Type Here to Get Search Results !

24 ஜூன் 2020 - புதன் தினசரி நடப்பு நிகழ்வுகள்

0
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.இந்திய சீன ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கிழக்கு லடாக் எல்லைப்பகுதிகளில் பிரச்சினைக்குரிய இடங்களில் இருந்து படைகளை படிப்படியாக விலக்கிக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.


2.இந்த ஆண்டு இதுவரை ஹச்1பி விசா வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இது தொடர்பான பிரகடனத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இவை ஜூன் 24 முதல் நடைமுறைக்கு வருகிறது.


3.நாமக்கலில் உயிரி எரிவாயு உற்பத்தி ஆலையை முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.


4.கரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு இந்திய முஸ்லிம்களை ஹஜ் பயணத்துக்கு சவுதி அரேபிய அனுப்ப வேண்டாம் என அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எனவே இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செல்ல முடியாது என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.


5.கரோனா தொற்றுநோய் ஏழைகளுக்கு உதவிட இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. பி.எம் கேர்ஸ் நிதியம் மூலமாக முதல்கட்டமாக 2923 செயற்கை சுவாச கருவிகள் தயாரிக்கப்பட்டு 1340 செயற்கை சுவாச கருவிகள் விநியோகிக்கப்பட உள்ளது என்று பிரதமர் அலுவலகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


6. நிகழ் பயிர் ஆண்டில் தேங்காய் காண குறைந்தபட்ச ஆதரவு விலை 5.02 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு குவிண்டால் தேங்காய் காண குறைந்தபட்ச ஆதரவு விலை ரூபாய் 2,700 ஆக நிர்ணயிக்கப்பட்டது.


7.வந்தே பாரத திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்கள் அமெரிக்காவுக்கு இயக்குவதை முறைப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜூலை 22ஆம் தேதிக்கு பிறகு இயக்கப்படும் சிறப்பு விமானங்களுக்கு முறையான முன் அனுமதி பெற வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்தது.


8.பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 17வது நாளாக உயர்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 20 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 55 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.


9.சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் கரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை வராமல் தவிர்க்க முடியும் என்று லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்தது.


10.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அறுபடைவீடு ஊராட்சி அரசமரம் கிராமத்தில் கிபி 14ஆம் நூற்றாண்டைய நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்