Day 20 Age Problems (வயது கணக்குகள்) (21 to 30) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து

Age Problems (வயது கணக்குகள்) (21 to 30) NEW 9th & 10th BOOK QUESTIONS
இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD

-----------------
minnal vega kanitham

மின்னல் வேக கணிதம்

TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்
தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
1. இராமனின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் மூன்று மடங்காகும். ஐந்தாண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் இரு மடங்காகும் எனில், இராமனின் தற்போதைய வயதைக் காண்க (9TH NEW BOOK)
2. அர்ச்சுனன் வயது அவரது இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலின் இரு மடங்காகும். 20 ஆண்டுகள் கழித்து அவரது வயது அவரின் இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலுக்குச் சமம் எனில், அர்ச்சுனனின் வயது என்ன? (9TH NEW BOOK)
3. 5 வருடங்களுக்கு முன்பு ஒருவருடைய வயதானது அவருடைய மகனின் வயதைப் போல் 7 மடங்காகும் 5 வருடங்கள் கழித்து அவருடைய வயதானது மகனின் வயதைப் போல் 4 மடங்காக இருக்கும் எனில் அவர்களுடைய தற்போதைய வயது என்ன? (9TH NEW BOOK)
4. ஒரு வருடத்திற்கு முன்பு, ஒருவரின் வயது அவருடைய மகனின் வயதைப்போல் 8 மடங்கு. தற்போது அவருடைய வயது, மகனின் வயதின் வர்க்கத்திற்குச் சமம் எனில், அவர்களுடைய தற்போதைய வயதைக் காண்க. (10TH BOOK)
5. 2014 மற்றும் 2022-ல் ஒரு மகன் மற்றும் தந்தையின் வயது விகிதம் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010-ல் மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதல் யாது? (2014 VAO)
6. ராமின் வயது அவரது மகள் நந்தினியின் வயதை போல் 7 மடங்கு. 5 வருடங்களுக்குப் பிறகு ராமின் வயது மகளின் வயதை போல் 5 மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதுகள் என்ன? (2014 G4)
7. தாயின் வயதானது மகளின் வயதைக் காட்டிலும் 20 அதிகம். 4 வருடங்களுக்கு முன்பு தாயின் வயதானது மகளின் வயதைப் போல் 5 மடங்கு எனில், தற்போது மகளின் வயது(2016VAO)
8. 2015 மற்றும் 2023ல் ஒரு மகன் மற்றும் தந்தையின் வயது விகிதம் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010ல் மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதல் யாது? (2019 EO4)
9. அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பன்னிரண்டு ஆண்டுக்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப் போல மும்மடங்காக இருந்தது தற்போது தந்தையின் வயது (2018 G4)
10. தாயின் வயதிற்கும் அவரின் இரு மகள்களின் வயதின் கூடுதலுக்கும் உள்ள வித்தியாசம் 6 ஆணடுகள். இரு மகள்களின் சராசரி வயது 22 எனில் தாயின் வயதைக் காண்க.

------------------
  Day 19 Age Problems (வயது கணக்குகள்) (11 to 20) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து

3 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை