நூல் வெளி (6th New Book பாடம் 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்) |
---|
1. தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.
2. கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர். 3. புதிய விடியல்கள் , இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும். |
நூல் வெளி (6th New Book பாடம் 8.1 பராபரக்கண்ணி) |
---|
1. பராபரக்கண்ணி பாடலை எழுதியவர் தாயுமானவர்.
2. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர். 3. இந்நூலைத் (பராபரக்கண்ணி) தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர். 4. இப்பாடல்கள் ‘பராபரக் கண்ணி’ என்னும் தலைப்பில் உள்ளன. 5.‘கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை. |
நூல் வெளி (6th New Book பாடம் 8.2 நீங்கள் நல்லவர்) |
---|
1. கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.
2. கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர். 3. இப்பாடப்பகுதி (நீங்கள் நல்லவர்) கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. |
நூல் வெளி (6th New Book பாடம் 8.4 பாதம்) |
---|
1. எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
2. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன. 3. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். 4. இக்கதை (பாதம்) “தாவரங்களின் உரையாடல்” என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. |
நூல் வெளி (6th New Book பாடம் 9.1 ஆசியஜோதி) |
---|
1. தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
2. முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். 3. கவிமணி என்னும் பட்டம் பெற்றவர். 4. ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. 5. இந்நூல் (ஆசியஜோதி) புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது. |
Thank🙏🙏
பதிலளிநீக்குminnal vega kanitham