Type Here to Get Search Results !

உயிரியல் 1 – Biology last tnpsc set 10 questions 2019 to 2020

1
உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம் & மனித நோய்கள்  (16 questions)

1. ஆர்கனோபாஸ்பேட் விஷத்திற்கான எதிர்மருந்து
a) ப்ரிடின்
b) (BAL) பிரிட்டிஷ் ஆன்டி லூயிசைட்
c) ப்ரிடின் ஆல்டாக்ஸைம் மெதையோடைடு
d) அசிடைல் கொலன் எஸ்ட்டரேஸ்
______ விடை : c) ப்ரிடின் ஆல்டாக்ஸைம் மெதையோடைடு



2. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எந்த வைட்டமின் இனப்பெருக்க உறுப்பு செயல்பாட்டிற்கு தேவைப்படுகிறது.
a) வைட்டமின் A
b) வைட்டமின் B
c) வைட்டமின் D
d) வைட்டமின் E
______ விடை : d) வைட்டமின் E



3. 'காய கல்ப் விருது எந்த துறையுடன் தொடர்புடையது?
a) யோகா
b) விளையாட்டு
c) மருத்துவம்
d) கல்வி
______ விடை : c) மருத்துவம்



4. நிக்கோடின் ___________ வகையைச் சார்ந்த போதை மருந்து ஆகும்.
a) கிளர்வூட்டிகள்
b) போதை மருந்து
c) கஞ்சா
d) வலி நிவாரனிகள்

______ விடை : a) கிளர்வூட்டிகள்



5. கீழ்கண்டவற்றுள், டெங்கு வைரஸ் எந்த சுழற்சி முறையில் பரவுகிறது?
a) மனிதன் - மனிதன்
b) மனிதன் – பறவை - மனிதன்
c) மனிதன் – கொசு - மனிதன்
d) மனிதன் – பன்றி - மனிதன்
______ விடை : c) மனிதன் – கொசு - மனிதன்



6. பின்வருவனவற்றுள், குடிநீர் மற்றும் பால் மாசுபடுவதால் பரவக் கூடிய நோய் எது?
a) ஸ்கர்வி
b) மலேரியா
c) டெங்கு
d) டைபாய்டு
______ விடை : d) டைபாய்டு



7. 150வது, மகாத்மா காந்தியின் பிறந்த தினம், 2019 - ஆம் ஆண்டு கொண்டாடும் போது நாம் இந்தியா __________ அடைந்திருக்க வேண்டும் என்று நமது பிரதம மந்திரி கூறினார்.
a) "கழிவுகளில் இருந்து ஆற்றல்”
b) "ஆற்றல் கழிவுகளில் இருந்து”
c) “திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாநிலை”
d) "ஆற்றல் சூரிய வெப்பத்திலிருந்து"
______ விடை : c) “திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாநிலை”



8. எந்த நோயானது உமிழ்நீர் மற்றும் சுவாச நீர்த்துளிகளினால் பரவுகிறது ?
a) பொன்னுக்கு வீங்கி
b) தட்டம்மை
c) ஃப்ளு
d) சின்னம்மை
______ விடை : c) ஃப்ளு



9. கீழ்க்கண்டவற்றுள் பென்சிலியம் எந்த வகையைச் சார்ந்தது?
a) பாசிகள்
b) பூஞ்சை
c) ஒரு செல் உயிரி
d) பாக்டீரியா
______ விடை : b) பூஞ்சை



10. கீழ்க்கண்டவற்றுள் தொடக்க நிலையிலேயே டெங்குவினைக் கண்டறிய உதவும் எதிர்ப்பொருள் மற்றும் டெங்குவினை உண்டாக்கும் வைரஸ் எது?
a) Ig M மற்றும் பிளாவி வைரஸ்
b) Ig G மற்றும் பிளாவி வைரஸ்
c) Ig M மற்றும் டோகா வைரஸ்
d) Ig M மற்றும் ஆல்பா வைரஸ்
______ விடை : a) Ig M மற்றும் பிளாவி வைரஸ்



11. லெமன் கிராஸில் உள்ள வாந்தியை தடுக்கும் தேவையான எண்ணெய் பொருள் எது?
a) சிட்ரோநெல்லா
b) லிமோனின்
c) கேப்சைசின்
d) பெப்பரின்
______ விடை : a) சிட்ரோநெல்லா





12. கல்லீரல் சுருக்கம் நோய் கீழ்கண்டவற்றுள் எதனை தொடர்ந்து உட்கொள்வதால் ஏற்படுகிறது?
a) ஒப்பியம்
b) ஆல்கஹால்
c) புகையிலை
d) கோகனின்
______ விடை : b) ஆல்கஹால்



13. கீழ்காண்பவற்றில் எது “சூப்பர்மேன்" எனப்படும் மயக்கமூட்டும் மருந்து?
a) கோகெய்ன்
b) ஆம்ஃபிடமைன்
c) ஹெராயின்
d) ஆல்கஹால்
______ விடை : b) ஆம்ஃபிடமைன்



14. பொருத்துக .
(a) உணவு மற்றும் தண்ணீ ர் 1. பொருள் வழி கடத்துதல்
(b) கொசு மற்றும் ஈ 2. காற்று வழி கடத்துத
(c) துணி மற்றும் ஊசி 3. திட, திரவ சாதனம் வழி கடத்துதல்
(d) எச்சில் (அ) சளிதுளி மற்றும் தூசி 4. கடத்தி வழி கடத்துதல்
(a) (b) (c) (d)
a) 3 1 2 4
b) 3 4 2 1
c) 3 4 1 2
d) 4 3 1 2
______ விடை : c) 3 4 1 2



15. ஸ்ட்ரெப்டோமைசின்,________ க்கு எதிராக செயல்படுவது ஆகும்
a) கிராம் பாசிட்டிவ் பாக்டீரியா
b) கிராம் நெகட்டிவ் பாக்டீரியா
c) வைரஸ்கள்
d) பூஞ்சைகள்
______ விடை : b) கிராம் நெகட்டிவ் பாக்டீரியா


16. பேசில்லஸ் ஆந்த்ராஸிஸ் மனிதன் மற்றும் கால்நடைகளின் ______நோயை ஏற்படுத்துகிறது.
a) ஆந்த்ராக்ஸ்
b) ப்ளேக்
c) காலரா
d) டைபாய்டு
______ விடை : a) ஆந்த்ராக்ஸ்


சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல் (17 questions)


17. கீழுள்ளவற்றுள் பசுமை குடில் வாயு எது?
a) ஆக்ஸிஜன்
b) கார்பன்டை ஆக்ஸைடு
c) ஹைட்ரஜன்
d) நைட்ரஜன்
______ விடை : b) கார்பன்டை ஆக்ஸைடு





18. சுழ்நிலையியலில் தனி உயிரினம் அல்லது தொகுப்பு உயிரினம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
a) சைனி சூழ்நிலையியல்
b) ஆட்டோ சூழ்நிலையியல்
c) கேபிடேட் சூழ்நிலையியல்
d) பாபுலேஷன் சூழ்நிலையியல்
______ விடை : b) ஆட்டோ சூழ்நிலையியல்



19. ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக சர்வதேச நாளாக ஐக்கிய நாடுகள் அறிவிக்கப்பட்ட தினம்
a) செப்டம்பர் 16
b) நவம்பர் 16
c) ஜூன் 5
d) ஆகஸ்ட் 16
______ விடை : a) செப்டம்பர் 16



20. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான உணவுச் சங்கிலியை அடையாளம் காண்க:
a) புல், பாம்பு, யானை
b) புல், வெட்டுக்கிளி, தவளை
c) வெள்ளாடு, பசு, யானை
d) புல், புலி, பூனை
______ விடை : b) புல், வெட்டுக்கிளி, தவளை



21. ஈ.சி.சி.சி. என்றால் என்ன?
a) சுற்றுச்சூழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம்
b) யானைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மையம்
c) யானைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையம்
d) கிழக்கு மாவட்ட சமூக கல்லூரி
______ விடை : c) யானைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையம்



22. ஒரு உணவு சங்கிலியில் அடங்கி உள்ளவை
a) தயாரிப்பாளர் மற்றும் முதல் நிலை நுகர்வோர்
b) தயாரிப்பாளர், தாவர உண்ணி மற்றும் விலங்குண்ணி
c) தயாரிப்பாளர், நுகர்வோர் மற்றும் அழித்தல்
d) தயாரிப்பாளர், விலங்குண்ணி மற்றும் அழிப்பவர்
______ விடை : c) தயாரிப்பாளர், நுகர்வோர் மற்றும் அழித்தல்



23. விலங்குகளிடையே உணவு, தங்குமிடத்திற்கான போட்டி அதிகமாக இருப்பது, எப்பொழுது?
a) ஒரே இனத்தை சேர்ந்த விலங்குகள் ஒரே இடத்தில் வாழும் பொழுது
b) வேறுபட்ட இனங்களை சேர்ந்த விலங்குகள் ஒரே இடத்தில் வாழும் பொழுது
c) ஒரே இனத்தை சேர்ந்த விலங்குகள் வெவ்வேறு இடத்தில் வாழும் பொழுது
d) வேறுபட்ட இனங்களை சேர்ந்த விலங்குகள் வெவ்வேறு இடத்தில் வாழும் பொழுது
______ விடை : a) ஒரே இனத்தை சேர்ந்த விலங்குகள் ஒரே இடத்தில் வாழும் பொழுது



24. வெள்ளை யானை தேசம் என்று அழைக்கப்படும் நாடு எது?
a) மியான்மர்
b) வியட்நாம்
c) தாய்லாந்து
d) பிலிப்பைன்ஸ்
______ விடை : c) தாய்லாந்து



25. 'தி ஃபால் ஆஃப் எ ஸ்பார்ரோ' என்ற நூலை எழுதியவர்
a) வந்தனா ஷிவா
b) அருந்ததி ராய்
c) ஜிம் கார்பெட்
d) சலீம் அலி
______ விடை : d) சலீம் அலி



26. தாவர பல்வகைமை மிக அதிகமாக காணப்படுவது
a) வெப்ப மண்டல காடுகள்
b) மித வெப்ப மண்டல காடுகள்
c) பாலைவனங்கள்
d) விவசாய நிலங்கள்
______ விடை : a) வெப்ப மண்டல காடுகள்



27. உயிர் சமுதாயத்தில் கரிமப் பொருள்கள் ஒரு தொடர் வரிசையாக உயிரினங்களுக்கு கடத்தப்படுவது என்பது _________ என்று அழைக்கப்படுகிறது
a) சக்தி பிரமிடு
b) உணவு சங்கிலி
c) உணவு வலை
d) உணவூட்ட சுழற்சி
______ விடை : b) உணவு சங்கிலி



28. இந்திய தாவரங்களின் -பல்வகைமையை கருத்தில் கொள்ளும் போது, உலகத்தில் மற்றும் ஆசியாவில் _______ இடத்தில் உள்ளது
a) 10 மற்றும் 4
b) 9 மற்றும் 3
c) 11 மற்றும் 5
d) 12 மற்றும் 6
______ விடை : a) 10 மற்றும் 4





29. சிப்கோ ஆன்டோலேன் _________ உடன் தொடர்புடையது
a) மண் பாதுகாத்தல்
b) காடுகள் பாதுகாத்தல்
c) பயிர் பாதுகாத்தல்
d) நீர் பாதுகாத்தல்
______ விடை : b) காடுகள் பாதுகாத்தல்



30. கீழ்க்கண்டவைகளில் இயற்கையில் பாஸ்பரஸ் எங்கு அதிக அளவில் காணப்படுகிறது ?
a) வளிமண்டலம்
b) பாறை
c) கடல்
d) விலங்குகளின் உடல்
______ விடை : b) பாறை



31. BSI அறிக்கையின் படி இந்தியாவின் எந்த மாநிலத்தில் பூக்கும் தாவரங்கள் மிக அதிகமாக காணப்படுகிறது?
a) கேரளா
b) மஹாராஷ்ரா
c) தமிழ்நாடு
d) மேகலயா
______ விடை : c) தமிழ்நாடு



32. உயிரனப் பரவலில் அதிக சிறப்பிடம் நிறைந்த பகுதி
a) வெப்ப மண்டலக் காடுகள்
b) மலைகள் நிறைந்த பகுதி
c) வறண்ட புதர்ச்செடி நிலப்பரப்பு
d) ஈர நிலப்பகுதிகள்
______ விடை : d) ஈர நிலப்பகுதிகள்


33. உலக உயிரனப்பரவலுக்கு அச்சுறுத்தலாக இருப்பது ______ ஆகும்.
a) புயல் போன்ற இயற்கை பேரழிவு
b) இயற்கை வளங்களை மிகைச் சுரண்டல்
c) பிறப்பிட உயிரிக்கும் அயல் உயிரிக்குமிடையே ஏற்படும் போட்டி
d) வாழிடங்களை மாற்றம் செய்யும் மனிதனின் நடவடிக்கைகள்
______ விடை : d) வாழிடங்களை மாற்றம் செய்யும் மனிதனின் நடவடிக்கைகள்

நமது சுற்றுச்சூழல் Term 3 - 6th







சூழ்நிலை அறிவியல் 9th New School Book





சுற்றுச்சூழல் மேலாண்மை 10th New School Book
 


கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham