Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

தினம் தினம் திருக்குறள் 04 (திருக்குறளைப் பகுத்துக் காட்டும் பாடல்கள்)


திருக்குறளைப் பகுத்துக் காட்டும் பாடல்கள் 

வெள்ளி வீதியார்
        செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த        பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே – செய்யா        அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை        இதற்குரியர் அல்லாதார் இல்

மாங்குடி மருதனார்

        ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி        வேதப் பொருளாய் மிகவிளங்கித் – தீதற்றோர்        உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே        வள்ளுவர் வாய்மொழி மாண்பு

எறிச்சலூர் மலாடனார்

        பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே        தூய துறவறம்ஒன் றுஊழாக – ஆய        அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்        திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து

போத்தியார்

        அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து        உருவல் அரண்இரண்டு ஒன்றுஒண்கூழ் – இருவியல்        திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்று        எண்பொருள் ஏழாம் இவை

மோசிகீரனார்

        ஆண்பால் ஏழ்ஆ றிரண்டுபெண்பால் அடுத்தன்பு        பூண்பால் இருபால்ஓர் ஆறாக – மாண்பாய        காமத்தின் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார்        நாமத்தின் வள்ளுவனார் நன்கு

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

        ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்        மெய்யாய வேதப் பொருள்விளங்கப் – பொய்யாது        தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி        அந்தாமரை மேல் அயன்

மதுரைத் தமிழ்நாகனார்

        எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால்        இல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால்        பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்        சுரந்தபா வையத் துணை

பாரதம் பாடிய பெருந்தேவனார்

        எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்        செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் – முப்பாற்குப்        பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை        நேர்வனமற் றில்லை நிகர்

உருத்திர சன்மகண்ணர்

        மணற்கிளைக்க நீர்ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து        உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் – பிணக்குஇலா        வாய்மொழி வள்ளுவர் முப்பால்மதிப் புலவோர்க்கு        ஆய்தொறும் ஊறும் அறிவு



தினம் தினம் திருக்குறள் 03



கருத்துரையிடுக

0 கருத்துகள்