Type Here to Get Search Results !

UNIT 8 தமிழ் சமுதாய வரலாறு

3
சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ்          இலக்கிய வரலாறு.





1. கூன்பாண்டியனின் உண்மையான பெயர்
a) நெடுமாறன்
b) நெடுங்கிள்ளி
c) நெடுஞ்செழியன்
d) நெடுஞ்சடையன்
______ விடை : a) நெடுமாறன்



2. இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தாராசுரம் கோயிலின் கருவறைச் சுவற்றில் கீழ்க்காணும் எந்த இலக்கியத்தின் நிகழ்வுகள் குறுஞ்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ?
a) கம்பராமாயணம்
b) மகாபாரதம்
c) பெரியபுராணம்
d)கந்த புராணம்
______ விடை : b) மகாபாரதம்



3. கூற்று -: 'பொன்னிக்குக் கரை கண்ட பூபதி' என கரிகால் சோழன் சிறப்பிக்கப்படுகிறான்.
காரணம் (R): நீரை நெறிப்படுத்தும் வாய்க்கால்களால் இணைக்கப்பட்ட தலைசிறந்த கற்கட்டுமானமாகிய கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது.
a) (A) சரி ஆனால் (R) தவறு
b) (A) மற்றும் (R) இரண்டும் சரி. - மேலும் (R) என்பது (A) விற்குச் சரியான விளக்கமாகும்.
c) (A) மற்றும் (R) இரண்டும் தவறு.
d) (A) தவறு ஆனால் (R) சரி. -
______ விடை : b) (A) மற்றும் (R) இரண்டும் சரி. - மேலும் (R) என்பது (A) விற்குச் சரியான விளக்கமாகும்.



4. கீழடியின் கீறல்கள் / குறியீடுகள் பின்வரும் எந்த நாகரிகத்தோடு ஒப்புநோக்கக் கூடியவை?
a) சுமேரிய நாகரிகம்
b) நைல் நதி நாகரிகம்
c) சிந்து சமவெளி நாகரிகம்
d) மஞ்சள் நதி நாகரிகம்
______ விடை : b) நைல் நதி நாகரிகம்



5. சங்க காலத்தில் எவற்றைப் பகைவரிடமிருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டு உயிர் நீத்த வீரர்களுக்கு "நடுகற்கள்" நடப்பட்டன?
a) குதிரைகள்
b) ஆடை ஆபரணங்கள்
c) கால்நடைகள்
d) ஆயுதங்கள்
______ விடை : c) கால்நடைகள்



6. "1800 வருடங்களுக்கு முந்தைய தமிழர்கள்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
a) பாவாணர்
b) வி. கனகசபை
c) இராசநாயகம்
d) எஸ்.ஜே. குணசேகரம்
______ விடை : b) வி. கனகசபை



7. சங்க காலத்தில், எந்த இடத்தில் ரோமானிய நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது?
a) ஆதிச்சநல்லூர்
b) அரிக்கமேடு
c) கொற்கை
d) புகார்

______ விடை : b) அரிக்கமேடு





8. கீழ்வரும் அவைகளில் சங்க கால மன்னர்களுக்கு உதவியவைகள் யாவை?
a) சபா மற்றும் சமிதி
b) ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம்
c) அஷ்டதிக்கஜங்கள் மற்றும் அஷ்டபிரதான்
d) ஊர் மற்றும் மன்றம்
______ விடை : b) ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம்



9. சேரர்களின் அடையாள மாலை
a) அத்திப்பூ
b) பனம்பூ
c) வேப்பம்பூ
d) தும்பைப்பூ
______ விடை : b) பனம்பூ



10. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்படவில்லை ?
a) மர வளைய கணக்கீடு - ஏ.ஈ. டாங்ளஸ்
b) வார்வ் காலக் கணிப்பு - பேரன் கெரார் டீ கீர்
c) பனியுக வார்வ் வரிசை - டபிள்யூ எஃப் லிப்பி
d) கார்பன் 14 கரிப்பகுப்பாய்வு முறை - டபிள்யூ எஃப் லிப்பி

______ விடை : c) பனியுக வார்வ் வரிசை - டபிள்யூ எஃப் லிப்பி



11. தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சி குறித்த தகவல்களை எழுதியுள்ள ரோமானியர் யார்?
a) மெகஸ்தனிஸ்
b) ஸ்டிராபோ
c) பிளினி
d) அகஸ்டஸ்
______ விடை : b) ஸ்டிராபோ



அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள்


12. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?
புத்தகம் - ஆசிரியர்
a) பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
b) ஆலாபனை - அப்துல் ரஹ்மான்
c) அகல் விளக்கு - வரதராசனார்
d) ஜானகிராமன் - அப்பாவின் சினேகிதர்
______ விடை : c) அகல் விளக்கு - வரதராசனார்



13. கற்றறிந்த சான்றோர்களின் தலைவராக புறநானூறு யாரைக் குறிப்பிடுகிறது?
a) கூல வாணிகன் சாத்தனார்
b) மாமூலனார்
c) மாங்குடி மருதனார்
d) நப்பூதனார்
______ விடை : c) மாங்குடி மருதனார்



14. தேம்பாவணியின் ஆசிரியர் யார் ?
a) வீரமாமுனிவர்
b) இராபர்ட் -டி- நொபிலி
c) சீகன் பால்க்
d) ஜீ.யு. போப்
______ விடை : a) வீரமாமுனிவர்



15. "ரோமாபுரி ராணிகள் " என்ற நூலை வெளியிட்டவர் யார்?
a) சி. இராஜகோபாலாச்சாரி
b) சி.என். அண்ணாதுரை
c) மு. கருணாநிதி
d) எம்.ஜி. ராமச்சந்திரன்
______ விடை : b) சி.என். அண்ணாதுரை





16. “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” இந்த வரிகள் எந்த தமிழ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன?
a) திருக்குறள்
b) தொல்காப்பியம்
c) சிலப்பதிகாரம்
d) மணிமேகலை
______ விடை : b) தொல்காப்பியம்



17. 1912 - ஆம் ஆண்டு ‘பகவத்கீதை' யை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் யார்?
a) வெ. ராமலிங்கம்
b) வ.உ. சிதம்பரம்
c) பாரதியார்
d) சுப்ரமணிய சிவா
______ விடை : c) பாரதியார்



18. (i) தர்மம், அதர்மம், காமம், மோட்சம் என்ற நான்கு வகை பாகுபாட்டை இந்தியத் தத்துவங்கள் குறிப்பிடுகின்றன.
(ii) தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்கள் முதல் மூன்று வகைகளை மட்டுமே குறிப்பிடுகின்றன.
மேற்காணும் கூற்றுகளில் சரியானது/வை எது / எவை?
a) (i) மட்டும்
b) (ii) மட்டும்
c) (i) மற்றும் (ii)
d) மேற்கண்ட எவையும் அல்ல.
______ விடை : a) (i) மட்டும்



19. தொல்காப்பியத்தின் வழிநூலாக விளங்கும் இலக்கண நூல் எது?
a) திருக்குறள்
b) மூதுரை
c) நன்னூல்
d) நீதி வெண்பா
______ விடை : c) நன்னூல்





20. "யானை புக்க புலம் போல
தானும் உண்ணான்; உலகமும் கெடுமே" - எனும் புறநானூற்றுப் பாடல் உணர்த்தும் கருத்து
1) வரியை ஒழித்தல்
2) வரிக்குறைப்பு
3) வரி வசூலிக்கும் முறையை ஒழுங்குபடுத்துதல்
4) வரி ஏய்ப்பு
a) 1 மட்டும்
b) 2 மற்றும் 3 மட்டும்
c) 1 மற்றும் 2 மட்டும்
d) 3 மட்டும்
______ விடை : d) 3 மட்டும்



21. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" - எனத் தொடங்கும் புறநானூற்றுப்பாடலின் இரண்டாவது அடி எது?
a) தீதும் நன்றும் பிறர்தர வாரா
b) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
c) உண்பது நாழி உடுப்பன இரண்டே
d) துய்ப்போம் எனினே தப்புன பலவே
______ விடை : a) தீதும் நன்றும் பிறர்தர வாரா



22. இரண்டாவது உலக தமிழ் மாநாடு நடைபெற்ற போது தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தவர் யார்?
a) எம்.ஜி. ராமசந்திரன்
b) அண்ணாதுரை
c) பக்தவச்சலம்
d) எம். கருணாநிதி
______ விடை : b) அண்ணாதுரை



23. சங்ககால நூல்களில் ‘மதுரைக்காஞ்சி' எனும் நூலை எழுதியவர்
a) நக்கீரர்
b) மாங்குடி மருதனார்
c) இளந்திரையன்
d) நெடுங்கிள்ளி
______ விடை : b) மாங்குடி மருதனார்



24. மாதொருபாகன் என்ற தமிழ்நாவலின் ஆசிரியர் யார்?
a) சுந்தர இராமசாமி
b) ஜெயகாந்தன்
c) அசோகமித்ரன்
d) பெருமாள் முருகன்
______ விடை : d) பெருமாள் முருகன்



25. NEW TAMIL BOOK PAGE NUMBER 
______ விடை :




8. கீழ்வரும் அவைகளில் சங்க கால மன்னர்களுக்கு உதவியவைகள் யாவை? 
 a) சபா மற்றும் சமிதி
 b) ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம் 
 c) அஷ்டதிக்கஜங்கள் மற்றும் அஷ்டபிரதான்
 d) ஊர் மற்றும் மன்றம்


9.  சேரர்களின் அடையாள மாலை
a) அத்திப்பூ
b) பனம்பூ
c) வேப்பம்பூ
d) தும்பைப்பூ

•    சான்றாக ஆய் அண்டிரன் சுரபுன்னை மாலையையும், சேரர் பனம்பூ மாலையையும், சோழர் ஆத்திப்பூ மாலையையும் பாண்டியர் வேப்பம்பூ மாலையையும் அணிந்திருந்தனர். page no 80

16.  “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” இந்த வரிகள் எந்த தமிழ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன?
a) திருக்குறள்
b) தொல்காப்பியம்
c) சிலப்பதிகாரம்
d) மணிமேகலை

இலெமூரியாக் கண்டம் 
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் - தொல்காப்பியம்
•    இந்தியாவில் மிகப் பழைய பாறை அமைப்பைக் கொண்டுள்ள தென்னிந்தியா, புவியியல் வரலாற்றில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்த ஒரு நிலப்பரப்பாகும். page no 16

11. தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சி குறித்த தகவல்களை எழுதியுள்ள ரோமானியர் யார்?
a) மெகஸ்தனிஸ்
b) ஸ்டிராபோ
c) பிளினி
d) அகஸ்டஸ்
ரோம ஆசிரியர்களான ஸ்டிராபோ, பிளினி, தாலமி ஆகியோரின் நூல்களிலும் சங்க காலத் தமிழகத்தின் நகரங்கள், துறைமுகப்பட்டினங்கள் பற்றியும், அயல் நாட்டு வாணிபம் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன.  page no 10

7. சங்க காலத்தில், எந்த இடத்தில் ரோமானிய நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது?
a) ஆதிச்சநல்லூர்
b) அரிக்கமேடு
c) கொற்கை
d) புகார்

•    அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்த ரோமாபுரி நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன. page no 6

5. சங்க காலத்தில் எவற்றைப் பகைவரிடமிருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டு உயிர் நீத்த வீரர்களுக்கு "நடுகற்கள்" நடப்பட்டன?
a) குதிரைகள்
b) ஆடை ஆபரணங்கள்
c) கால்நடைகள்
d) ஆயுதங்கள்













கருத்துரையிடுக

3 கருத்துகள்
  1. நன்றி அண்ணா..ஜானகிராமன் - அப்பாவின் சினேகிதர்
    விடை : c) அகல் விளக்கு - வரதராசனார் சரியான பதில் ஜானகி ராமன் அதுதான் plz check...agalvilaku my varadharajan sarithan

    பதிலளிநீக்கு
  2. அண்ணா 4 வது கேள்விக்கு சரியான பதில் சிந்து சமவெளி நாகரிகம்

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham