மத்திய அரசு திட்டம்: ஒன்றிய அரசு பெண்களுக்காக அறிவித்த திட்டங்கள் ஏதேனும் மூன்றை விளக்குக. (சப்லா, ஸ்வாதர், ஸ்வயம் சித்தா)
மகளிருக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஆதரவு, 1986 (STEP)
MOWCD ஆல் தொடங்கப்பட்டது.
நோக்கம்
i.
நாடு முழுவதும் ஓதுக்கப்பட்ட மற்றும் சொத்து இல்லாத கிராமப்புற மற்றும் நகர்புற ஏழை
பெண்களுக்கு நிலையான வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை உருவாக்குதல்.
ii.
16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதிற்குட்பட்ட பெண்களுக்கு சுயதொழில்/தொழில்முனைவோராக
மாற உதவும் திறன்களை வழங்குகிறது.
i.
1982-83 ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி ஊரக திட்டத்தின் துணைத் திட்டம்
ii.
ஏழை பெண்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற சேவைகளை கிராமப்புறங்களில்
அணுக வசதி செய்தல்.
iii.
குழுக்களில் 50% எஸ்சி/எஸ்டியை சேர்ந்த பெண்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
i.
முறைசாரா துறையில் பணியாற்றும் ஏழை பெண்களின் வருமானம் மற்றும் வீட்டு செலவுகளுக்கான
பணத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்
ii.
MoWCD ஆல் தொடங்கப்பட்டது.
i.
சுய உதவி குழு உறுப்பினர்கள் அனைத்து திட்டங்கள் மற்றும் சேவைகளின் ஒருங்கிணைந்த மற்றும்
முழுமையான பயனை பெறச் செய்வதே இதன் நோக்கமாகும்.
ii.
பெண்களின் நிலை, சுகாதாரம், கல்வி மற்றும் சட்ட உரிமைகள், பொருளாதார மேம்பாடு மற்றும்
பிற சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
சப்லா [2010] [வளர்இளம் பெண்களுக்கான திட்டம்]
i.
ராஜீவ்காந்தி வளர் இளம் பெண்கள் அதிகாரமயமாக்குதல் திட்டம் அல்லது சப்லா திட்டம் என்று
அழைக்கப்படுகிறது.
ii.
பதினொன்று வயது முதல் பதினெட்டு வயதுக்குட்பட்ட வளர் இளம் பெண்களுக்கு சத்துணவு மற்றும்
நிதி உதவி இதன் நோக்கமாகும்.
iii.
ஆண்டில் 300 நாள்களுக்கு பயனாளி ஒருவருக்கு நாளொன்றுக்கு சத்துணவுக்காக ரூ.5 என்ற அடிப்படையில்
மத்திய அரசும் மாநில அரசும் சரி பாதியை பகிர்ந்து கொள்வது என்பது இந்த திட்டத்தின்
முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
iv.
அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட மையங்கள்
மூலம் செயல்படுத்தப்படும்.
[தமிழகத்தில்
299 பயனாளிகள் உள்ளனர். இவர்களுக்கான கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.1.23 லட்சம் வழங்கப்பட்டுள்ளது]
[இத்திட்டத்தின்
கீழ் வளர் இளம் பெண்களுக்கு 600 கலோரி துணை ஊட்டசத்துக்கள், 18 முதல் 20 கிராம் புரதச்சத்து
மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் ஆண்டுக்கு 300 நாட்கள் வழங்கப்படுகிறது]
[11
முதல் 14 வயதுடைய பெண்கள், கல்வி உரிமை சட்டம் 2009ன் கீழ் கொண்டு வரப்பட்டனர். இந்த
மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் பயனாளிகளாக முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும்
வடகிழக்கு மாவட்டங்கள் உள்ள 14 வயது முதல் 18 வயதுள்ள பெண்களும் அடங்குவர்]
ஸ்வாதர் கிரே [ஸ்வதர் கிரஹ்] (2016)
[கணவரை இழந்த பெண்களுக்கான இல்லங்கள்]
i.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது கடினமான சூழ்நிலைகளில் உள்ள பெண்களுக்கு
மறுவாழ்வு வசதி அளிப்பதற்காக திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
ii.
எந்தவொரு சமூக மற்றும் பொருளாதார ஆதரவும் இல்லாத சூழ்நிலையில் உள்ள பெண்கள், வீட்டு
வன்முறை, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட பெண்கள்
ஆகியோர் இதில் அடங்குவர்.
iii.
மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகளின் உதவியுடன் நிர்பயா கட்டமைப்பின் ஒரு பகுதியாக
நாடு முழுவதும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒற்றை உதவி மையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
iv.
இது தேவைப்படும் பெண்களுக்குத் தற்காலிகத் தங்குமிடம், காவல்துறை வசதிகள் மற்றும் மருத்துவ
உதவி உள்ளிட்ட பிற வசதிகளுடன் சட்ட மற்றும் உளவியல் சமூக ஆலோசனைகளை ஒருங்கிணைந்த முறையில்
வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Super anna
பதிலளிநீக்கு👏🙏💪
Very useful Anna tq so much
நீக்குminnal vega kanitham