எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
Topics |
Questions |
இந்திய அரசியலமைப்பு [Box + Book Back] |
123 (25) |
மத்திய அரசு [Box + Book Back] |
168 (25) |
மாநில அரசு [Box + Book Back] |
100 (19) |
Total |
360 |
1. அரசியலமைப்பின் 42 வதுசட்டதிருத்தம் ‘குறு அரசியலமைப்பு’எனஅறியப்படுகிறது.
2. 1969 இல் மத்திய–மாநிலஅரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும் ஆராய தமிழக அரசு டாக்டர் P.V. இராஜமன்னார் தலைமையின் கீழ் மூவர் குழு ஒன்றைநியமித்தது.
3. 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 86 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் படி இந்திய அரசியலமைப்பின் பிரிவு 45 திருத்தப்பட்டு,பிரிவு 21A வின் கீழ் தொடக்கக் கல்வி, அடிப்படை உரிமையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம் மாநிலஅரசுகள் முன்பருவ மழலையர் கல்வியை (Early Chilhood Care and Education – ECCE) 6 வயதுவரையுள்ள குழந்தைகளுக்கு வழங்க அறிவுறுத்துகிறது.
4. 1978 ஆம் ஆண்டு, 44 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தப் படி, அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31) நீக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி XII, 300A வின் கீழ் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது.
5. 2004 ஆம் ஆண்டு இந்திய அரசு “செம்மொழிகள்” எனும் புதிய வகைப்பாட்டினை ஏற்படுத்த தீர்மானித்தது. அதன் படி 6 மொழிகள் செம்மொழி தகுதியை பெற்றுள்ளன. அவை, தமிழ் (2004), சமஸ்கிருதம் (2005), தெலுங்கு (2008), கன்னடம் (2008), மலையாளம் (2013) மற்றும் ஒடியா (2014).
6. தற்போது அதிகாரப் பகிர்வு என்பது மத்திய அரசுபட்டியலில் 100 துறைகள், மாநில அரசு பட்டியலில் 61 துறைகள் மற்றும் இரண்டுக்கும் பொதுவான பொதுப்பட்டியலில் 52 துறைகள் என்றும் மாற்றப்பட்டுள்ளது. 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மாநிலப்பட்டியலில் இருந்து 5 துறைகளை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது. அவைகல்வி, காடுகள், எடைகள் மற்றும் அளவுகள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புமற்றும் உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்ற அமைப்புகளைத் தவிர பிற நீதிமன்றங்களின் நீதிநிர்வாகம் ஆகியனவாகும்.
7. 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கங்களாயின. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
8. பிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம்
பிரிவு 15 - மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடைசெய்தல்
பிரிவு 16 - பொதுவேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்
பிரிவு 17 - தீண்டாமையைஒழித்தல்
9. II. சுதந்திரஉரிமை :
பிரிவு 19 - பேச்சுரிமை,கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள், அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை
பிரிவு 20 - குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை
பிரிவு 21 - வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை
பிரிவு 21A - தொடக்கக் கல்வி பெறும் உரிமை
பிரிவு 22 - சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற் கெதிரான பாதுகாப்பு உரிமை
10. IV. சமயச்சார்புஉரிமை :
பிரிவு 25 - எந்த ஒரு சமயத் தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை
பிரிவு 26 - சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
பிரிவு 27 - எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்து வதற்கெதிரான சுதந்திரம்
பிரிவு 28 - மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடுமற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருக்க உரிமை
11. III. சுரண்டலுக்கெதிரானஉரிமை :
பிரிவு 23 - கட்டாயவேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத் தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்
பிரிவு 24 - தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்
12. V. கல்வி, கலாச்சார உரிமை :
பிரிவு 29 - சிறு பான்மையினரின் எழுத்துமற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு
பிரிவு 30 - சிறு பான்மையினரின் கல்விநிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை
13. VI. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை :
பிரிவு 32 - தனிப்பட்டவரின் அடிப்படைஉரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்
14. பிரேம் பெஹாரிநரேன் ரைஜடா என்பவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இத்தாலியபாணியில், அவரது கைப்பட எழுதப்பட்டது.
minnal vega kanitham