராவது அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டது? 2002

103. 11வது அடிப்படைக் கடமையாக இயற்றப்பட்டது எது? பெற்றோர்கள் அல்லது இந்திய குடிமக்கள் 6 முதல் 11 வயது வரை உள்ள தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும்

104. மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு பட்டியலில் எத்தனை பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது? 3

105. மூன்று அதிகாரப்பகிர்வு பட்டியல்கள் என்னென்ன? மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொதுப்பட்டியல்

106. மத்திய அரசுக்கு சொந்தமான பட்டியலில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை எது பெற்றுள்ளது? நாடாளுமன்றம்

107. மத்திய அரசு பட்டியலில் தற்போது எத்தனை துறைகள் உள்ளன? 100

108. மாநில அரசு பட்டியலில் தற்போது எத்தனை துறைகள் உள்ளன? 61

109. பொதுப்பட்டியலில் தற்போது எத்தனை துறைகள் உள்ளன? 52

110. எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு 42-சட்டத் திருத்தத்தின்படி மாநிலப் பட்டியலிலிருந்து 5 துறைகள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது? 1976

111. மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 5 துறைகள் என்னென்ன? கல்வி, காடுகள், எடைகள் மற்றும் அளவைகள், பறவைகள் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு, மற்றும் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற அமைப்புகளை தவிர பிற நீதிமன்றங்களின் நீதி நிர்வாகம்

112. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் குறித்து சட்டம் இயற்றும் பொழுது முரண்பாடு ஏற்பட்டால் எது இயற்றும் சட்டமே இறுதியானது? மத்திய அரசு

113. தமிழக அரசு மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதுமாக ஆராய யாருடைய தலைமையின்கீழ் மூவர் குழு ஒன்றை நியமித்து? டாக்டர் பி.வி ராஜமன்னார்

114. டாக்டர் பி.வி ராஜமன்னார் குழு எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது? 1969

115. மத்திய மாநில அரசுகளின் நிதி சார்ந்த உறவுகளைப் பற்றி விளக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி மற்றும் சட்டப் பிரிவு என்ன? பகுதி XII சட்டப்பிரிவு 268 இலிருந்து 293 வரை

116. எந்தப் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிதிக் குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசால் சில வரிகள் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மத்திய அரசாலும் மாநில அரசாலும் பிரித்துக்க்கொள்ளப்படுகின்றன? இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 280

117. மத்திய மாநில அரசுகளின் உறவினை விசாரிக்க முன்னாள் பிரதமர் திருமதி.இந்திராகாந்தி அவர்களால் நியமிக்கப்பட்ட குழு எது? சர்க்காரியா குழு

118. சர்க்காரியா குழு எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது? 1983

119. சர்க்காரியா குழுவின் 247 பரிந்துரைகளில் எத்தனை பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தியது? 180

120. எந்த ஆண்டு மாநிலங்களுக்கிடையிலான குழு அமைக்கப்பட்டது? 1990

121. அலுவலக மொழிகள் பற்றி விவரிக்கும் சட்டப்பிரிவுகள் என்னென்ன? 343 லிருந்து 351 வரை

122. அரசியலமைப்பின் எந்த சட்ட பகுதி அலுவலக மொழிகள் பற்றி விவரிக்கின்றன? பகுதி XVII

123. முதலாவது மொழி குழு எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது? 1955

124. முதலாவது மொழி குழு தனது அறிக்கையை எந்த ஆண்டு சமர்ப்பித்தது? 1956

125. முதலாவது மொழி குழு அறிக்கையின் தொடர்ச்சியாக நாடாளுமன்றம் எந்த ஆண்டில் அலுவலக மொழி சட்டம் இயற்றியது? 1963

126. எந்த ஆண்டு அலுவலக மொழிகள் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது? 1967

127. மொழிகள் அரசியலமைப்பின் எத்தனையாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது? எட்டாவது அட்டவணை

128. தொடக்கத்தில் எத்தனை மொழிகள் அரசியலமைப்பின் அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன? 14 மொழிகள்

129. தற்போது எத்தனை அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் அட்டவணையில் உள்ளன? 22 மொழிகள்

130. எந்த ஆண்டு இந்திய அரசு செம்மொழிகள் எனும் புதிய வகைப்பாட்டினை ஏற்படுத்த தீர்மானித்தது? 2004

131. தற்போதுவரை எத்தனை மொழிகள் செம்மொழி தகுதியைப் பெற்றுள்ளன? 6

முதன் முதலில் செம்மொழி தகுதியைப் பெற்ற மொழி எது? தமிழ்

தமிழ் மொழி எந்த ஆண்டு செம்மொழி தகுதியைப் பெற்றது? 2004

சமஸ்கிருதம் எந்த ஆண்டு செம்மொழித் தகுதியைப் பெற்றது? 2005

தெலுங்கு எந்த ஆண்டு செம்மொழி தகுதியைப் பெற்றது? 2008

கன்னடம் எந்த ஆண்டு செம்மொழி தகுதியைப் பெற்றது? 2008

மலையாளம் எந்த ஆண்டு செம்மொழி தகுதியைப் பெற்றது? 2013

ஒடியா எந்த ஆண்டு செம்மொழி தகுதியைப் பெற்றது? 2014

132. அரசியலமைப்பின் எத்தனை வகையான அவசர நிலைகள் பற்றி கூறப்பட்டுள்ளது?

மூன்றுவகை

133. மூன்று வகை அவசர நிலைகள் என்னென்ன? தேசிய அவசர நிலை, மாநில அவசர நிலை, பொருளாதார நிலை

134. தேசிய அவசர நிலையின் சட்டப்பிரிவு என்ன? 352

135. தேசிய அவசர நிலையை அறிவிக்கலாம்? குடியரசுத் தலைவர்

136. எப்போது தேசிய அவசரநிலை கொண்டுவரப்படும்? போர் வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது உடனடி ஆபத்து அல்லது அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால்

137. போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும் பொழுது அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? வெளிப்புற அவசரநிலை

138. ஆயுதமேந்திய கிளர்ச்சி காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும் பொழுது அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? உள்நாட்டு அவசர நிலை

139. தேசிய அவசரநிலை ‌எந்தெந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன? 1962, 1971, 1975

140. மாநில அவசரநிலை எந்த சட்டப்பிரிவின் கீழ் அறிவிக்கப்படுகிறது? 356 (2013 VAO)

141. மாநில அவசர நிலை 352ன்ப்படி நடைமுறையில் இருந்தாலும் அல்லது தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு தகுந்த சூழல் இல்லை என்று சான்றிதழ் அளித்தாலும் எத்தனை ஆண்டுகள் தாண்டி தொடரமுடியும்? ஓராண்டு

142. மாநில அவசர நிலையின் அதிகபட்ச காலம் எவ்வளவு? மூன்று ஆண்டுகள்

143. இந்தியாவில் முதன் முறையாக எந்த ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது? 1951

144. இந்தியாவில் முதன் முறையாக எந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது? பஞ்சாப்

145. நிதி சார்ந்த அவசரநிலை எந்த சட்டப் பிரிவின் கீழ் அறிவிக்கப்படும்? 360

146. நிதி சார்ந்த அவசர நிலையின் போது மத்திய மாநில அரசு ஊழியர்களின் ஊதியம் படிகள் யாருடைய ஆணையின் மூலம் குறைக்கப்படும்? குடியரசுத் தலைவர்

147. “அமெண்ட்மெண்ட்” எனும் சொல்லின் பொருள் என்ன? மாற்றம், மேம்படுத்துதல் மற்றும் சிறு மாறுதல்

148. அரசியலமைப்பின் எந்தப் பகுதி அரசியல் அமைப்பினை சட்ட திருத்தம் செய்வது பற்றிய நடைமுறைகளை தெரிவிக்கிறது? பகுதி XX

149. அரசியலமைப்பின் எந்தப் சட்டப்பிரிவு அரசியல் அமைப்பினை சட்ட திருத்தம் செய்வது பற்றிய நடைமுறைகளை தெரிவிக்கிறது? சட்டப்பிரிவு 368

150. அரசியலமைப்பு சட்ட திருத்தம் செய்யப்படும்போது நாடாளுமன்றத்தின் எந்த அவைகளில் அரசியல் சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட வேண்டும்? இரு அவைகளிலும்

151. அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை எவற்றால் மட்டுமே கொண்டு வரமுடியும்? நாடாளுமன்றம்

152. அரசியலமைப்பின் 368 ஆவது சட்டப்பிரிவு எத்தனை வகைகளில் அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை செய்ய வழிவகை செய்கிறது? மூன்று வகைகள்

153. மூன்று சட்டத்திருத்த வழிமுறைகள் என்னென்ன?

1. நாடாளுமன்றத்தின் சாதாரண அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுவது

2. நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுவது

3. நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதி பெரும்பான்மையுடன் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றங்களில் ஒப்புதலை பெறுவதன் மூலம் திருத்தப்படுவது

154. அரசியலமைப்பின் எத்தனையாவது சட்டத்திருத்தம் சிறிய அரசியலமைப்பு என அறியப்படுகிறது? 42-வது சட்டத்திருத்தம்

155. எந்த ஆண்டு அரசியலமைப்பு சட்ட செயல்பாட்டிற்கான தேசிய சீராய்வு ஆணையம் இந்திய அரசால் அமைக்கப்பட்டது? 2000

156. அரசியலமைப்பு செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய யாருடைய தலைமையில் தேசிய சீராய்வு ஆணையம் அமைக்கப்பட்டது? திரு.எம்.என்.வெங்கடாசலய்யா

157. அரசின் பல்வேறு நிலைகள் அவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் பங்களிப்புகள் குறித்து புதிய நோக்கத்தோடு ஆராய யாருடைய தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது? எம்.எம்.பூஞ்சி

158. எம்.எம்.பூஞ்சி ஆணையம் எப்போது ஏற்படுத்தப்பட்டது? ஏப்ரல் 2007

  1. tnpsc
  2. tnpsc group
  3. tnpsc group 4
  4. tnpsc group 2
  5. tnpsc group 1
  6. tnpsc departmental exam
  7. tnpsc exam
  8. group 4 exam
  9. tnpsc academy
  10. vao exam
  11. tnpsc group 4 hall ticket
  12. tnpsc group 4 exam
  13. tnpsc group 4 syllabus
  14. tnpsc group 2 syllabus
  15. tnpsc books
  16. tnpsc portal
  17. tnpsc group 1 syllabus
  18. tnpsc hall ticket
  19. tnpsc notification
  20. tnpsc group 2 notification
  21. tnpsc syllabus
  22. tnpsc portal current affairs
  23. tnpsc result
  24. tnpsc group 4 study materials
  25. tnpsc group 4 previous year question papers
  26. tnpsc group 2 previous year question papers
  27. tnpsc login
  28. tnpsc group 4 apply online
  29. tnpsc official website
  30. tnpsc answer key
  31. tnpsc previous year question papers
  32. tnpscacademy
  33. group 2 previous year question papers
  34. tnpsc group 4 books
  35. group 4 question papers
  36. tnpsc group 4 app
  37. group 4 previous year question papers
  38. tnpsc question papers
  39. tnpsc thervupettagam
  40. tnpsc website
  41. tnpsc group 4 question papers
  42. tnpsc group 4 general tamil
  43. tnpsc hall ticket download
  44. tnpsc group 2 syllabus
  45. group 4 syllabus
  46. tnpsc group 4syllabus

கருத்துரையிடுக

0 கருத்துகள்