21 ஜூன் 2020 - ஞாயிறு தினசரி நடப்பு நிகழ்வுகள்

Share:


Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.பொது முடக்கத்தால் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்காக ரூபாய் 50 ஆயிரம் கோடியில் கிராமப்புற பொதுப்பணி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


2.இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகளில் சீன ராணுவம் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டினார்.3.தமிழக சிறைத் துறையின் பெயரை சிறைகள் மற்றும் சீர்திருத்த துறை என பெயர் மாற்றப்பட்டுள்ளது.


4. எல்லைப் பகுதிகளில் எவ்வித சூழலையும் எதிர்கொள்ள விமானப்படை தயாராக உள்ளதாக அப்படையின் தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதௌரியா தெரிவித்தார்.


5.கல்வான் பள்ளத்தாக்கு முழுவதற்கும் உரிமை கோரும் சீனாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு அப்பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்று உறுதிபடக் கூறியது.


6.சர்வதேச யோகா தினமான 21 ஆம் தேதி நடைபெற உள்ள சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் ஒரு கோடி மக்கள் இணைவார்கள் என மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் நம்பிக்கை தெரிவித்தார்.


7.இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிக்கு சீனப் படையினருடனான மோதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் அங்குஷ் தாக்குர் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெயராம் தாக்குர் தெரிவித்தார்.


8.உலகில் கரோனா நோய்த்தொற்று பரவல் மிகவும் அபாயகரமான இரண்டாவது கட்டத்துக்கு சென்று உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.


9.கரோனா பொது முடக்கம், டீசல் விலையேற்றம் ஆகிய காரணிகளால் 50 சதவீத லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொது முடக்கத்துக்கு பிறகு தற்போது லாரிகள் ஓரளவு இயங்கினாலும் மாதம் ரூபாய் 1500 கோடி இழப்பை அதன் உரிமையாளர்கள் சந்தித்து வருகின்றனர்.


10.தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 24 மணி நேரத்தில் 55,785 டன் நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை படைத்தது.


11.தமிழகத்தில் 30% மட்டுமே சூரிய கிரகணம் தெரியும் என்றும் இவற்றை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்றும் கொடைக்கானலில் உள்ள இந்திய வான் இயற்பியல் மையத்தின் விஞ்ஞானி செல்வேந்திரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை