Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST 9th 04 நீர்க்கோளம் (01 to 50) PDF


  TNPSC GROUP 4 (1 & 2), TNEB, TET, RRB, PC. SLIP TEST


   9th  புவியியல்   நீர்க்கோளம்


1. இயற்கை வளங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தவிர்க்க இயலாத ஒன்றாகவும்____ விளங்குகிறது.

2. புவிக் கோளத்தின் நீர் வளம் மிகுந்து காணப்படுவதால்  நீர்க்கோளம் ____எனவும் அழைக்கப்படுகிறது.

3. புவியின் மேற்பரப்பில் கடல் நீரானது ____சதவிகிதமும், பனிப்பாறைகளாக  _____  சதவிகிதம் உள்ளது.

4. புவியின் நீரானது நிலைத்த ______ தன்மை உடையவை ஆகும்.

5. புவியின் மீது மேலும் கீழும் நீரின் இயக்கம் தொடர்ச்சியாக நடைபெறுவதே ____ எனப்படும்.

6. ________ ஆகிய மூன்றும் நீர் சுழற்சியின் முக்கிய செயல்பாடுகள் ஆகும்.

7. புவியில் காணப்படும் நீர் வளத்தினை _____ மற்றும் _____ என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.

8. தூய்மையான நீராக கருதப்படுவது_____.

9. சுமார் _____சதவிகிதம் அளவு நீர் ஆனது ஆறுகள் நீரோடைகள் ஏரிகள் மற்றும் குளங்களில் நீர்ம நிலையில் காணப்படுகிறது.

10. புவியின் மேற்பரப்பில் உள்ள நீரானது நீர்ப் பாறைகள் வழியாக ஊடுருவி சென்று நிலத்தின் அடியில் சேமிக்கப்படுகிறது.  இது _____ என்று 
அழைக்கப்படுகிறது.

11. ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று _____ அழைக்கப்படுகிறது.

12. பின்லாந்தில் ______ ஏரிகள் காணப்படுகின்றன.

13. ______ உள்ள நீரின் மேல் மட்ட நிலையே நிலத்தடி நீர்மட்டம் என்கிறோம்.

14. நீர், நீருக்கொள் பாறைகளின் வழியாக ஊடுருவி சென்று நீர் உட்புகாத பாறையின் மேல் பகுதியில் தேங்கி நிற்கும் நீரை ______என்கிறோம்.

15. ______ வட மற்றும் தென் மழை காலங்களில் ஒரே சீராக பரவி இருக்கவில்லை.

16. வட அரைக்கோளம் _____ நிலப்பரப்பையும் தென் அரைக்கோளம் _____ நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது.

17. நிலம் மற்றும் நீர் பரவலின் அடிப்படையில் வட அரைக்கோளம் ____என்றும் தென் அரைக்கோளம் _____ என்றும் அழைக்கப்படுகின்றன.

18. அதிக அளவிலான உணவு மற்றும் கனிம வளங்களை கொண்டிருப்பதால் கடல்களும் பெருங்கடல்களும் புவிக் கோளத்தின் _____ கருதப்படுகிறது.

19. ____ என்பவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சி நிபுணர் ஆவார்.

20. கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக _____ மேற்கொண்ட முயற்சியை பாராட்டி  'தி டைம் இதழ்' இவருக்கு 'கோளத்தின் கதாநாயகன்' 
என்ற பட்டத்தை முதன்முதலில் வழங்கி சிறப்பித்துள்ளது.

21. பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சியாளரான ______ஆழ்கடலினைப் பற்றிய மிக விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

22. ______ என்பவர்க்கு 1945 இல் 'போரின் சிலுவை' என்ற விருதும் 1985 இல் அமெரிக்க அதிபரின் சுதந்திரத்தின் பதக்கமும் வழங்கப்பட்டன.

23. நிலத்திலிருந்து கடலை நோக்கி மென்சரிவுடன்  கடலில் மூழ்கியுள்ள ஆழமற்ற பகுதியே _____ எனப்படும்.

24. மென்சரிவைக் கொண்ட சீரான கடற்படுக்கைகள் ______ காணப்படுகின்றன.

25. _____ ஆழமற்ற பகுதியாக இருப்பதனால் சூரிய ஒளி நன்கு ஊடுருவி செல்கிறது.

26. கடற்புற்கள், கடற்பாசி பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்கு சாதகமாக உள்ளது _____ பகுதி.

27. உலகின் செழிப்பான மீன்பிடிப்பு தளங்களில் ஒன்றாக உள்ளது _____பகுதி எடுத்துக்காட்டு நியூபவுண்ட்லாந்தில் ௨ள்ள ______.

28.கண்டத்திட்டுக்கள் மிக அதிக   அளவு கனிமங்களையும் _____ கொண்டுள்ளது.

29. ஆழ்துளை கிணறுகள் மூலம் எண்ணெய் எடுப்பதற்கும், சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சிறந்த இடமாக விளங்குவது ______ எடுத்துக்காட்டு அரபிக் கடலில் அமைந்துள்ள _______

30. மும்பைஹை பகுதியில் _____மில்லியன் டன் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

31. கண்டத்திட்டின் விளிம்பிலிருந்து வன்சரிவுடன் ஆழ்க்கடலை நோக்கிச் சரிந்து காணப்படும் பகுதிய் _____

32.கண்ட மேலோட்டிற்கும் கடலடி மேலோட்டிற்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குவது _____

33. கடலடி பள்ளத்தாக்குகள் மற்றும் அகழிகள் காணப்படுவது _____

34. சூரிய ஒளி மிகக் குறைந்த அளவே ஊடுருவிச் செல்வதால் _____ வெப்பநிலை மிக குறைவாகவே உள்ளது.

35. கடல்வாழ் உயிரினங்களின் வளர்சிதை மாற்றம் மெதுவாக நடைபெறும் பகுதி ____

36. கண்டச் சரிவிற்கும் கடலடிச் சமவெளிக்கும் இடையில் காணப்படும் நிலத்தோற்றம் ____ ஆகும்.

37. கடல் அடியில் வண்டல் விசிறிகளை கொண்டுள்ள பகுதி _______

38. _______ என்பது நிலப்பகுதியிலோ அல்லது நீர் பகுதியிலோ காணப்படும் 
நிலத்தோற்றங்களின்  உயரத்தை வரைந்து காட்டும் கோட்டுப்படமாகும்.

39.'Hypso'  என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் ______என்பதாகும்.

40. ஆழ்கடல் சமவெளி அல்லது அபிசெல் சமவெளி என்பது ஆழ்கடலில் காணப்படும் _____ ஆகும்.

41. கண்ட உயர்ச்சியிலிருந்து மத்திய கடலடி மலைத் தொடர்கள் வரை பரவியுள்ளது _____

42. சீராக உள்ள எவ்விதத் தோற்றங்களும் அற்ற மென் சரிவை கொண்ட பகுதி _____

43. ______ ஆறுகளால் கொண்டுவரப்பட்ட களிமண் மணல் மற்றும் வண்டல்களால் உருவாக்கப்பட்ட அடர்ந்த படிவுகளால் ஆனது.

44. _____ அபிசல் குன்றுகள், கடல் குன்றுகள், கடல்மட்ட குன்றுகள், பவளப்பாறைகள் மற்றும் வட்டப்பவளத்திட்டுகள் ஆகியன காணப்படுகின்றன.

45. ______ மிக ஆழமான பகுதி ஆகும்.

46. மொத்த கடல் அடிப்பரப்பில்____ சதவீதத்திற்கு மேல் அகழிகள் காணப்படுகிறது.

47. ______ நீரின் வெப்பநிலை  உறைநிலையை விட சற்று அதிகமாக இருக்கும்.

48.அகழிகளில் படிவுகள் ஏதும் இல்லாததினால் பெரும்பாலான அகழிகள       வன்சரிவுடன் _____ வடிவத்தில் காணப்படுகின்றன.

49. பெரும்பாலும் வலிமையான நில அதிர்வுகளின் நிலநடுக்க மேல்மையப்புள்ளி ____ காணப்படுகிறது.

50. உலகின் மிக ஆழமான கடலடி உறிஞ்சித்துளைக்கு _____ துளை என்று பெயர்.




கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham