Type Here to Get Search Results !

6th New Book நூல் வெளி (Unit 1, 2, 3)

நூல் வெளி (6th பாடம் 1.1 இன்பத்தமிழ்)
1. பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
2. பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
3. தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார். எனவே, இவர் “புரட்சிக்கவி” என்று போற்றப்படுகிறார்.
4. இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
5. இப்பாடல், ‘பாரதிதாசன் கவிதைகள்’ என்ற நூலில் ‘தமிழ்’ என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.

1. பாரதிதாசனின் இயற்பெயர் _______ ஆகும்.

A) செந்தமிழ்தாசன்

B) வணங்கா முடி

C) ராமலிங்கம்

D) கனக சுப்புரத்தினம்

2. _____ பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.

A) பெருஞ்சித்திரனார்

B) நாமக்கல் கவிஞர்

C) பாரதியார்

D) மீனாட்சி சுந்தரனார்

3. பாரதிதாசன் அவர்கள் _______ என்பவரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

A) பெருஞ்சித்திரனார்

B) நாமக்கல் கவிஞர்

C) பாரதியார்

D) மீனாட்சி சுந்தரனார்

4. தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளவர் யார்?

A) பாரதியார்

B) வாணிதாசன்

C) தாராபாரதி

D) பாரதிதாசன்

5. புரட்சிக்கவி, பாவேந்தர் என்று போற்றப்படுகிறவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) தாராபாரதி

D) வாணிதாசன்


நூல் வெளி (6th பாடம் 1.2 தமிழ்க்கும்மி)
1. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்.
2. இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
3. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
4. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்.
5. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.
6. இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
7. இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
8. இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது

1. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பாவலர் யார்?

A) கோமல் சுவாமிநாதன்

B) திரு.வி.க

C) பெருஞ்சித்திரனார்

D) மீனாட்சி சுந்தரனார்

2. பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?

A) கோமல் சுவாமிநாதன்

B) திரு.வி.க

C) பெருஞ்சித்திரனார்

D) மீனாட்சி சுந்தரனார்

3. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களின் ஆசிரியர் யார்?

A) கோமல் சுவாமிநாதன்

B) பெருஞ்சித்திரனார்

C) மீனாட்சி சுந்தரனார்

D) திரு.வி.க

4. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்?

A) பெருஞ்சித்திரனார்

B) கவிமணி

C) சுந்தரனார்

D) பாரதியார்

5. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் யார்?

A) கோமல் சுவாமிநாதன்

B) திரு.வி.க

C) மீனாட்சி சுந்தரனார்

D) பெருஞ்சித்திரனார்

6. கனிச்சாறு என்னும் நூல் __________________ தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.

A) 6

B) 7

C) 8

D) 9


நூல் வெளி (6th New Book பாடம் 2.1 சிலப்பதிகாரம்)
1. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
2. இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது.
3. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
4. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
5. இதுவே தமிழின் முதல் காப்பியம்.
6. இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது.
7. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

நூல்வெளி (6th New Book பாடம் 2.2 காணிநிலம்)
1. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.
2. அவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
3. இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
4. எட்டயபுர மன்னரால் “பாரதி” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
5. தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
6. மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
7. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
8. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.

6th New Book பாடம் 2.6 திருக்குறள்
ஆசிரியர் குறிப்பு
1. திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
2. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார்.
3. வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு.

நூற் குறிப்பு
1. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
2. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
3. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது.
4. “திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது.
5. திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன.
6. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

நூல் வெளி (6th New Book பாடம் 3.1 அறிவியல் ஆத்திசூடி)
1.”தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து.
2. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர்.
3. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.
4. அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார்.
5. என்பதுக்கும் (80) மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

Tags

கருத்துரையிடுக

3 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham