எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
நூல் வெளி 12th Tamil Book |
||||||||||||||||
• திரு + குறள்
= திருக்குறள். சிறந்த குறள் வெண்பாக்களால்
ஆகிய நூல் ஆதலால் இப்பெயர் பெற்றது. • இது பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில்
ஒன்று. • குறள் – இரண்டடி வெண்பா, திரு – சிறப்பு
அடைமொழி. • திருக்குறள் என்பது அடையடுத்த கருவி ஆகுபெயர்
ஆகும். • குறள், உலகப்பொது மறை; அறவிலக்கியம்;
தமிழர் திருமறை; • மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும்
முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக் காட்டிய நூல். • ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம் முதலிய
உலக மொழிகள் பலவற்றிலும் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி,
பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் என்னும் பழமொழிகள் இந்நூலின் பெருமையை விளக்குகின்றன. • இவற்றுள் ‘நால்’ என்பது நாலடியாரையும் ‘இரண்டு’ என்பது திருக்குறளையும்
குறிக்கும். • தருமர்,
மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையார், மல்லர், பரிப்பெருமாள்,
காளிங்கர், வள்ளுவர் நூற்கு, எல்லையுரை செய்தார் இவர். என்று ஒரு பழம்பாடல் திருக்குறளுக்கு
உரை எழுதியவர்களின் பட்டியலொன்றைத் தருகிறது. • ஏட்டுச் சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
1812. • “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட
தமிழ்நாடு” எனப் பாரதியாரும், • “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ்
வையகமே”எனப் பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர். • தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர்
சிலையினை, கன்னியாகுமரியில் நிறுவியுள்ளது. • திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில்
வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
|
நூல் வெளி 9th Tamil Book |
• உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின்
பங்ளிப்பாக அமைந்த நூல் திருக்குறள். • இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும்
முன்னிலைப்படுத்தாத உலகப்பொதுமறை
நூல் இந்நூல். • முப்பால், பொதுமறை, பொய்யாமொழி,
வாயுறை வாழ்த்து, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை போன்ற பல பெயர்களால்
அழைக்கப்படுகிறது. • தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர்,
மல்லர், பரிப்பெருமாள், காளிங்கள் ஆகிய பதின்மரால் முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது. • இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது எனபர். • இந்நூல் பதினெண்கீழ்கணக்கு நூல்களுள்
ஒன்று. • இந்நூலை போற்றும் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை. • உலகின் பல மொழிகளிலும் பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன்,
இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள் • தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் இந்நூல் • பிற அறநூல்களைப் போல் அல்லாமல் பொது
அறம் பேணும் திருக்குறளை இயற்றிவர் திருவள்ளூவர் • இவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர்,
தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்பேதார், பெருநாவலர் போன்ற சிறப்பு
பெயர்களும் உண்டு. |
நூல் வெளி 8th Tamil Book |
• பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய
சிறப்பு பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். • திருக்குறள் உலகில் பல்வேறு மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் • அறம், பொருள், இன்பம் என முப்பால்
பகுப்பகள் கொண்டது • அறத்துபால் பாயிரவியல், இல்லறவியல்
துறவறவியல், ஊழியல் என நான்கு இயல்களை கொண்டது. • பொருட்பால் அரசியல், அமைச்சியல் ஒழிபியல்
என மூன்று இயல்களை கொண்டது. • இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என
இரு இயல்களை கொண்டது. |
நூல் வெளி 7th Tamil Book |
• தமிழ்நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும். • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால்,
இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புகளைக் கொண்டது. • இதில் அறம்- 38, பொருள்-70, இன்பம்-25
என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள்
உள்ளன. • இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி
போன்ற பிற பெயர்களும் உள்ளன. • திருக்குறள் வகுப்புகள் நடத்தியும்
தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார்
வீ. முனிசாமி. • நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால்
மக்களைக் கவர்ந்தவர் இவர். • வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய
வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். • உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்
என்னும் இவரது நூல் பெரும் புகழ் பெற்றது. • இக்கட்டுரை சிந்தனைக் களஞ்சியம் என்னும்
இவரது நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது. |
நூல் வெளி 6th Tamil Book |
• திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக்
கூறியுள்ளார். • வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர்,
பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு. • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால்,
இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • திருக்குறள் 133 அதிகாரங்களில்
1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. • “திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும்
இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. • திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து
முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. • நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. |
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham