Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

வருவாய் ஆதாரங்கள்(8Q), நிதி கொள்கை (5Q), நிதி ஆணையம் (7Q). சரக்கு மற்றும் சேவை வரி (3Q)

வருவாய் ஆதாரங்கள்(8Q)
இந்திய ரிசர்வ் வங்கி

1. இந்தியா - தசம நாணய முறைக்கு மாறிய காலம் _________
______ விடை : ஏப்ரல், 1957



2. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னர் யார்?
______ விடை : சர். ஆஸ்போன் ஸ்மித்



3. கீழ்க்கண்ட பணிகளில் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் பணி /கள் எது/யாவை?
1. பணத்தை வெளியிடுதல்
2. மாற்றுவீதத்தை கட்டுப்படுத்துதல்
3. பணத்தின் நடுநிலைமை
4. வணிக வங்கிகளைக் கட்டுப்படுத்துதல்
______ விடை : 1, 2 மற்றும் 4 மட்டும்



4. பணக் கொள்கையின் கருவிகள்
I. வங்கி விகிதம்
II. வரி விகிதம்
III. ரொக்க இருப்பு விகிதம்
______ விடை : I மற்றும் III மட்டும் சரி



5. அதிகாரபூர்வமான அன்னிய செலாவணி மாற்று வீதத்தை அறிவிக்கும் அதிகாரம் உள்ள வங்கி எது?
______ விடை : இந்திய ரிசர்வ் வங்கி



6. இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
______ விடை : 1 ஜனவரி 1949



7. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பணத்தின் முதன்மையான பணி ஆகும்?
______ விடை : மதிப்பினை அளவிடும் அளவுகோல்



8. பொதுத்துறை வங்கிகளின் லாபகரத்தை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு
______ விடை :  நரசிம்மம் குழு


நிதி கொள்கை (5Q), 
பணவியல் கொள்கை


9. கீழ்கண்டவாறு இந்திய அரசாங்கத்தின் செலவினங்கள் வகுக்கப்படுகின்றன
______ விடை : திட்டம் மற்றும் திட்டமில்லா செலவு



10. நிதி தேவைக்காக மக்களவையில் ஆண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தி பொது நிதியிலிருந்து அனைத்து செலவுகளையும் செய்வது
______ விடை : அரசியலமைப்பு 113 வது பிரிவு



11. பின்வருவனவற்றுள் எது நிதிக்கொள்கையின் கீழ் வரும்?
______ விடை : அரசின் செலவு



12. இராணுவம் மற்றும் பொதுக் கடனுக்கான வட்டி செலுத்துதல் ________ ஆகும்
______ விடை : வளர்ச்சியற்றச் செலவு



13. உலக வங்கியின் உலக வளர்ச்சி ஆய்வறிக்கை (2010) ____ அடிப்படையில் பல்வேறு நாடுகளை வகைப்படுத்தியுள்ளது.
______ விடை : GNI - மொத்த தேசிய வருமானம்


நிதி ஆணையம் (7Q)

14. இந்தியாவின் நிதி குழு தலைவரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
______ விடை : இந்திய குடியரசு தலைவர்



15. இந்தியாவின் பதினைந்தாவது நிதிக் குழுவின் தலைவர்
______ விடை :  என்.கே. சிங்



16. கீழே கொடுக்கப்பட்ட ஆண்டில் அனைத்து வரி வருவாயும் மையம் மற்றும் மாநிலங்களிடையே பகிரக்கூடியதாகி விட்டது
______ விடை : 2000 AD



17. பின்வருவனவற்றுள் எது இந்திய மாநிலங்களுக்கான வரி வருவாய்?
______ விடை : நில வருவாய்



18. 14 - வது நிதிக்குழுவின் தலைவர் யார்?
______ விடை : ஒய்.வி. ரெட்டி



19. கீழ்க்கண்டவர்களில், எவர் இந்திய நிதி ஆணையத்தின் தலைவராக இருந்ததில்லை
a) பிராணாப் முகர்ஜி
b) மஹாவீர் தியாகி
c) சி. ரங்கராஜன்
d) பிரம்மானந் ரெட்டி
______ விடை : a) பிராணாப் முகர்ஜி



20. பத்தாம் நிதிக் குழுவின் தலைவர் யார்?
______ விடை : KC. பந்த்



சரக்கு மற்றும் சேவை வரி (3Q)

21. இந்தியாவில் முன்மொழியப்பட்ட சேவை வரிச் சட்ட ஏற்பாடுகளுக்கு பின்வரும் அறிக்கைகளில் இது உண்மை .
I. மைய மற்றும் மாநில வரிகள் இரண்டும் விற்பனை நேரத்தில் சேகரிக்கப்படும்.
II. உற்பத்தி செலவில் மைய மற்றும் மாநில பொருட்கள் மற்றும் சேவை வரி மாற்றப்படும்.
மேற்கண்டவற்றில் எந்த அறிக்கை உண்மை என கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து பதில் தரவும்.
______ விடை : I மற்றும் II மட்டும் உண்மை



22. கீழே காணப்படும் பொருள்களில், பொருள்கள் மற்றும் சேவைகள் வரியிலிருந்து தவிர்க்கப்பட்ட இரண்டு பொருட்கள் எவை?
(1) பெட்ரோலியம்
(2) பருத்தி
(3) எஃகு
(4) புகையிலை
______ விடை :  (1) மற்றும் (4) மட்டும்



23. கீழ்கண்டவற்றுள் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்பதன் பொருள் யாவை?
(1) இது மறைமுக வரியின் தொகுப்பாகும்
(2) ஒரே மாதிரியான தனி வரியாகும்
(3) மத்திய அரசால் மட்டுமே விதிக்கப்படுவதாகும்
(4) நுகர்வு இறுதிப் புள்ளியில் செலுத்துவதாகும்
______ விடை :  (1), (2) மற்றும் (4) மட்டும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்