Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

UNIT- 8 கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம் (பாகம்-3)

TNPSC GROUP 1, 2, 2A UNIT 8
1. கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட 17 பானை ஓடுகள் அவற்றிலுள்ள தனிமங்களைக் கண்டறியும் சோதனைக்காக எங்கு அனுப்பப்பட்டன?
______ விடை :  இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகம்



2.  எது சரி?
அ) கீழடியில் கிடைக்கப்பெற்ற பானை ஓடுகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில்     காணப்பட்டன.
ஆ) இந்த சிவப்பு நிறத்திற்கு இரும்பின் தாதுப்பொருளான ஹேமடைட்     பயன்படுத்தப்பட்டுள்ளது.
______ விடை : ஆ – சரி 



3. பானைகள் ....................... டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சுட்டு உருவாக்கினார்.
______ விடை : 1100 0 C



4. கீழடியில் கிடைக்கப்பெற்ற மட்பாண்டங்களின் தொழில்நுட்பம் முதலியவை ....................... நூற்றாண்டு முதல் ....................... நூற்றாண்டு வரை ஒரே மாதிரியாக இருந்தன.
______ விடை : கி.மு. 6 நூற். முதல் கி.மு. 2 நூற். வரை 



5. கீழடியில் சங்ககாலத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய தொழில்கள்
______ விடை : வேளாண்மை, கால்நடை வளர்ப்பு



6. எது சரி?
அ) கீழடி அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற விளையாட்டுப் பொருள்களில்     பெரும்பாலானவை பளிங்குக் கற்களால் ஆனவை.
ஆ)  மேலும் இவ்வகழ்வாய்வில் சதுரங்க விளையாட்டிற்கு பயன்படும் ஒரே அளவிலான 80 சதுரங்கக் காய்கள் கிடைத்துள்ளன.
______ விடை : இரண்டும் தவறு



7. ஆறுகளும், அவை கடலில் கலக்கும் இடங்களும் இனம் கண்டு பொருத்துக.
                                                        
 பட்டியல் I     பட்டியல் II           a      b      c      d
a. பாலாறு -  1. முசிறிப்பட்டினம் A.   3     2     4     1
b. காவேரி -  2. வசவ சமுத்திரம் B.   2     3     4     1
c. தாமிரபரணி - 3. பூம்புகார்     C.   4     3     2     1
d. பெரியாறு -  4. கொற்கை     D.   2     3     1     4
______ விடை : B




8.  எது சரி?
அ) மனித குலத்தின் மிகத் தொன்மையான கலை வடிவம் சுடுமண் உருவங்களாகும்.
ஆ) கீழடி அகழ்வாய்வுகளில் சுடுமண்ணாலான விலங்கு உருவங்கள், காதணிகள்     மற்றும் வழிபாடு தொடர்பான தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.
______ விடை :   அ – சரி  



9. கீழடி அகழ்வாய்வுப் பகுதிகளில் காணப்படும் அகேட் மற்றும் சூது பவளம் (கார்னீலியம்) போன்ற மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை வடமேற்கு இந்தியாவின் எப்பகுதியில் பரவலாகக் காணப்பட்டது?
______ விடை : மகாராஷ்டிரா, குஜராத் போன்ற பகுதிகள்



10.  எது சரி?
அ) பொதுவாக ரௌலட்டட் பானை ஓடுகள் ரோம் நாட்டு பானைகள் எனக்     கருதப்பட்டன.
ஆ)  இப்பானைகள் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் உரோம் நாட்டில் புழக்கத்திலிருந்த
பானைகளாகும்.
______ விடை : அ – சரி



11. கீழடியில் வெளிபடுத்தப்பட்டுள்ள செங்கல் கட்டுமானங்களில் செங்கல் இணைப்பிற்கு பயன்படுத்தியுள்ள பொருள்
______ விடை : சுண்ணாம்புச் சாந்து 



12. கீழடியின் நிலவியல் அமைப்பில் ....................... வடக்கு அட்சரேகையிலும், ................ கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது.
______ விடை :  90 51 18.385 ; 780 11 45.132



13. கீழடி அகழ்வாய்வுகளில் நூல்களை நூற்க பயன்படுத்தபட்ட பொருள்
______ விடை : தக்களி

கருத்துரையிடுக

0 கருத்துகள்