Type Here to Get Search Results !

தினம் தினம் திருக்குறள் 07

0

...............
பொதுவான குறிப்புகள்:

திருக்குறள் “அ”கரத்தில் தொடங்கி “ன”கரத்தில் முடிகிறது.

சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா போன்ற பல நூல்கள் திருக்குறளின் பெருமையை கூறுகின்றன.

திருக்குறளை முதலில் பதிப்பித்தவர் = மலயத்துவான் மகன் ஞானப்பிரகாசம் முதலில் பதிப்பித்து 1812-இல் தஞ்சையில் வெளியிட்டார்.

தை 2ம் நாள் = திருவள்ளுவர் தினம்

தமிழிற்கு “கதி” எனப்படுவது = க – கம்பராமாயணம், தி – திருக்குறள்

திருக்குறளில் 12000 சொற்கள் உள்ளன. இவற்றில் வட சொற்கள் ஐம்பதிற்கும் குறைவு. ஏறத்தாழ அவை 0.4% ஆகும்.

உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். நூற்றெழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’
இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.

விக்டோரியா மகாராணி, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.

உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரம்ளின் மாளிகையில் உள் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.

இங்கிலாந்து நாட்டுக் காட்சிச் சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ 
என்றும் ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே
என்றும் பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்