Type Here to Get Search Results !

26 ஜூன் 2020 - வெள்ளி தினசரி நடப்பு நிகழ்வுகள்

0
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்பட இருந்த மீதமுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


2.அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை வரும் 2021 டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என முதல்வர் கே.பழனிச்சாமி தெரிவித்தார்.



3.கோவை சக்தி குழுமத்தின் தலைமையில் மாணிக்கம் உருவாக்கிய மிராக்கிள் என்ற விட்டமின் சி சத்து கொண்ட ஊட்டச்சத்து பானம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் கரோனா பாதித்தவர்களுக்கு நல்ல பலன் கொடுப்பதக கூறப்படுகிறது.


4.ஐநா பொதுச் சபையால் தோற்றுவிக்கப்பட்டு உள்ள வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது.


5.பொது முடக்கத்தால் மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது அந்த அடிப்படையில் வளர்ந்து வரும் கல்வி பயிற்றுவிக்கும் முறையாக ஆன்லைன் வகுப்புகள் திகழ்ந்து வருவதாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


6.பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இதுவரை 35 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.


7.செயற்கைக்கோள், ராக்கெட் தயாரிப்பு மற்றும் ஏவுதல் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும். இது வர்த்தக ரீதியில் அமையும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.


8.நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் வரும் ஜூலை 5-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு சி-டெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


9.கரோனா நோய் தொற்றுக்கு எதிரான பொது முடக்கங்கள் தளர்த்தப்படுவதால் அமெரிக்கா, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அந்த நோய் பரவலின் இரண்டாவது அலை எழும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்தனர்.


10.ரஷ்ய அதிபரின் லாரி மேல் புதினின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க வகை செய்யும் சட்ட மசோதா மீதான பொது வாக்கெடுப்பு அந்நாட்டில் தொடங்கியது.


11.இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 2020-21 ஆம் பருவத்தில் 17.69 சதவீதம் அதிகரிக்கும் என சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பான இஸ்மா தெரிவித்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்