Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

UNIT - 1 : இயக்கவிதிகள் 10-ஆம் வகுப்பு NEW அறிவியல் – Slip Test


பாடம் - 1 : இயக்கவிதிகள்
10-ஆம் வகுப்பு NEW அறிவியல் – Slip Test  (1 to 79)




1. மாறுபட்ட இணைவிசைகள் _______ திசையில் செயல்படுகின்றன. 

2. ராக்கெட் ஏவுதலில் நியூட்டனின் _______ விதி மற்றும் நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி ஆகியவை பயன்படுகிறது. 

3. ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் தாக்கத்தை _______ மூலம் அளவிடலாம். 

4. எடை ஓர் _______ அளவாகும். 

5. இயங்கியல் ______ பிரிவுகளை உள்ளடக்கியது. 

6. பொருளின் மீது விசையின் தாக்கம் இருக்கும் போது, தம் நிலை மாற்றத்தினை தவிர்க்க முயலும் தன்மை _______ எனப்படும். 

7. 100 கி.கி. நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் ______ அளவாக இருக்கும். 

8. விசையின் _______ ஆனது உந்தத்தால் அளவிடப்படுகிறது. 

9. புவியில்M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு. 

10. நியூட்டனின் _______ இயக்க விதி விசையின் எண்மதிப்பை அளவிட உதவுகிறது. 

11. _______ என்பது இழுத்தல் அல்லது தள்ளுதல் என்ற புறச்செயல் வடிவம் ஆகும். 
உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது 

12. விசை = 40 N , விசை செயல்படும் தூரம் = 90 cm எனில், விசையின் திருப்புத்திறன் _______ 

13. கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது.

14. சுழல்விளைவினை ஏற்படுத்தும் விசை ________ என்றழைக்கிறோம். 

15. அண்டத்தில் உள்ள விண்பொருட்களின் பரிமாணங்களை அளவிட ______ பயன்படுகிறது. 

16. மிகக்குறைந்த கால அளவில் மிக அதிக அளவு செயல்படும் விசை ______ எனப்படும். 

17. நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50%சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?

18. நியூட்டனின் முதல் இயக்க விதி விசையினை மட்டுமின்றி, பொருள்களின் ________ விளக்குகிறது. 

19. உந்த அழிவின்மை விதியின் படி, நிறை குறையக் குறைய அதன் ______ படிப்படியாக அதிகரிக்கின்றது. 

20.புவியீர்ப்பு முடுக்கம் ____ என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.  

21. புவியின் ஆரம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் ______ இருக்கும். 

22.கணத்தாக்கு என்பது ________ மாறுபாட்டிற்கு சமமான அளவாகும். 

23. நேர்க்கோட்டு உந்தம் P = ______ ஆகும். 

24. புவிஈா்ப்பு முடுக்கம் 'g' ன் அலகு ms- ² ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும். 

25. மரபு ரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் ______ குறியில் குறிக்கப்படுகிறது. 

26. பொருளின் இயக்கத்தையும் அதற்குக் காரணமாக விசையையும் விளக்குவது ________  

27. நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியிர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு _____ இருக்கும். 

28. மகிழுந்தின் வேகத்தினை மாற்ற ______ பயன்படுகிறது. 

29. தரைப்பகுதியிலிருந்து உயரே செல்லச் செல்ல புவியீர்ப்பு முடுக்கம் படிப்படியாக __________ 

30. g யின் மதிப்பு _____ யில் அனைத்து இடங்களிலும் ஒரே மதிப்பாய் இருக்காது. 

31. விசையின் செயல்பாட்டால் ஓய்வு நிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியல் ______ ஆகும். 

32. விசையின் செயல்பாட்டால் ஓய்வு நிலையில் உள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியல் _________ ஆகும். 

33. பொருட்களின் சுழற்சி வலஞ்சுழியாக இருப்பின் திருப்புத்திறனின் திசை ______ ஆகக் கொள்ளப்படுகிறது.  எதிர்க்குறி

34. மரபு ரீதியாக இடஞ்சுழித் திருப்புத்திறன் _______ குறியில் குறிக்கப்படுகிறது. 

35. விசையின் SI அலகு ______ 

36. விசையின் சுழற்ச்சி விளைவு கீ்ழகாணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது. 

37. மிக வலுவான மகிழுந்து மற்றும் பார உந்துக்களின் சக்கரங்களின் திசையினை குறைவான _______ கொண்டு எளிதில் மாற்ற திருப்புச்சக்கரம் உதவுகிறது. 

38. F1 x d1 = F2 x d2 _____ தத்துவம் ஆகும். 

39. இரு சமமான இணை விசைகள் ஒரே நேரத்தில் ஒரு பொருளின் இருவேறு புள்ளிகளின் மீது எதிரெதிர் திசையில் செயல்பட்டால் அவை _______ என்றழைக்கப்படும். 

40. இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு _____ தேவை. 

41. நீளம் தாண்டுதல் போட்டியில் உள்ள போட்டியாளர் நீண்ட தூரம் தாண்டுவதற்காக, தாம் தாண்டும் முன் சிறிது தூரம் ஓடுவதற்குக் காரணம் _______ 

42. புற விசை ஏதும் தாக்காத வரையில் ஒரு பொருள் அல்லது ஓர் அமைப்பின் மீது செயல்படும் மொத்த ______ மாறாமல் இருக்கும். 

43. விசையின் திருப்புத்திறனின் SI அலகு ______ ஆகும். 

44. தொகுபயன் விசையின் மதிப்பு சுழி எனில், பொருள் சமநிலையில் உள்ளதென அறியலாம். இவ்விசைகள் _______ விசைகள் எனப்படும். 

45. விசையின் செயல்பாட்டால் இயக்க நிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியல் ______ ஆகும். 

46. ராக்கெட் ஏவுதலில் _________விதிகள் பயன்படுத்தப்படுகிறது 

47. ராக்கெட் ஏவுதலில் பயன்படும் நியூட்டனின் விதி _____

48. இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன் ______ எனப்படும்.

49. சமநிலையில் உள்ள போது ஒரு புள்ளியின் மீது செயல்படும் அனைத்து விசைகளின் திருப்புத்திறன்களின் கூடுதல் ________ சமமாகும். 

50. பொருட்களின் சுழற்சி இடஞ்சுழியாக இருப்பின் திருப்புத்திறனின் திசை ______ ஆகக் கொள்ளப்படுகிறது. 

51. திருப்புத்திறனின் SI அலகு _______

52. நிலவில் புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு ______ (மீ வி2) ஆகும். 

53. உந்தத்தின் திசையானது பொருளின் ________ திசையிலேயே அமையும்.

54. புவியின் ஆரம் துருவப் பகுதியில் _____ இருக்கும். 

55. ________ யின் மதிப்பு செயல்படும் அனைத்து விசைகளின் வெக்டார் கூடுதலுக்குச் சமமாகும். 

56. இயற்கையான இயக்கம் ______ எனவும் அழைக்கப்படுகிறது. 

57. நியூட்டனின் ______ விதி புதிய விண்மீன்கள் மற்றும் கோள்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது. 

58. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் திடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன்னோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு ______ மூலம் விளக்கப்படுகின்றது. 

59. தடையில்லாமல் தானே விழும் நிலையில் பொருளின் எடை முற்றிலும் குறைந்து ______ நிலைக்கு வருகிறது. 

60. இயங்குகின்ற பொருள்கள் யாவும் தாமாகவே இயற்கையான தத்தமது ஓய்வு நிலைக்கு கொண்டு வர புற விசை தேவைப்படும் எனில், அவ்வகை இயக்கத்தினை ________ எனலாம். 

61. விசையின் CGS அலகு _______ ஆகும். 

62. நெம்புகோலில் செயல்படும் விசை ______விசைக்கு எடுத்துக்காட்டாகும். 

63. கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது. 

64. உருண்டோடும் தொடர் வண்டியில் ______ தோன்றுகிறது. 

65. துருவப் பகுதியில் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு _____ இருக்கும். 

66. கணத்தாக்கு கீழ்கணடவற்றுள் எதற்குச் சமமானது 

67. ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ராக்கெட்டானது புவியின் ஈர்ப்பு விசையினைத் தவிர்த்து விட்டுச் செல்லும் வகையில், அதன் திசைவேக மதிப்பு உச்சத்தை அடைகிறது. இது ______ எனப்படுகிறது. 

68. புவியின் மையத்தில் புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு ______ ஆகும். 

69. ஒரு கிலோகிராம் எடை என்பது ________ற்கு சமமாகும்.

70. ______ என்பது இழுத்தல் (அ) தள்ளுதல் என்ற புறச்செயல் வடிவம் ஆகும். 

71. விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றிப் பயிலும் அறிவியல் பாடம் ______ ஆகும். 

72. விசையின் திருப்புத்திறன் ஒரு _______ அளவாகும்.

73.புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு ______ (மீ வி^-1) ஆகும். 

74. நிலைமத்தின் வகைகள் ______ 

75. இயங்குகின்ற பொருள்கள் யாவும் தாமாகவே இயற்கையாகத் தமது ஓய்வு நிலைக்கு வந்து சேரும் என _______ கூறினார். 

76. ராக்கெட் உயரப் பயணிக்கும் போது அதில் உள்ள ______ முழுவதும் எரியும் வரை அதன் நிறை படிப்படியாகக் குறைகிறது. 


77. இயந்திரவியல் ________ பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

78. கணத்தாக்கு ____ என்று குறிப்பிடப்படுகிறது. 







கருத்துரையிடுக

4 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham