Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

உயிரியல் – Biology last tnpsc set 10 questions 2019 to 2020

1. உயிரியலின் முக்கிய கோட்பாடுகள் (5 questions)


1. பின்வருவனவற்றுள் உயிர்த்தோன்றலுக்கு மிக இன்றியமையாதது எது?
a) மாவுப் பொருட்கள்
b) புரதங்கள்
c) கொழுப்புப் பொருட்கள்
d) நியூக்ளிக் அமிலங்கள்
______ விடை : d) நியூக்ளிக் அமிலங்கள்



2. தக்கை கேம்பியத்தின் மறு பெயர் என்ன?
a) ஹிஸ்டோஜன்
b) டைலோஸஸ்
c) மார்பீன்கள்
d) பெல்லோஜன்
______ விடை : d) பெல்லோஜன்



3. பின்வருவனவற்றுள் தாவரங்களின் கார்போ-ஹைட்ரேட்டுகளின் சேமிப்புப் பொருளாகவும், உணவூட்டத்தில் ஆற்றலின் முதன்மை ஆதாரமாகவும் விளங்குவது எது?
a) குளுகோஸ்
b) செல்லுலோஸ்
c) தரசம்
d) ப்ரக்டோஸ்
______ விடை : c) தரசம்



4. மாலிஸ்ச் சோதனை _________ ஐ கண்டுபிடிக்க பயன்படுகிறது.
a) அமினோ அமிலம்
b) புரோட்டீன்
c) கார்போஹைட்ரேட்
d) நியூக்ளிக் அமிலம்
______ விடை : c) கார்போஹைட்ரேட்



5. உயிர் தொடர்புவியலில், செல்களுக்கு உள்ளேயான தகவல் தொடர்பு என்பது
a) செல்லிற்கு உள்ளேயும், செல்களுக்கு இடையேயும் ஏற்படுகிற தொடர்பாகும்
b) ஒரே மாதிரியான தாவரங்களிலும், வேறுபட்ட தாவரங்களுக்கு இடையே ஏற்படுகிற தொடர்பாகும்
c) பாக்டீரியங்களுக்கு இடையே காணப்படுகிற தொடர்பாகும்
d) நீரின் அழுத்தத்தினால் ஏற்படுகிற தொடர்பாகும்

______ விடை : a) செல்லிற்கு உள்ளேயும், செல்களுக்கு இடையேயும் ஏற்படுகிற தொடர்பாகும்


2. உயிர் உலகின் வகைப்பாடு (11 questions)


6. அனைத்து விலங்குகளிலும் சேமிக்கப்படும் விலங்கு ஸ்டார்ச்சானது
a) செல்லுலோஸ்
b) ஹெமிசெல்லுலோஸ்
c) எதிர்ப்பு ஸ்டார்ச்
d) கிளைகோஜென்
______ விடை : d) கிளைகோஜென்



7. எண்டோஸ்போர் உருவாக்கம் காணப்படுவது
a) பாசிகள்
b) பூஞ்சைகள்
c) பாக்டீரியாக்கள்
d) வைரஸ்கள்
______ விடை : c) பாக்டீரியாக்கள்



8. அந்தி மந்தாரை மலர் பகலில் மூடி இரவில் மலர்ந்து இருக்கும் நிகழ்விற்கு
a) ஒளிவளர்ச்சி
b) மேல் பக்க வளர்ச்சி
c) அடிப்பக்க வளர்ச்சி
d) இரவு வளர்ச்சி
______ விடை : a) ஒளிவளர்ச்சி



9. பின்வருவனவற்றுள் சில மரங்களில் காணப்படக்கூடிய ஒட்டும் தன்மையுள்ள, நீரில் கரையக்கூடிய கழிவுப் பொருள் எது?
a) கோந்து
b) கஃபீன்
c) டானின்கள்
d) இன்றியமையாத எண்ணெய்கள்
______ விடை : a) கோந்து



10. யூகேரியாட்டில் மிகப்பெரிய ஒருசெல் உயிரி என்பது
a) எண்டமீபா ஹிஸ்டோலைட்டிகா
b) அமீபா புரோட்டியஸ்
c) யூக்ளினா இனம்
d) பாரமீசியம் காடேட்டம்
______ விடை : b) அமீபா புரோட்டியஸ்



11. கூற்று [A] : நீரில் மிதக்கும் தாவரங்களான ஐக்கார்னியா (ஆகாய தாமரை) மற்றும் சால்வினியா நீர்நிலைகளில் அதிகரிப்பது அவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்
காரணம் [R] : இவைகள் மிகத்துரிதமாக நீரின் மேற்பரப்பு முழுவதும் பரவி நீரோட்டத்தை தடை செய்துவிடும்.
a) [A] தவறு [R) தவறு
b) [A] சரி [R] சரி
c) [A] சரி [R] தவறு
d) [A] தவறு [R) சரி
______ விடை : b) [A] சரி [R] சரி



12. பின்வரும் கற்பனையான சூழ்நிலை குறித்து சிந்திக்கவும்
(i) பூமியில் உள்ள தாவரக்குடும்பத்தின் அனைத்துத் தாவரங்களையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.
(ii) பூமியில் உள்ள விலங்குக் குடும்பத்தின் அனைத்து விலங்குகளையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.
பின்னர் (i) மற்றும் (ii) ஆகியவற்றின் எடைகளைத் தனித்தனியே கணக்கிடும் பொழுது :
a) (i) மற்றும் (ii) ஆகிய இரண்டும் ஒரே எடையினைக் கொண்டிருக்கும்.
b) (i) இன் எடை (ii) இன் எடையை விட அதிகமாக இருக்கும்.
c) (ii) இன் எடை (i) இன் எடையைவிட அதிகமாக இருக்கும்.
d) மேற்கண்ட எவையும் இல்லை.
______ விடை : d) மேற்கண்ட எவையும் இல்லை.



13. தாவர செல்களில் மட்டும் இருக்கும் நுண்ணுறுப்பு எது?
a) பெராக்ஸிசோம்
b) கிளையாக்ஸிசோம்
c) டெஸ்மோசோம்
d) ரைபோசோம்
______ விடை : b) கிளையாக்ஸிசோம்



14. அழியும் தருவாயிலுள்ள முதுகெலும்பிகள் அதிக எண்ணிக்கையில் எந்த தொகுதியில் காணப்படுகிறது?
a) மீன்கள் .
b) பாலூட்டிகள்
c) ஊர்வன்
d) பறப்பன
______ விடை : a) மீன்கள் .



15. தாவரத்தில் தொடு உணர்வால் நேரிடக் கூடிய அசைவானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) திக்மோடிராபிக் அசைவு
b) ஹைட்ரோடிராபிக் அசைவு
c) கீமோடிராபிக் அசைவு
d) ஏரோடிராபிக் அசைவு
______ விடை : a) திக்மோடிராபிக் அசைவு



16. சோயாபீனில் காணப்படும் பாலிபினாலிக் கூட்டுப் பொருள் எது?
a) ஆன்ட்ரோஜன்
b) ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்
c) லைசின்
d) வாலின்
______ விடை : b) ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்


பரிணாமம் & மரபியல் (2 questions)


17. டி.என்.ஏ. வரிக் குறியிடுதலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
a) ஸ்மித்
b) க்ரிஸ்பீல்ஸ்
c) பால் ஹெபர்ட்
d) கார்ட்னர்
______ விடை : c) பால் ஹெபர்ட்



18.ஒத்த தன்மை உடைய குரோமோசோம்களுக்கு இடையே ஜீன் மாற்றம் நடைபெறும் தொகுதி
a) ஸைக்கோடீன்
b) பேக்கைடீன்
c) டிப்ளோடீன்
d) டயாகைனெஸிஸ்
______ விடை : c) டிப்ளோடீன்

உடலியங்கியல் (8 questions) 
Blood and Blood Circulation & Endocrine system


19. இரத்தச் சிவப்பு அணுக்களின் வாழ்நாட்கள் எவ்வளவு?
a) 120 நாட்கள்
b) 220 நாட்கள்
c) 400 நாட்கள்
d) 320 நாட்கள்
______ விடை : a) 120 நாட்கள்



20. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனிக்க
1. இரத்தமானது நுரையிரலில் இருந்து இடது எட்ரியம் வழியாக சென்று இடது வென்டீரிக்ளை அடைந்து பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்கிறது.
2. உடலில் இருந்து பெறப்பட்ட இரத்தமானது வலது ஏட்ரியம் வழியாக சென்று வலது வென்டீரிக்களை அடைந்து பின்னர் நுரையீரலுக்கு செல்கிறது.
3. உடலில் இருந்து பெறப்பட்ட இரத்தமானது இடது ஏட்ரியம் வழியாக சென்று வலது வென்டீரிக்களை அடைந்து பின்னர் நுரையீரலுக்கு செல்கிறது.
மேல் கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
a) 1 மட்டும்
b) 1 மற்றும் 2
c) 2 மற்றும் 3
d) 1, 2 மற்றும் 3
______ விடை : b) 1 மற்றும் 2



21. பாலூட்டிகளில் இரத்த சிவப்பு செல்களில் உள்ள உட்கருவின் எண்ணிக்கை _______ ஆகும்.
a) 3
b) 2
c) 0
d) 1
______ விடை : c) 0



22. மனித இரத்த சிவப்பு அணுக்களில் போதுமான அளவு ___________ நொதி உள்ளது
a) கார்பானிக் கினேஸ்
b) கார்பானிக் அமிலேஸ்
c) கார்பானிக் லிகேஸ்
d) கார்பானிக் அன் ஹைட்ரேஸ்
______ விடை : d) கார்பானிக் அன் ஹைட்ரேஸ்



23. பின்வருவனவற்றுள் எதில் உட்கரு காணப்படுவதில்லை?
a) அண்டம்
b) விந்து
c) இரத்த சிவப்பணுக்கள்
d) இரத்த வெள்ளை அணுக்கள்
______ விடை : c) இரத்த சிவப்பணுக்கள்


24. நியூரோஹைப்போ பைசிஸ்சால் சுரக்கப்படும் ஹார்மோன்கள்
a) வாசோபிரசின் மற்றும் ஆக்ஸிடாசின்
b) எப்.எஸ்.எச். மற்றும் டி.எஸ்.எச்.
c) நியூரோஹார்மோன் மற்றும் டெரடோ ஹார்மோன்
d) ஏ.சி.டி.எச். மற்றும் சி.சி.டி.எச்.
______ விடை : a) வாசோபிரசின் மற்றும் ஆக்ஸிடாசின்



25. கீழ்க்காண்பவைகளில் வேதியியல் செய்திகளை அனுப்புனர்களாகக் கருதப்படுவது எது?
a) நொதிகள்
b) வைட்டமின்கள்
c) மினரல்கள்
d) ஹார்மோன்கள்
______ விடை : d) ஹார்மோன்கள்



26. அண்டவிடுப்பிற்குப்பின் நாளமில்லா பகுதியான அண்டகம் ________ என அழைக்கப்படுகிறது.
a) கார்பஸ் கலோசம்
b) கார்பஸ் லூட்டியம்
c) கார்பஸ் ஸ்பான்சியம்
d) கார்பஸ் அல்பிகன்ஸ்
______ விடை : b) கார்பஸ் லூட்டியம்

கருத்துரையிடுக

3 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham