Type Here to Get Search Results !

Time & work நேர் மாறல் எதிர் மாறல்

6



Time & work நேர் மாறல் எதிர் மாறல் 


இதுபோல Questions படிக்கும் போதே Answer போடலாம்!

1. 9 சிலந்திகள் 9 வலையை 9 நாட்களில் பின்னுகின்றது எனில் 1 சிலந்திகள் 1 வலையை எத்தனை நாட்களில் பின்னும் (26.02.2020) 
a. 1 நாட்கள் 
 b. 9 நாட்கள் 
 c. 18 நாட்கள் 
 d. 19 நாட்கள்
... b. 9 நாட்கள்




2. 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கிறார்கள் அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார் (14.01.2020) 
a. 25 நாட்கள் 
b. 28 நாட்கள் 
c. 20 நாட்கள்
d. 45 நாட்கள்
... b. 28 நாட்கள்




3. 6 ஆட்கள் ஒரு வேலையை 50 நாட்களில் முடிப்பார்கள் எனில் 10 ஆட்கள் எத்தனை நாட்களில் அந்த வேலையை முடிப்பார்கள்? (24.03.2019) 
a. 35 
b. 45 
c. 30 
d. 40
... c. 30



4. 12 ஆட்கள் 6 நாட்களில் 96 மீட்டர் நீளமுள்ள சுவரைக் கட்டி முடித்தால், 15 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு நீள சுவரைக் கட்டி முடிப்பார்கள்? (17.02.2020) 
a. 72m 
b. 90m 
c. 86m 
d. 60m
... d. 60m




5. 15 தொழிலாளர்களுக்கு 6 நாட்களுக்கான கூலி ரூபாய் 7200 எனில் 23 தொழிலாளர்களுக்கு 5 நாட்களுக்கு கூலி எவ்வளவு ? (17.02.2019) 
a. 6200 
b. 7200 
c. 8200 
d. 9200
... d. 9200




6. 8 பேர் ஒரு வேலையை 24 நாட்களில் முடித்தால் அதை அதே வேலையை 24 பேர் ______ நாட்களில் முடிப்பார் ? (27.01.2019) 
a. 8  
b. 16 
c. 12 
d. 24
... a. 8




7. 3 பேர் 168 மேலாடைகளை 14 நாட்களில் நெய்கிறார்கள். எனில் 8 பேர் 5 நாட்களில் எத்தனை மேலாடைகளை நெய்வார்கள் (03.02.2019)
a. 90 
b. 105
c. 126 
d. 160
... d. 160




8. 6 பேர் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் செய்து ஒருவாரத்திற்குள் ரூபாய் 8400 சம்பாதிக்கிறார்கள் எனில் 9 பேர் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்து ஒரு வாரத்திற்கு எவ்வளவு சம்பாதிப்பார்கள் (23.12.2018) 
a. 8400 
b. 9450 
c. 16200 
d. 16800
... b. 9450




9. 7 ஆண்கள் ஒரு வேலையை 52 நாட்களில் முடிப்பார்கள் எனில் 13 ஆண்கள் அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள் (17.08.2018) 
a. 26 
b. 27 
c. 28 
d. 29
... c. 28




10. 6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்ய வேலை செய்து 24 நாட்களில் முடிப்பார்கள் 9 ஆண்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் வேலையை முடிப்பார்கள் (2018 G2) 
a. 10 
b. 15 
c. 20 
d. 25
... c. 20




11. 8 ஆண்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேலை செய்து. ஒரு வேலையை 28 நாட்களில் முடிப்பார்கள் அதே வேலையை 12 ஆட்கள் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்கள் (2012 TET) 
a. 20 
b. 18 
c. 24 
d. 28
... c. 24

கருத்துரையிடுக

6 கருத்துகள்
  1. அண்ணா என் பெயர் ரேகா.
    2016 வினா எண் 200
    22ஆட்கள் 10 நாட்களில் 110மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால்,30ஆட்கள் 6நாட்களில் கட்டி முடிக்கும் சுவரின் நீளம்?

    பதிலளிநீக்கு
  2. அண்ணா என் பெயர் குணால்:

    இரு ஆண்கள் மற்றும் 3 மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையை 10 நாட்கள் செய்கின்றனர். அதே வேலையை 3 ஆண்கள் மற்றும் 2 மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையை 8 நாட்கள் செய்கின்றனர். ஆகையால், 2 ஆண்கள் ஒரு சேர்ந்தால் அவ்வேலையினை முடிக்க ஆகும் நாட்களைக் காண்க.

    பதிலளிநீக்கு
  3. 12 manithargalum 16 manavargalum seirthu 5 naakali mudikirargal .13 manithargal ,24 manavargal seirthu seiyum velaiyeen vikitham (05/09/2019)
    A .2:1,B.3:1,c.3:2,D .5:4

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham