27 ஜூன் 2020 - சனி தினசரி நடப்பு நிகழ்வுகள்

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்
1.சென்னையில் வரும் 21ம் தேதி நடைபெறும் மருத்துவ நிபுணர்களான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் முழுமையான பொது முடக்கத்தை அமல்படுத்துவது தொடர்பான முடிவு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.


2.தமிழகத்தில் களப்பணியில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் முழு முக கவசம், கையுறைகள் மாநில அரசு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.3.நீட் தேர்வை ஒத்தி வைப்பது குறித்து தேசிய தேர்வு முகமை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. கரோனா பாதிப்பு சற்று குறைந்த பிறகு நாடு முழுவதும் தேர்வை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


4.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த வியாபாரிகளின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூபாய் 20 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் வழங்கினார்.


5.கரோனா தோற்று பிரச்சனையால் வாராக்கடன் அதிகரித்து வருவதாக பொதுத்துறை, தனியார் வங்கிகள் தெரிவித்ததை அடுத்து ஒரு முறை கடன் மறு சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பான வழிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்து வருவதாக தெரிவிக்கிறது.


6.ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் அதிக அளவில் சேமிப்பு வைத்துள்ள வெளி நாடுகளின் பட்டியலில் இந்தியா 77 வது இடத்தில் உள்ளது.


7. அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய அமெரிக்கரான விஜய் சங்கரின் பெயரை பரிந்துரைக்க தீர்மானித்திருப்பதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.


8.பிரேசிலில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 700 கிலோமீட்டர் மின்னல் தான் உலகின் மிக நீளமான மின்னல் என்று ஐநாவின் வானியல் பிரிவு அறிவித்தது. மேலும் அர்ஜென்டினாவில் 16 வினாடிக்கு மேல் ஏற்பட்ட மின்னல் தான் உலகின் மிக அதிக நேரம் மின்னி சாதனை படைத்துள்ளதாக அந்த அமைப்பு கூறியது.


9.புதிய சிந்தனைத் தளத்தில் செயல்படும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் சீனாவின் முதலீடு கடந்த நான்கு ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளதாக குளோபல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.


10.இதுவரை இல்லாத வகையில் காவிரி டெல்டாவில் நிகழாண்டு 27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்று சாதனை புரிந்து உள்ளதாக தமிழக முதல்வர் பெருமிதம் தெரிவித்தார்.

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை