Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Unit 8 கீழடிslip test 1

கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்(பாகம்-1)
TNPSC CCSE -I, II (Gr.II/IIA)  (Based on New Syllabus)

1. தொல்லியல் என்பது என்ன?
______ விடை : தொல்லியல் என்பது அகழ்வாய்வு மட்டுமின்றி இலக்கியங்கள், கல்வெட்டுகள், காசுகள் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட மூலப் பொருள்களையும் ஆய்வு செய்வதாகும்.



2. தொல்லியல் ஆய்வின் முதன்மைப் பணி யாது?
______ விடை : அகழ்வாய்வு



3.  இந்தியத் தொல்லியலின் தந்தை யார்?
______ விடை : அலெக்சாண்டர் கன்னிங்காம்



4. தமிழகத் தொல்லியல் துறை இதுவரை அகழ்வாய்வுகள் மேற்கொண்டுள்ள இடங்கள்
______ விடை : 40



5. வைகை ஆற்றின் பிறப்பிடம் எது?
______ விடை : சுருளி மலை



6. வைகை ஆற்றின் கிளை ஆறு எது?
______ விடை : சுருளி ஆறு



7. வைகை ஆறு முதலில் சந்திக்கும் ஊர் எது?
______ விடை : சின்னமனூர்



8. வைகை ஆறு இறுதியில் எந்த இடத்தினருகே சென்று வங்கக்கடலில் கலக்கிறது?
______ விடை : அழகன்குளம் (சங்க கால பாண்டிய துறைமுகப்பட்டினம்)



9. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் எத்தனை செய்யுள்கள் வைகை ஆற்றின் பெருமைகளை எடுத்துரைக்கின்றன?
______ விடை : எட்டு



10. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படும் நகரம் எது?
______ விடை : மதுரை



11. சந்திர குப்த மௌரியர் அரசவைக்கு வந்த கிரேக்க நாட்டு அரசத் தூதுவர் யார்?
______ விடை : மெகஸ்தனீஸ்



12. மெகஸ்தனீஸ் எந்த கிரேக்க நாட்டு மன்னனின் அரசவையில் அரசத் தூதுவராக இருந்தார்?
______ விடை : செலுக்கஸ் நிகேதர்



13. ரோமாபுரியில் அகஸ்டஸ் பேரரசுக்குப் பாண்டிய மன்னன் தூதுவர் ஒருவரை அனுப்பிய செய்தியினை தன் நூற்குறிப்பில் குறிப்பிட்டுள்ள ரோமானிய பயணி
______ விடை : ஸ்டிரோபா



14. கௌடில்யர் தனது அர்த்தசாஸ்திரம் எனும் நூலில் பாண்டிய நாட்டின் எவ்வளத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்?
______ விடை : முத்துகள், மஸ்லின் எனப்படும் ஆடை



15. பாண்டிய அரசைப் பற்றி தனது நூலில் குறிப்பிட்டுள்ள வானியல் அறிஞர் யார்? எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?
______ விடை : வராகமிகிரர்; நூல் – பிருகத்சம்கிதை



16. கவிஞர் காளிதாசர் எந்தப் பாண்டிய மன்னன் பற்றித் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்?
______ விடை : மன்னன் ரகு



17. அசோகரின் எந்தக் கல்வெட்டுகள் தென்னகத்தில் சோழ, பாண்டிய, சத்யபுத்ர மற்றும் கேரளபுத்ர அரசுகள் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளன?
______ விடை : 2 மற்றும் 13-ஆம் பாறை கல்வெட்டுகள்



18.தமிழிக் கல்வெட்டுகளில் எந்த மன்னன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன?
______ விடை : மதுரை பாண்டியன் நெடுஞ்செழியன்



19. தென்னிந்தியாவில் முதன்முதலில் எங்கு, யார் தலைமையில் சமணம் பரவியதாகக் கூறப்படுகிறது?
______ விடை : சரவணபெலகோலா (கருநாடகம்); தலைமை – பத்ரபாகு



20.  பாறைகளைக் குடைந்து படுக்கைகள் அமைக்கப்பட்ட எத்தனை குகைகள் மதுரையைச் சுற்றிக் காணப்படுகின்றன?
______ விடை : 14



21.மதுரையில் சமணப்படுக்கைகள் காணப்படும் மலைக்குகை பகுதிகளில் எந்த காலக்கட்டத்தினைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன?
______ விடை : கி.மு. 500 முதல் கி.பி. 300 



22.தமிழிக் கல்வெட்டுகளுள் பழமையான ஐந்து கல்வெட்டுகள் உள்ள இடம் எது?
______ விடை : மாங்குளம் (மதுரை)



23. மதுரைக்கு அருகேயுள்ள ஆவியூர் என்ற ஊரில் பழங்கற்காலக்கருவி ஒன்றைக் கண்டுபிடித்தவர் யார்?
______ விடை : இராபர்ட் புருஸ்புட்



24. திண்டுக்கல் மாவட்டம் தாதகப்பட்டி மற்றும் புலிமான்கோம்பை ஆகிய ஊர்களில் யார் தலைமையில், எந்த ஆண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டன?
______ விடை : முனைவர் கே.ராஜன்; 2006



25. 1987-ஆம் ஆண்டு வைகை நதிக்கரையில் நடைபெற்ற கள ஆய்வில் எது கண்டறியப்பட்டது?
______ விடை : இரும்பு உருக்கும் தொழிற்கூடப்பகுதி; இடம் – உத்தமபாளையம் வட்டம் எல்லப்பட்டி ஊர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்