நூல் வெளி (6th New Book பாடம் 4.1 மூதுரை) |
---|
1. மூதுரையின் ஆசிரியர் ஒளவையார்.
2. இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். 3. மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். 4. சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. 5. இந்நூலில் (மூதுரை) முப்பத்தொரு பாடல்கள் உள்ளன. |
நூல் வெளி (6th New Book பாடம் 4.2 துன்பம் வெல்லும் கல்வி) |
---|
1. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
2. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர். 3. மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர். |
நூல் வெளி (6th New Book பாடம் 5.1 ஆசாரக்கோவை) |
---|
1. ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
2. இவர் பிறந்த ஊர் கயத்தூர். 3. ஆசாரக்கோவை என்பதற்கு “நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு” என்பது பொருள். 4. இந்நூல் (ஆசாரக்கோவை) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 5. இந்நூல் (ஆசாரக்கோவை) நூறு வெண்பாக்களைக் கொண்டது. |
நூல் வெளி (6th New Book பாடம் 5.2 கண்மணியே கண்ணுறங்கு) |
---|
1. தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
2. தால் என்பதற்கு நாவு (நாக்கு) என்று பொருள். நாவை அசைத்து பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு) எனப் பெயர் பெற்றது. 3. குழந்தையின் அழுகையை நிறுத்தவும், குழந்தைகளை தூங்க வைக்கவும் பாடும் பாட்டு தாலாட்டு |
நூல் வெளி (6th New Book பாடம் 6.1 நானிலம் படைத்தவன்) |
---|
1. முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
2. பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். 3. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர். |
நூல் வெளி (6th New Book பாடம் 6.2 கடலோடு விளையாடு) |
---|
1. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும்.
2. காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர். 3. ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில் பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும். |
minnal vega kanitham