எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
|
|
பரிதிமாற் கலைஞர் (1870 – 1903) [12th Tamil பாடம் 3.5 பொருள் மயக்கம்] |
|
1. ‘திராவிட சாஸ்திரி’
என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்ட பரிதிமாற் கலைஞர். 2. அவர் தந்தையாரிடம் வடமொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; 3. எப்.ஏ (F.A
– First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர
சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார். 4. சென்னைக் கிறித்துவக்
கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக
அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 5. 1893ஆம் ஆண்டு
சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி,
பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 6. ரூபாவதி, கலாவதி
ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். 7. ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு நாட கவியல் என்னும் நாடக இலக்கணநூலையும்
இயற்றினார். 8. இவரது தனிப்பாசுரத்
தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. 9. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த
அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. 10. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின்மூலம்
முதன் முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது.
11. பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர்
என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார். 12. தமிழ், தமிழர்
முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த
இவர் தம் 33ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். 13. “பலமொழிகட்குத்
தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது
தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி.
ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம். “ - பரிதிமாற்
கலைஞர் ('உயர்தனிச் செம்மொழி’என்னும் கட்டுரையிலிருந்து)
வினா - விடை 1. சி.வை. தாமோதரனார் பரிதிமாற்கலைஞரை எவ்வாறு போற்றினார்?
திராவிட சாஸ்திரி 2. பரிதிமாற்கலைஞர் எழுதிய நாடக நூல்கள் யாவை? ரூபாவதி, கலாவதி 3. கீழ்வரும் சொல்லின் இலக்கணத்தையும், புணர்ச்சி விதியினையும்
எழுதுக. செம்மொழி – பண்புத்தொகை செம்மொழி = செம்மை + மொழி “ஈறுபோதல்” என்ற விதிப்படி “செம்மொழி”
என்றாயிற்று. 4. பரிதிமாற்கலைஞர் தமிழுக்கு தந்திட்ட பெருமைமிகு வரிகளுள்
ஒன்றினை எழுதுக? திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தாய்மொழி செம்மொழி 5. சூரிய நாராயணர் – இதன் தமிழாக்கம் என்ன? பரிதிமாற்கலைஞர் |
|
உ.வே.சா [12th Tamil பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்] |
||||||||||||
1. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து
தமிழ கற்க வேண்டும் என்று விரும்பினார்? உ.வே.சா 2. புறநானூற்றை உ.வே.சா. அச்சில் பதிப்பித்த ஆண்டு? 1894 3. “தமிழ்த்தாத்தா”
என அழைக்கப்பட்டவர்? உ.
வே. சாமிநாதர் 4. சென்னையில் உ.வே.சா. பெயரில் நூலகம் அமைந்துள்ள இடம்?
திருவான்மியூர் 5. உ.வே.சா. சென்னை பல்கலைக்கழத்தில் டாக்டர் பட்டம் பெற்ற
ஆண்டு? 1932
|
tnpsc, tnpsc tamil, tnpsc group 4, tnpsc gk, tnpsc maths, tamil notes, tntet notes,

minnal vega kanitham